Home
News

செம்ம அப்டேட்.. பல வருடங்களாக WhatsApp-ல் இருந்த ஒரு குறை.. ஒருவழியாக தீர்ந்தது.. இனி அந்த தொல்லை இல்லை!

அறிமுகமான நாளில் இருந்து வாட்ஸ்அப்பில் (WhatsApp) இருந்த ஒரு பெரிய குறை, தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பிற்கு கிடைத்த லேட்டஸ்ட் அப்டேட் (Latest Update) வழியாக போட்டோ ஷேரிங் (Photo Sharing) அம்சத்தில் மிகவும் முக்கியமான மேம்பாடு (Upgrade) ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.

டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ (WABetaInfo) வழியாக கிடைத்த சமீபத்திய அறிக்கையின்படி, வாட்ஸ்அப்பில் ஹை குவாலிட்டி புகைப்படங்களை (High Quality Photos) அனுப்புவதற்கான ஆதரவு (Support) சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது இனிமேல் நீங்கள் ஒரு போட்டோவை எச்டி குவாலிட்டியில் அனுப்ப விரும்பினால் அதை தாராளமாக செய்யலாம்.

பல வருடங்களாக WhatsApp-ல் இருந்த ஒரு குறை.. ஒருவழியாக தீர்ந்தது!

முன்னதாக நீங்கள் எச்டி குவாலிட்டியில் உள்ள புகைப்படங்களை அனுப்பினாலும் கூட அது கம்ப்ரெஸ் (Compress) செய்யப்பட்டு லோ குவாலிட்டி போட்டோவாகவே போய் சேரும். இந்த சிக்கலை சமாளிக்க இருந்த ஒரே வழி, குறிப்பிட்ட எச்டி போட்டோவை ஒரு டாக்குமென்ட் ஃபைல் (Document File) ஆக அனுப்ப வேண்டி இருந்தது.

ஆனால் இனிமேல் அந்த அவசியம் இல்லை. ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டு (Android இரண்டிற்கும் கிடைத்துள்ள லேட்டஸ்ட் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் (Beta Verison) ஆனது வாட்ஸ்அப்பில் புதிய எச்டி போட்டோ குவாலிட்டி (HD Photo Quality) விருப்பத்தை சேர்த்துள்ளது.

இந்த அம்சத்தின் கீழ் ஒரிஜினல் ரெசல்யூஷனின் (Original Resolution) கீழ் புகைப்படங்களை அனுப்ப முடியும். இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், நீங்கள் ஒரு புகைப்படத்தை பகிரும்போது, ​​டீபால்ட் ஆப்ஷன் (Default Option) ஆக ஸ்டாண்டர்ட் குவாலிட்டி (Standard Quality) தான் இருக்கும்.

நீங்கள் ஒரு புகைப்படத்தை ஹை குவாலிட்டியில் அனுப்ப விரும்பினால் மட்டுமே, வாட்ஸ்அப்பில் சேர்க்கப்பட்டுள்ள புதிய எச்டி பட்டனை (HD Button) கிளிக் செய்ய வேண்டும். இப்படியாக அனுப்பப்படும் எச்டி போட்டோவின் மெசேஜ் பபுளில் (Message bubble) ஒரு புதிய குறிச்சொல் (New tag) சேர்க்கப்படும்; அது குறிப்பிட்ட போட்டோவானது எச்டி தரத்தில் அனுப்பப்பட்டுள்ளது என்பதை மற்றவர்களுக்கு அறிவுறுத்தும்.

முன்னரே குறிப்பிட்டபடி இந்த புதிய எச்டி பட்டன் அம்சமானது, தற்போது வரையிலாக வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு (Beta Users) மட்டுமே கிடைக்கிறது. அதாவது இது ஆண்ட்ராய்டுக்கான 2.23.12.13 வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனிலும், ஐஓஎஸ்-க்கான 23.11.0.76 வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனிலும் மட்டுமே அணுக கிடைக்கிறது.

அதாவது இந்த அம்சம் படிப்படியாகவே வெளியாகும். இந்த அம்சம் அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு வந்துசேர சிறுது காலம் ஆகலாம் என்று அர்த்தம். இதற்கிடையில் வாட்ஸ்அப்பில் 'சேனல்ஸ்' (Channels) என்கிற அம்சமும் அறிமுகமானது. இதன் கீழ் க்ரூப் அட்மின்களால், டெக்ஸ்ட், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் வாக்கெடுப்புகள் (Polls) போன்றவைகளை ஒன்-வே பிராட்காஸ்ட்களாக (One-way broadcasts) அனுப்ப முடியும்.

Best Mobiles in India

English summary
WhatsApp Added New HD Button in Both iOS Android and Now Allows Users To Send High Quality Photos
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X