Home
News

டூபாக்கூர் க்ரூப்களுக்கு வெடி வைத்த WhatsApp நிறுவனம்! இனிமேல் Context Card-ஐ தாண்டி தான் போகணும்! என்னது இது?

நன்றாக தெரிந்த நண்பர்கள் அல்லது அலுவலக பணியாளர்கள் அல்லது சொந்தக்காரர்கள் அல்லது குடும்பத்திரனர்களை உள்ளடக்கிய வாட்ஸ்அப் க்ரூப்களில் "பெரும்பாலும்" எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் "யார்ரா நீங்கலாம்?" என்று கேட்கும் அளவிற்கு.. அடையாளம் தெரியாத புதுப்புது எண்களாலும், வித்தியாசமான பெயர்களாலும் உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் க்ரூப்களில் - ஆபத்துகள் ஆயிரம். இந்த புள்ளி தான் வாட்ஸ்அப் க்ரூப் ஸ்கேம்களின் (WhatsApp Group Scams) எண்ணிக்கையும், அதன் வழியாக நடக்கும் மோசடிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போக முக்கிய காரணமாகும்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தின் கீழ், வாட்ஸ்அப் நிறுவனமானது கான்டெக்ஸ்ட் கார்டு (Context Card) என்கிற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. கான்டெக்ஸ்ட் கார்டு என்றால் என்ன? இது எப்படி வேலை செய்யும்? இது எப்படி மோசடி வேலைகளை செய்யும் வாட்ஸ்அப் க்ரூப்களில் இருந்து பயனர்களை காப்பாற்றும்? இதோ விவரங்கள்:

டூபாக்கூர் க்ரூப்களுக்கு வெடி வைத்த WhatsApp-ன் Context Card அம்சம்!

கான்டெக்ஸ்ட் கார்டு அம்சத்தின் முக்கிய நோக்கமே பயனர்கள் ஒரு க்ரூப்பில் சேர முடிவு செய்வதற்கு முன் அவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதே ஆகும். வாட்ஸ்அப்பின் கூற்றுப்படி, தெரியாத நபர்களால்.. அதாவது உங்கள் காண்டாக்ட் லிஸ்ட்டில் இல்லாத நபர்களால், ஏதேனும் ஒரு வாட்ஸ்அப் க்ரூப்பில் நீங்கள் சேர்க்கப்படும் போது இந்த அம்சம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

நீங்கள் ஒரு வாட்ஸ்அப் க்ரூபில் சேர்க்கப்படும்போது உங்களுக்கு ஒரு "கான்டெக்ஸ்ட் கார்டு" தோன்றும். அதன் வழியாக, நீங்கள் சேர்க்கப்பட்ட க்ரூப்பை உருவாக்கியது யார், அது எந்த தேதியில் உருவாக்கப்பட்டது மற்றும் அந்த க்ரூப்பின் நோக்கம் என்ன போன்ற தேவையான தகவல்களை பெறுவீர்கள். இந்த தகவல்களின் வழியாக பயனர்கள், இது தங்களுக்கு பொருத்தமான க்ரூப்பா? இதில் சேர வேண்டுமா அல்லது வெளியேற வேண்டுமா? என்பதை தீர்மானிக்க உதவும்.

டூபாக்கூர் க்ரூப்களுக்கு வெடி வைத்த WhatsApp-ன் Context Card அம்சம்!

இந்த அம்சம், பயனர்கள் வாட்ஸ்அப் க்ரூப் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் என்பதில் சந்தேகமே வேண்டாம். சமீப காலமாக வாட்ஸ்அப் பயனர்கள், பங்குச்சந்தை டிப்ஸ்களை வழங்கும் போலியான வாட்ஸ்அப் க்ரூப் தொடர்பான பல மோசடிகளுக்கு இலக்காகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற போலியான வாட்ஸ்அப் க்ரூப்கள் ஆனது, உள்வரும் பயனர்களை நம்ப வைக்க போலியான ஆடியோ கால், போலியான ப்ரொபைல் பிக்சர் மற்றும் போலியான டிஸ்பிளே நேம்களை பயன்படுத்துகின்றனர். அவைகளை மேலோட்டமாக பார்க்கும் போது, நுண்ணறிவுள்ள பங்குச்சந்தை டிப்ஸ்களை வழங்கும் க்ரூப்களை போல தெரிகின்றன; சட்டபூர்வமான க்ரூப்களை போல தெரிகின்றன.

டூபாக்கூர் க்ரூப்களுக்கு வெடி வைத்த WhatsApp-ன் Context Card அம்சம்!

இதை நம்பும் பயனர்கள் குறிப்பிட்ட க்ரூப்பில் இணைகிறார்கள். ஒருகட்டத்தில் இதில் பல எண்ணிக்கையிலான மெம்பர்கள் சேர்ந்த பின்னர், "இந்த க்ரூப்பில் பல பேர் இருக்கிறார்கள் ஆக இது நிச்சயமாக நம்பகமான க்ரூப் ஆகத்தான் இருக்கும்" என்று மாயை உருவாகி, மேலும் பலர் இணைகிறார்கள். அதன் பின்னர் தான் ஏமாற்று வேலையே ஆரம்பிக்கும்!

ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மெம்பர்கள் சேர்ந்த பின்னர் அந்த க்ரூப் வழியாக பங்கு வர்த்தகக் கணக்கு (Share trading account) மற்றும் சாஃப்ட்வேர் அறிமுகப்படுத்தபப்டுகிறது. இது அவர்களின் முதலீடுகள் கணிசமான வருமானத்தை ஈட்டுவதாக நம்ப வைக்கும் போலியான லாபத்தை காட்டுகிறது. இதை கண்மூடித்தனமாக நம்பும் பயனர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை டிரான்ஸ்பர் செய்யுமாறு கேட்கப்படுகிறார்கள். பணத்தை டிரான்ஸ்பர் செய்ததும், மோசடி செய்பவர்கள் பணத்துடன் காணாமல் போகிறார்கள்!

சமீபத்தில், வாட்ஸ்அப் பயனர்கள் கேமரா இன்டர்பேஸில் இருந்து நேரடியாக வீடியோ நோட்களை ரெக்கார்ட் செய்து ஷேர் செய்ய அனுமதிக்கும் ஒரு புதிய அம்சமும் சோதிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இது வீடியோ நோட்களுக்கான புதிய ஷார்ட்கட் பட்டனை உருவாக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த அம்சம் வீடியோ நோட் மோட் (WhatsApp Video Note Mode) என்று அழைக்கப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp Added New Context Card Feature to Prevent Users From WhatsApp Group Scams Here is How
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X