ஆப்ரேசன் பைனல் திரைப்படத்தில் அடால்ப் ஏச்மேன் தேடல் பற்றிய தவறான தகவல்!

இந்த இரகசிய திட்டம் பொதுவெளியில் தெரிந்தபின்னரும் கூட, அவருக்கு எந்த சலுகையும் கிடைக்கவில்லை. அறிவித்த சன்மானத்தை பெறவும் இஸ்ரேலுடன் போராடினார் லோகர்.

|

1957ஆம் ஆண்டுகளில், இரண்டாம் உலகப்போர் மற்றும் 6 மில்லியன் யூதர்களின் படுகொலையை உலகம் கொஞ்சம் கொஞ்சமாக மறக்த துவங்கியிருந்த நேரம். அர்ஜென்டினா தலைநகர் பியூனோஸ் ஏர்ஜ் உள்ள சாதாரண வீட்டின் கதவை இளம்பெண் ஒருவர் தட்டுகிறார்.அவர் பெயர் சில்வியா ஹர்மன். அவரின் பார்வையற்ற தந்தை அருகில் காத்திருக்கிறார். அவர்கள் இருவரும் ஒரு தீயசக்திக்கான வேட்டையில் இருக்கிறார்கள்.

ஆப்ரேசன் பைனல் திரைப்படத்தில் அடால்ப் ஏச்மேன் தேடல் பற்றிய தவறான தகவல்

கதவைத் திறந்த நடுத்தர வயதுடைய நபரை பார்த்து, "நீங்கள் ஹர் ஏச்மேனா?" என கேட்கிறார் சில்வியா. திடுக்கிட்ட அந்த நபர் முதலில் எதுவும் கூறவில்லை. அவருடைய விசித்திரமான செய்கையே, அவர் தான் அடோல்வ் ஏச்மேன் என சில்வியாவிற்கு உணர்த்தியது. ஆம், ஐரோப்பா முழுவதும் முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த யூதர்களை கொல்வதற்காக, ஹிட்லரின் 'பைனல் சொலுயூசன்' திட்டமான, முறைப்படுத்தப்பட்ட வதை கூடங்களை வடிவமைத்தவர் தான்.

இந்த அசாதாரண நிகழ்வு மற்றும் ஹிட்வரின் மறைவிற்ஙு பிறகான ஏச்மேனின் வாழ்க்கையை பல புத்தகங்களில் வரலாற்று ஆய்வாளர்கள் விவரித்திருந்தாலும், சமீபத்தில் வெளியான "ஆபரேசன் பைனல்" என்ற புதிய படத்தில், எப்படி இஸ்ரேலின் மோசாட் உளவுதுறையின் நடவடிக்கைகள் ஏச்மேனை பிடிக்க உதவின என கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மையான கதையை தழுவி எடுக்கப்பட்ட மற்ற திரைப்படங்களை காட்டிலும், இந்த படத்தில் கதைச் சிதைவுகள் நிரம்பியுள்ளன.

ஆப்ரேசன் பைனல் திரைப்படத்தில் அடால்ப் ஏச்மேன் தேடல் பற்றிய தவறான தகவல்

சிறு மாற்றங்கள்:
உண்மையான குழுவில் இருந்த ஆண் மருத்துவர், திரைப்படத்தில் பெண் கதாபாத்திரமாக காட்டப்பட்டுள்ளார். மேலும் ஏச்மேனை கடத்திய மோசாட் ஏஜென்ட் பீட்டர் மேல்கின்னின் காதலியாக காட்டப்பட்டுள்ளார்.


முக்கிய மாற்றங்கள்:
பார்வையில்லாத நபர் மற்றும் அவரது மகளின் கதாப்பாத்திரங்கள்.செல்வியா ஹெர்மன் மற்றும் அவரது தந்தை லோதர், ரிகார்டோ கெளமெண்ட் என்ற பெயரில்வாழ்ந்து வரும் ஏச்மேனை பிடிக்க மோசாட் உளவுபடைக்கு உதவிபுரிபவர்களாக காட்டப்பட்டுள்ளனர்.

ஆப்ரேசன் பைனல் திரைப்படத்தில் அடால்ப் ஏச்மேன் தேடல் பற்றிய தவறான தகவல்

திரைப்படத்தில், இந்த போர் குற்றவாளியை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த ஆவலாக உள்ள மோசாட் ஏஜென்ட்கள், செல்வியாவை வைத்து ஏச்மேனின் கதவை தட்டவைத்து, அருகில் பதுங்கியிருந்து, போர்குற்றவாளிக்கு சந்தேகம் ஏற்படாதவாறு மறைந்திருந்து புகைப்படங்களை எடுக்கின்றனர்.

ஆனால் நிஜத்தில், மோசாட் ஏஜெண்டுகள் ஏச்மேனை பிடிப்பதை சுத்தமாக ஆர்வம் காட்டவில்லை. மேலும் பார்வையற்ற நபர் மற்றும் அவரது மகளுடன் இணைந்த பணியாற்றவே இல்லை. இன்னும் கூறவேண்டுமானால், மோசாட் தலைமை இவர்கள் இருவரும் கூறுவதை கேட்கவும் இல்லை, இவர்களுக்கு பாதுகாப்பும் வழங்கவில்லை.

ஆப்ரேசன் பைனல் திரைப்படத்தில் அடால்ப் ஏச்மேன் தேடல் பற்றிய தவறான தகவல்

இந்த இரகசிய திட்டம் பொதுவெளியில் தெரிந்தபின்னரும் கூட, அவருக்கு எந்த சலுகையும் கிடைக்கவில்லை. அறிவித்த சன்மானத்தை பெறவும் இஸ்ரேலுடன் போராடினார் லோகர்.
Best Mobiles in India

English summary
What ‘Operation Finale’ gets wrong about the hunt for Nazi monster Adolf Eichmann: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X