Mobile போன் தண்ணீரில் விழுந்தால் அரிசி பையில் வைக்க கூடாதா? ஏன்? என்ன காரணம்?
ஹோலி பண்டிகை வருகிறது. வண்ணங்களின் திருவிழாவைக் கொண்டாட நீங்கள் பெரிய திட்டங்களை வைத்திருக்கிறீர்கள் என்றால், உங்கள் போனை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் உங்கள் ஸ்மார்ட்போனை சேதப்படுத்தக் கூடும் என்பதனால் சில விஷயங்களை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
எதிர்பாராத விதமாக உங்கள் Mobile போனில் ஈரம் பட்டாலோ அல்லது தண்ணீரில் விழுந்தாலோ நீங்கள் உடனே செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கையை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். உங்கள் போனின் சேதத்தை குறைக்க நீங்கள் சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் மனதில் வைத்துகொள்ள வேண்டிய சில செய்யக்கூடாத விஷயங்களை பற்றி பார்க்கலாம்.

உங்கள் ஸ்மார்ட்போனை ஊதி உலர்த்தக்கூடாது.!
உங்கள் போனில் இருக்கும் நீரை உலர்த்த சில விஷயங்களை நீங்கள் செய்வீர்கள். மேற்பரப்பு ஈரப்பதத்தை நீங்கள் துடைத்து அகற்றினாலும், உங்கள் ஃபோனின் உள் இருக்கும் நீரை அகற்ற ஊதுவது தவறான செயல். அதை ஒருபோதும் செய்யாதீர்கள். போனை உலர்த்த சூடான இடத்தில வைப்பதையும் தவிர்க்கவும். இது அதிக ஆபத்து மற்றும் சேதத்தை உருவாக்கும்.
எந்த பட்டனையும் அழுத்த கூடாது.!
நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம் என்னவென்றால், மொபைல் ஈரமாகிவிட்டாலோ அல்லது தண்ணீரில் நனைந்தாலோ உடனடியாக அதை OFF செய்ய வேண்டும். வேறு எந்த பட்டனையும் அழுத்த வேண்டாம். ஏனெனில் இது சரிசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும்.

உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் வைக்க வேண்டாம்!
உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் ஏற்கனவே தண்ணீர் தேங்கியுள்ளது. அதை சார்ஜில் வைப்பது சாதனத்தின் உள்ளே சேதத்தை ஏற்படுத்தும். எனவே, ஈரமாக இருக்கும்போது உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. ஆப்பிள் ஆதரவுப் பக்கத்தின்படி, ஃபோனை பவருடன் இணைக்கும் முன் 5 மணிநேரம் காத்திருக்க பரிந்துரைக்கப்படுகிறது.
உங்கள் ஸ்மார்ட்போனை உதரக்கூடாது.!
ஈரமான பிறகு மொபைல் போனை வலுக்கட்டாயமாக அசைக்கவோ அல்லது குழுக்கவோ அல்லது ஆட்டவோ கூடாது என்று பரிந்துரைக்கப்படுகிறது. இது முன்னர் பாதிப்பில்லாமல் இருந்த போனின் மற்ற பகுதிகளில் திரவம் கசிவதற்கு வழிவகுக்கும்.

2-4 நாட்களுக்கு உங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டாம்
தண்ணீரில் விழுந்த போனை 4 நாட்களுக்கு பயன்படுத்தாமல் OFF இல் வைப்பது பாதுகாப்பானது. இத்தனை நாட்கள் மொபைல் இல்லாமல் இருப்பது சிரமம் எனப்தனால், குறைந்தது 48 மணிநேரம் ஆவது உங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. சில நாட்கள் தானாக உலர விடுவது நல்லது.
மொபைலை அரிசி பையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டுமா?
அரிசி உறிஞ்சக்கூடிய குணங்களைக் கொண்டுள்ளது என்பது உண்மை தான். ஆனால், அது ஸ்மார்ட்போனின் சிறிய பகுதிகளிலிருந்து ஈரப்பதத்தை சேகரிக்க இயலாது. அரிசி துகள்கள் உங்கள் ஃபோனின் போர்ட்களில் சிக்கி, கூடுதல் சேதத்தை ஏற்படுத்தும் என்பதனால் இந்த முறையை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

ஏன் சிலிகா ஜெல் பாக்கெட் நல்லது? இது என்ன செய்யும்?
இதற்கு பதிலாக சிலிகா ஜெல் பாக்கெட்களை பயன்படுத்துவது சிறப்பானது. சிறிய-சிறிய சிலிகா ஜெல் பாக்கெட்களை நாம் பார்சல் கவர், ஷூ பாக்ஸ் போன்ற பொருட்களுடன் சேகரித்திருப்போம். இதை தனியாகவும் ஆன்லைனில் நீங்கள் வாங்கி பயன்படுத்தலாம். இது ஈரப்பதத்தை முற்றிலுமாக சேதமில்லாமல் உறுஞ்சிம் தன்மை கொண்டது என்பதனால், இதை பயன்படுத்துவது சிறந்தது.


Click it and Unblock the Notifications








