Home
News

நத்திங் போன் 1 vs நத்திங் போன் 2: என்ன மாற்றங்களை புதிய போன் பெற்றுள்ளது? எது வாங்க பெஸ்ட்?

நத்திங் (Nothing) நிறுவனம் நேற்றிரவு அதன் அடுத்த ஸ்மார்ட்போன் மாடலான நத்திங் போன் (2) (Nothing Phone 2) மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்ச மேம்படுத்தல்கள் பற்றி பார்க்கலாம்.

இதன் முந்தைய மாடலான நத்திங் போன் (1) vs நத்திங் போன் (2) மாடலுக்கு இடையிலான மாற்றங்கள் என்ன? என்னென்ன மேம்படுத்தல்களை நிறுவனம் இம்முறை மேற்கொண்டுள்ளது என்று தெரிந்துகொண்ட பிறகு, எது வாங்க சிறந்த ஸ்மார்ட்போன் சாதனம் என்பதை பற்றி பார்க்கலாம். Nothing Phone 1 vs Nothing Phone 2 இடையிலான வித்தியாசம் என்ன?

நத்திங் போன் 1 vs நத்திங் போன் 2: என்ன மாற்றம்? எது வாங்க பெஸ்ட்?

Nothing Phone (1) vs Nothing Phone (2) டிஸ்பிளே
முதலில் நத்திங் போன் (1) இன் டிஸ்பிளே பற்றி பேசுகையில், இது முழு HD+ திறனுடன் 6.55' இன்ச் OLED டிஸ்ப்ளேவை 120Hz ரெஃப்ரஷ் ரேட் ஆதரவுடன், 10-பிட் கலர் டெப்த், HDR10+ சப்போர்ட் உடன் 1200 nits பீக் பிரைட்னஸ் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் வீதம் போன்றவற்றை கொண்டுள்ளது.

மறுபுறம், நத்திங் போன் (2) ஆனது 6.7' இன்ச் LTPO பேனலைக் கொண்டுள்ளது. இது OLED அடாப்டிவ் 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வருகிறது. இது HDR 10+ ஆதரவு, 1600 nits பீக் பிக்சல் பிரைட்னஸ் உடன் 1000 nits அதிகபட்ச அவுட்டோர் பிரைட்னஸ் உடன் வருகிறது. பாதுகாப்பிற்காக இது கொரில்லா கிளாஸ் உடன் வருகிறது. இதுவும் 240Hz டச் சாம்பிளிங் விகிதத்தை கொண்டுள்ளது.

நத்திங் போன் (1) மாடலில் இடதுபுறமாக இருக்கும் பன்ச் ஹோல், நத்திங் போன் 2 இல் பன்ச் ஹோல் மையமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய போனில் கணிசமான அளவு டிஸ்பிளே பெரிதாக உள்ளது. அடுத்தபடியாக, புதிய Nothing Phone (2) ரெஃப்ரஷ் ரேட் இப்போது 1Hz முதல் 120Hz வரை அடாப்டிவ் பிரைட்னஸ் உடன் வருகிறது. இந்த அம்சம் பேட்டரி ஆயுளை மேம்படுத்துகிறது.

நத்திங் போன் 1 vs நத்திங் போன் 2: என்ன மாற்றம்? எது வாங்க பெஸ்ட்?

நத்திங் ஃபோன் (1) vs நத்திங் ஃபோன் (2) பெர்ஃபார்மன்ஸ்
நத்திங் ஃபோன் (1) என்பது ஸ்னாப்டிராகன் 778G+ சிப்செட் உடன் வருகிறது. அதே சமயம், நத்திங் ஃபோன் (2) புதிய ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 சிப்செட் உடன் வருகிறது. இது சிறந்த செயல்திறனை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அதிக செயல்திறன் கொண்டது. இது இப்போது ஹெவி கேம் மற்றும் செயல்பாட்டை ஸ்மூத்தாகவும், குறைந்த வெப்பத்துடன் செயல்படுத்துகிறது.

இந்த இரண்டு போன்களும் நத்திங் ஓஎஸ்ஸில் இயங்குகின்றன. இருப்பினும், நத்திங் போன் (2) சாதனம் நத்திங் ஓஎஸ் 2.0 உடன் அனுப்பப்படுகிறது. இரண்டுமே 12ஜிபி ரேம் வரை வருகிறது. ஆனால், நத்திங் ஃபோன் (2) இப்போது 512ஜிபி ஸ்டோரேஜ்ஜை பெறுகிறது. இதன் முன்னோடி அதிகபட்சமாக 256ஜிபி வரை மட்டுமே கொண்டிருந்தது.

நத்திங் ஃபோன் (1) vs ஃபோன் (2) கேமரா
நத்திங்கின் இரண்டு ஃபோன்களும் 50MP + 50MP அமைப்புடன் கூடிய டூயல் கேமராக்களை கொண்டுள்ளன. இருப்பினும், நத்திங் ஃபோன் (1) சோனி IMX766 சென்சாருடன் வந்தது, அதே சமயம் நத்திங் ஃபோன் (2) IMX890 பிரைமரி சென்சாரை கொண்டுள்ளது. இது டாப்-எண்ட் சென்சாராகும். அல்ட்ராவைட் ஆங்கிள் Samsung JN1 சென்சார் இரண்டிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.

நத்திங் போன் 1 vs நத்திங் போன் 2: என்ன மாற்றம்? எது வாங்க பெஸ்ட்?

நத்திங் ஃபோன் (1) vs ஃபோன் (2): பேட்டரி
நத்திங் ஃபோன் (1) 16MP கொண்ட IMX471 சென்சாருடன் வருகிறது. அதே சமயம் நத்திங் ஃபோன் (2) சாதனம் 32MP கொண்ட IMX615 சென்சாரை கொண்டுள்ளது. நத்திங் ஃபோன் (1) 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் உடன் 4500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. நத்திங் ஃபோன் (2) சாதனம் 4700mAh உடன் 45W வேகத்தை அதிகரிக்கிறது. இது 15W வயர்லெஸ் சார்ஜிங் உடன் வருகிறது.

ஒட்டுமொத்தமாக, பல வகையில் நத்திங் போன் (2) மேம்பாடுகளை பெற்றுள்ளது. இருப்பினும், விலையிலும் புதிய போன் அதிகரிப்பை பெற்றுள்ளது. முந்தைய மாடல் வெறும் ரூ.32,999 விலையில் வருகிறது. புதிய போன் (2) ரூ.44,999 உடன் வருகிறது. மேம்படுத்தல்களுடன் நத்திங் போன் (2) வாங்க சிறந்த மாடலாக திகழ்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
What's The Difference and Upgrade Between Nothing Phone 1 vs Nothing Phone 2 Mobiles
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X