போன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா?

|

அடுத்த முறை நீங்கள் உங்கள் செல்போனை கையில் பிடிக்கும்போது , அதன் நம்பமுடியாத கட்டமைப்பைப் பற்றி ஆச்சரியப்பட ஒரு நொடி எடுத்துக்கொள்ளுங்கள்.

 பிளாஸ்டிக் மற்றும் உலோகம்

பிளாஸ்டிக் மற்றும் உலோகம்

இது மற்ற உயர் தொழில்நுட்ப கேஜெட் போல தோற்றமளித்தாலும், செல்போனானது கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் உலோகம் போன்ற மிகவும் பொதுவான பாகங்களுடன், பல பொருட்களால் உருவாக்கப்படுகின்றன.

கண்ணாடி

கண்ணாடி

கண்ணாடி செல்போனின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே,அதிலும் குறிப்பாக போனின் திரை கண்ணாடியால் ஆனது. ஆனால் இவையாவும் எந்தவொரு பழைய கண்ணாடியாலும் ஆனது அல்ல. இந்த மொபைல் கண்ணாடியானது அலுமினியம் ஆக்சைடு மற்றும் சிலிக்கான் டை ஆக்சைடு-ல் இண்டியம் டின் ஆக்சைடு-ன் மிக மெல்லிய அடுக்கு சேர்த்து உருவாக்கப்படுகிறது. எனவே நீங்கள் அதை சேதப்படுத்தாமல் போன் திரையை தொட முடியும்.

சோதனை: வாட்ஸ்ஆப்-ல் வந்தது அட்டகாசமான டார்க் மோட் அம்சம்.!சோதனை: வாட்ஸ்ஆப்-ல் வந்தது அட்டகாசமான டார்க் மோட் அம்சம்.!

இலகுரக கடினமான கண்ணாடி

இலகுரக கடினமான கண்ணாடி

மோட்டோரோலா, சாம்சங் மற்றும் நோக்கியா போன்ற உற்பத்தியாளர்களின் சில ஸ்மார்ட்போன்கள், கொரில்லா க்ளாஸ் எனப்படும் கார்னிங் ஆல் உருவாக்கப்பட்ட ஸ்பெஷல் மெல்லிய மற்றும் இலகுரக கடினமான கண்ணாடி திரையை கொண்டுள்ளன.

அலுமினிய ஆக்சைடிலிருந்து தயாரிக்கப்படும் ஷப்பயர் என்ற பொருள் கொரில்லா க்ளாஸை விட மூன்று மடங்கு கடினமாக இருப்பதால், சில ஸ்மார்ட்போன்கள் கண்ணாடிக்கு பதிலாக இது பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. அதேநேரம் இந்த விலையுயர்ந்த பொருள் தற்போதைக்கு எந்தவொரு செல்போனிலும் பரவலாக பயன்படுத்தாத நிலையில், ஆப்பிள் அதன் ஐபோன் 5 கேமராவிற்கு பாதுகாப்பு வழங்குவதற்கு ஷப்பயரை பயன்படுத்துகிறது.

உலோகங்கள்

உலோகங்கள்

நாம் பயன்படுத்தும் செல்போனை உருவாக்க பல்வேறு வகையான உலோகங்கள் தேவைப்படும் நிலையில், பெரும்பாலும் அலுமினியம் உலோகங்களே பயன்படுத்தப்படுகின்றன மற்றும் இலகுரக பொருட்கள் பொதுவாக போன் கேஸில் பயன்படுத்தப்படுகின்றன. லித்தியம் கோபால்ட் ஆக்சைடு மற்றும் கார்பன் கிராஃபைட் ஆகியவை பேட்டரிகள் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. தங்கம், செம்பு மற்றும் வெள்ளி போன்றவை தொலைபேசி ஒயர்களிலும், பிளாட்டினம் மற்றும் டங்ஸ்டன் சர்க்யூட்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.

போன் பயன்படுத்தினால் கொம்பு முளைக்கும்! அதிர்ச்சியூட்டும் ஆய்வுமுடிவுகள்..போன் பயன்படுத்தினால் கொம்பு முளைக்கும்! அதிர்ச்சியூட்டும் ஆய்வுமுடிவுகள்..

97% சீனாவில் உற்பத்திசெய்யப்படுகிறது

97% சீனாவில் உற்பத்திசெய்யப்படுகிறது

செல்போனில் பயன்படுத்தப்பட்டுள்ள உலோகங்களில் சில அரிதான உலோகங்கள் உள்ளதாகவும், அவற்றில் 97% சீனாவில் உற்பத்திசெய்யப்படுகிறது. அரிதாக உலோகங்கள் உண்மையில் அரிதானவை அல்ல. ஆனால் அவை ஆக்ஸிஜனுடன் எவ்வாறு கலக்கின்றன என விளக்குவதற்காக தனிம வரிசை அட்டவணையில் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன மற்றும் இவை செல்போனில் உள்ள கண்ணாடியை கடினமாக்க பயன்படுகின்றன. நியோடிமியம்-அயர்ன்-போரோன் கலவைகள், டிஸ்ப்ரூசியம் மற்றும் பிரசோடிமியம் போன்ற அரிதான உலோகங்கள், செல்போனில் உள்ள காந்தங்கள், ஒலிப்பெருக்கிகள் மற்றும் மோட்டார்களில் காணப்படுகின்றன.

நெகிழி (ப்ளாஸ்டிக்)

நெகிழி (ப்ளாஸ்டிக்)

செல்போன்களில் பொதுவாக காணப்படும் மூன்றாவது பொருள் ப்ளாஸ்டிக். இது பெரும்பாலும் கேஸ்களில் உலோகத்திற்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது. செல்போன்கள் கீழே விழும் போது அல்லது கீறல்கள் விழும் போது அதிக சேதத்தை தடுக்கும் வகையில் ப்ளாஸ்டிக் பயன்படுகிறது. அதிகரிக்கிறது. மேலும் மிக தீவிர வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் தாக்குபிடிக்கமுடியும் என்பதால் செல்போன்களில் பிளாஸ்டிக் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.இது மிகவும் நெகிழ்வான தன்மை கொண்டதால் , செல் சிக்னல்களை கண்டுபிடிக்க முயற்சிக்கும் போது ரிசெப்சன் பிரச்சினைகள் ஏற்படாது.

பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன்.!பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன்.!

மறுசுழற்சி

மறுசுழற்சி

செல்போனில் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் கருத்தில் கொண்டால், இந்த சாதனங்களை குப்பைத்தொட்டிகளில் போடாமல் இருப்பது சிறந்த முடிவு. பல ஆய்வுமுடிவுகளின் படி ஒவ்வொரு வருடமும் 140 மில்லியன் செல்போன்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன. அவற்றில் மற்ற உலோகங்களுடன் சேர்த்து சுமார் 2,100 மெட்ரிக் டன் காப்பர் மற்றும் 3.9 மெட்ரிக் டன் தங்கம், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிகளை குப்பைக்கு அனுப்பாமல் வைத்திருக்க முடியும். உங்கள் பழைய போன்களை குப்பைத்தொட்டியில் போடாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் செல்போன்கள் மறுசுழற்சி மையங்களுக்கு வழங்கலாம்.

Best Mobiles in India

English summary
What Materials Are Used To Make A Mobile Phone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X