Home
News

வைஃபை யூஸ் பண்றவங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.. Wi-Fi 7 என்றால் என்ன? இதான் அடுத்த ஸ்பீட் நெட்வொர்க்கா?

தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த தலைமுறை வைஃபை தொழில்நுட்பம் இப்போது ரெடியாகிவிட்டது. வைஃபை 7 (WiFi 7) என்று அழைக்கப்படும் புதிய வைஃபை நெட்வொர்க் (WiFi network) தான் அடுத்த சூப்பர் பாஸ்ட் டேட்டா ஷேரிங் தொழில்நுட்பமாக மாறப்போகிறது.

புதிதாக அறிமுகமாகவிருக்கும் வைஃபை 7 (WiFi 7) தொழில்நுட்பம் என்றால் என்ன? இதன் வேகம் எவ்வளவு? இதன் திறன் எப்படிப்பட்டது? தற்போது பயன்பாட்டில் உள்ள வைஃபை 6 (WiFi 6) தொழில்நுட்பத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? என்பது போன்ற முழு விபரங்களை இப்போது பார்க்கலாம். வைஃபை 7 பற்றிய புரிதலை நீங்கள் இப்போதே தெரிந்துகொள்வது எதிர்காலத்திற்கு சிறப்பானது.

வைஃபை யூஸ் பண்றவங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.. Wi-Fi 7 என்றால் என்ன?

சரி, வாருங்கள் நேரடியாக விஷயத்திற்கு செல்லலாம். வைஃபை 7 தொழில்நுட்பத்தை பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு, தற்போது பயன்பாட்டில் உள்ள அதிவேக வைஃபை சேவை இது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தற்போதைய அதிவேக வைஃபை இணைப்பு என்றால் அது வைஃபை 6E (WiFi 6E) சேவை தான். இதற்கு அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாக தான் 2024 ஆம் ஆண்டின் முதல் பாதிக்குள் வைஃபை 7 அறிமுகமாகவுள்ளது.

அடுத்த தலைமுறை வைஃபை 7 (Wi-Fi 7) நெட்வொர்க்:

இந்த புதிய தலைமுறை வைஃபை இணைப்பு நம் கைகளில் கிடைப்பதற்கு குறுகிய காலம் மட்டுமே உள்ளதினால், இதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். இப்போதே சந்தையில் Wi-Fi 7 ரவுட்டர்கள் மற்றும் இந்த பேண்ட்வித் உடன் இயங்கும் பிற சாதனங்களை வாங்க கிடைக்கின்றன. வைஃபை 7 (Wi-Fi 7) இணைப்பை ஆதரிக்கும் பல ஸ்மார்ட்ஃபோன்கள் இப்போது சந்தையில் உள்ளன.

வைஃபை 7 என்றால் என்ன?
Wi-Fi 7 என்பது Wi-Fi 6E தொழில்நுட்பத்திற்குப் பிறகு அதிக பேண்ட்வித் அலைவரிசை மூலம் பெரியளவு தகவலை மாற்ற அனுமதிக்கும் ஒரு புதிய இணைப்பாக்கும். இது 2.4 GHz, 5 GHz மற்றும் Wi-Fi 6E போன்ற 6 GHz அலைவரிசைகளில் செயல்படுகிறது. இருப்பினும், இது வாசிப்பை 6E நெட்வொர்க்கை விட மிகவும் சிறந்தது. காரணம், Wi-Fi 6E இல் 160 MHz பரிமாற்றம் நடைபெறுகிறது.

அதுவே, இந்த புதிய வைஃபை 7 தொழில்நுட்பத்தில் 320 MHz வரை பரிமாற்றப்படுகிறது. இது வைஃபை 6E சேனல் அளவை விட இரண்டு மடங்கு இரட்டிப்பாக்குகிறது. இதன் பொருள், அதிக தரவுகள் மூலம் அதிக வேகத்தை இயக்க முடியும். TP-Link இன் இணையதளத்தில், Wi-Fi 6E இன் அதிகபட்ச தரவு விகிதம் 9.6 Gbps என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், Wi-Fi 7 இன் தரவு விகிதம் 46 Gbps ஆகவிருக்கிறது.

வைஃபை 6E vs வைஃபை 7 (WiFi 6E vs WiFi 7):

இது ஒரு பெரிய வித்தியாசமாகும். இருப்பினும், இப்போதைக்கு மக்களுக்கு வைஃபை 6E தொழில்நுட்பமே போதுமானது என்பதே உண்மை. அப்படியானால், வைஃபை 7 யாருக்கெல்லாம் சிறந்தது? யாரெல்லாம் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது சிறப்பானது என்பதை இப்போது பார்க்கலாம். வைஃபை 7 (Wi-Fi 7) நெட்வொர்க் பெரும்பாலும் வீடுகளில் அதிக ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் இருக்கும் இடங்களுக்கு சிறப்பானது.

Wi-Fi 7 ரவுட்டர்களை ஆதரிக்கும் ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் உங்களிடம் இருந்தால் உங்களுக்கு இந்த புதிய தொழில்நுட்பம் மிகவும் சிறந்ததாக இருக்கும். இது (Orthogonal Frequency Division Multiple Access) - OFDMA நுட்பம் மூலம் இயங்குகிறது. இது பரிமாற்றத்தை ஒரே நேரத்தில் பல சாதனங்களுக்கு தரவை வழங்க அனுமதிக்கிறது. Wi-Fi 6E நெட்வொர்க்கிலும் இதே தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது.

ஆனால், Wi-Fi 7 இல் இது இரட்டிப்பாக உள்ளது. Wi-Fi 7 சூப்பர் பாஸ்ட் உடன் லோ-லேடன்சியையும் கொண்டுள்ளது. Wi-Fi 6E இல் இல்லாததை வைஃபை 7 வழங்குகிறது என்றால், இது ஒரு Wi-Fi ரூட்டருடன் தடையற்ற அதிக இணைப்பை இணைக்க அனுமதிக்கிறது என்பதே சிறந்த விஷயமாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
What is Wi-Fi 7 technology and how Wi-Fi 7 is different from Wi-Fi 6E network that now in usage
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X