உலக அரசியலில் பிரபலமடைந்த "சித்தி"- சித்தி என்றால் என்ன? கூகுளை நாடும் அமெரிக்கர்கள்: காரணம் இதுதான்

|

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கமலா ஹாரிஸ் பேசிய பேச்சில் சித்தி என்ற வார்த்தையை குறிப்பிட்டார். இதையடுத்து இந்த வார்த்தை சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்க துணை அதிபர் தேர்தல்

அமெரிக்க துணை அதிபர் தேர்தல்

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தமிழ் வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார். கருப்பின போராட்டம், குடியேற்றத்திற்கு எதிரான கொள்கை, கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது.

குடியரசு கட்சி சார்பில் கமலா ஹாரிஸ்

குடியரசு கட்சி சார்பில் கமலா ஹாரிஸ்

வருகிற தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறும் அதேநாளிலேயே துணை அதிபரும் தேர்வு செய்யப்பட இருக்கிறார். அதேபோல் அமெரிக்காவில் துணை அதிபர் பதவியில் இருப்பவர்கள் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடன் ஒபாமா ஆட்சியில் துணை அதிபராக இருந்துள்ளார்.

குடியரசுக் கட்சி சார்பில் மைக் பென்ஸ்

குடியரசுக் கட்சி சார்பில் மைக் பென்ஸ்

அமெரிக்காவில் அதிபர் தேர்தலை போல் துணை அதிபர் தேர்தலும் மிக முக்கியமானதாகும். இந்த நிலையில் குடியரசுக் கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு மைக் பென்ஸ்-ம், ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என அறிவிப்பு

கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என அறிவிப்பு

துணை அதிபர் பதவிக்கு கலிஃபோர்னியாவை சேர்ந்த செனட் உறுப்பினர் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என ஜோ பைடன் அறிவித்துள்ளார். கமலா ஹாரிஸ் குறித்து ஜோ பைடன் டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார், அதில் கமலா ஹாரிஸ் அச்சமற்ற போராளி, நாட்டின் மிகச்சிறந்த அரசு ஊழியர்களில் ஒருவர், அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த போது, உழைக்கும் வர்க்க மக்களை உயர்த்துவதையும், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பதையும் தான் பார்த்திருக்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

ஒரே ஒரு வீடியோ-க்கே 33,30 மில்லியன் VIEWERS.! அப்படியென்ன செய்தார் இந்த யூடியூப் பாட்டி.!ஒரே ஒரு வீடியோ-க்கே 33,30 மில்லியன் VIEWERS.! அப்படியென்ன செய்தார் இந்த யூடியூப் பாட்டி.!

கமலா ஹாரிஸ் தாய் தமிழகத்தை சேர்ந்தவர்

கமலா ஹாரிஸ் தாய் தமிழகத்தை சேர்ந்தவர்

55 வயதான கமலா ஹாரிஸ் தாய் தமிழகத்தை சேர்ந்தவர், தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். இவரை பெண் ஒபாமா என இவரது ஆதரவாளர்கள் அழைப்பார்கள், கலிபோர்னியாவில் அரசு தலைமை வழக்கறிஞராக தேர்வு செய்யப்பட்ட முதல் கருப்பின பெண் இவர். மேலும் தற்போதைய அறிவிப்பிற்கு பிறகு அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட முதல் கருப்பின பெண் இவர். கமலாஹாரிஸூக்கு இதுபோன்று பல்வேறு பெருமைகள் உள்ளது.

துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்

துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்

துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலைியல் இவர் பிரச்சாரத்தின்போது, தமிழ் வார்த்தையை பயன்படுத்தியது உலக அரசியலில் பேசு பொருளாக மாற்றியதோடு அந்த சொல் இணையத்தில் வைரலாக ஆரம்பித்தது.

நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் பேச்சு

நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் பேச்சு

கமலா ஹாரிஸ் பேசியதாவது, தனது தாய் ஷ்யாமளா தங்களை மிக தைரியமான பெண்ணாக வளர்த்துள்ளார். தானும் தன் சகோதரியும் கருப்பின பெண்கள் என்பதில் பெருமை கொள்கிறோம் என கூறினார். இந்திய பாரம்பரியத்தை நினைத்து பெருமை கொள்ளும்படி தங்களை தாய் ஷ்யாமளா வளர்த்துள்ளார். அதோடு தனது அன்கிள்கள் (மாமா), ஆண்டிகள் (அத்தை), சித்திகள் தான் தனது குடும்பம் என குறிப்பிட்டார்.

சித்தி என்ற வார்த்தை

சித்தி என்ற வார்த்தை

இதில் சித்தி என்ற வார்த்தை தமிழில் பயன்படுத்தினார். இவர் பயன்படுத்திய சித்தி என்ற வார்த்தையே ஆங்கில செய்தித்தளங்களில் தலைப்பாக மாறி வருகிறது. சித்தி என்ற சொல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சித்தி என்றால் என்ன

சித்தி என்றால் என்ன

தந்தை, தாய், அன்கிள், ஆன்டி என்றே பழக்கப்பட்டிருக்கும் அமெரிக்கர்களுக்கு சித்தி என்ற வார்த்தை புதிதாக இருந்துள்ளது. உலக அரசியலில் கமலா ஹாரிஸ் சித்தி என்ற வார்த்தையை பிரதானப்படுத்தினார். சித்தி என்றால் என்ன என அமெரிக்கர்கள் பலரும் கூகுளை நாடியுள்ளனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்க வேண்டிய ஒன்று.

Best Mobiles in India

English summary
Whats Mean By Chithi?- America Google Searches For Chithi After Kamala Harris Speech

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X