ஆப்பிள் 'One More Thing' என்ற நிகழ்வை நவம்பர் 10ல் அறிவித்துள்ளது.. என்ன அறிமுகம் தெரியுமா?

|

ஆப்பிள் நிறுவனம் வரும் நவம்பர் 10 ஆம் தேதி மற்றொரு நிகழ்வை அறிவித்துள்ளது, இதில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக்ஸ்-களை (Macs) நிறுவனம் அதன் சொந்த சிலிக்கான் சிபியுக்களுடன் அறிமுகப்படுத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் இன்னும் சில சுவாரசியமான தயாரிப்புகளும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு விபரத்தையும் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஆப்பிளின் 'ஒன் மோர் திங்' நிகழ்வு

ஆப்பிளின் 'ஒன் மோர் திங்' நிகழ்வு

'ஒன் மோர் திங்' என்ற பெயருடன் வரும் நவம்பர் 10 ஆம் தேதிக்கு ஆப்பிள் நிறுவனம் மற்றொரு புதிய நிகழ்வைத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த 'ஒன் மோர் திங்' வாக்கியத்தைக் குறிப்பாக அறிவிப்புகளின் போது ஸ்டீவ் ஜாப்ஸ் அடிக்கடி பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்விற்கு ஏன் இந்த டைடல் வைக்கப்பட்டது என்ற தகவலையும் நிறுவனம் நிகழ்ச்சியின் போது விபரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிலிக்கான் சிபியு Macs

சிலிக்கான் சிபியு Macs

இந்த நிகழ்வின் போது ஆப்பிள் புதிய சிலிக்கான் சிபியு அடிப்படையிலான மேக்ஸை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒன் மோர் திங் நிகழ்வு முக்கியமாக புதிய மேக்ஸ் அறிமுகத்தை மையமாகக் கொண்டிருக்கும், ஆப்பிள் தனது வருடாந்திர WWDC நிகழ்வின் போது ஜூன் மாதத்தில் மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.

மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை -அவிழ்ந்தது பூமியின் பெரும் மர்ம முடிச்சு.!

சிலிக்கான் CPU என்ன செய்யும்?

சிலிக்கான் CPU என்ன செய்யும்?

இன்டெல் பிராசஸர்களில் இருந்து நிறுவனம் அதன் சொந்த சிலிக்கான் CPU-களுக்கு மாற்றப்படும் என்று ஆப்பிள் அப்பொழுது அறிவித்தது. இந்த மாற்றம் அதன் சொந்த ARM சிப்களின் உதவியுடன் குறைந்த மின் நுகர்வு மற்றும் சிறந்த செயல்திறனை அடைவதற்கான நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது. புதிய மேக்ஸ்கள் 2020 இன் பிற்பகுதியில் ஷிப்பிங்கை தொடங்கும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. அது இப்போது நடப்பதாகத் தெரிகிறது.

இரண்டு தலையுடன் ஒட்டி பிறந்த அரிய வகை பாம்பு.. அதன் இரண்டு தலைக்கு இதுதான் காரணமா?

காலாவதியான கணினிகள் என்று யாரும் கருதிவிட வேண்டாம்

காலாவதியான கணினிகள் என்று யாரும் கருதிவிட வேண்டாம்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய Macs சாதனம் குறைந்த மின் நுகர்வு திறனுடன் சிறந்த செயல்திறனை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. ​​பழைய இன்டெல் அடிப்படையிலான மேக்ஸ்கள் காலாவதியான கணினிகள் என்று யாரும் கருதிவிட வேண்டாம் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. இந்த மேக்ஸ்களும் எதிர்காலத்தில் நீண்ட கால மென்பொருள் அப்டேட்களை தடையில்லாமல் தொடர்ந்து பெரும் என்று நிறுவனம் உறுதிபட கூறியுள்ளது.

போக்குவரத்துக்கு விதிமீறல் காரணமாக ரூ. 42,500 அபராதம்.. 4 அடி நீட்ட பில்.. ஆடிப்போன போலீசார்..

புதிய MacOS BigSur

புதிய MacOS BigSur

இந்த நிகழ்வில் ஊகிக்கப்படும் மற்றொரு புதிய வெளியீடு ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக் ஓஎஸ் பிக்சர் (MacOS BigSur) ஆக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேக்கிற்கான சமீபத்திய மென்பொருளாகும். இது WWDC இல் அறிவிக்கப்பட்ட நேரத்திலிருந்து பல மாதங்களாக பீட்டா கட்டத்தில் சோதனையில் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

AirTags இறுதியாக வெளியாகுகிறதா?

AirTags இறுதியாக வெளியாகுகிறதா?

கடந்த 2 நிகழ்வுகளில், ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து எதிர்பார்க்கப்படும் ஒரு முக்கிய அறிவிப்பு AirTags பற்றியானதாக தான் இருக்கக்கூடும். ஆப்பிள் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த ஏர்டேக்குகள் இறுதியாக இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் இம்முறையும் AirTags அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
What You Can Expect From Apple's 'One More Thing' Event On November 10 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X