Google Pay, PhonePe க்கு குட்பை.. இனி பணம் அனுப்ப? அமலுக்கு வரும் புதிய UPI 3.0 அமைப்பு.. என்னென்ன மாறுது?
யுபிஐ (UPI) சேவையில், வருகிற 2025 அக்டோபர் 1 ஆம் தேதி முதல், பணப்பரிமாற்றம் தொடர்பான முக்கிய மாற்றம் ஒன்று அமலுக்கு வரும் நிலையில், அதே அக்டோபர் மாதத்தில் யுபிஐ 3.0 (UPI 3.0) அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
அக்டோபர் 1 ஆம் தேதி நபருக்கு நபர் (P2P) பணப் பரிமாற்றங்களுக்கான பணக் கோரிக்கை விருப்பத்தை (person-to-person money request feature) நிறுத்த உள்ளதாக என்பிசிஐ அறிவித்துள்ளது. யுபிஐ பயனர்களை அதிகளவில் குறிவைத்து நடக்கும் மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தின் கீழ் இந்த மாற்றம் அமலுக்கு வர உள்ளது.

இதற்கிடையில் என்பிசிசி (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது யுபிஐ அமைப்பில் புரட்சிகரமான மேம்படுத்தலை மேற்கொண்டு வருகிறது. யுபிஐ 3.0 என்றால் என்ன? இது என்னென்ன மாற்றங்களை கொண்டு வரவுள்ளது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.
யுபிஐ 3.0 என்றால் என்ன? யுபிஐ 3.0 என அழைக்கப்படும் இந்த மேம்படுத்தல், ஐஓடி (IoT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (Internet of Things) எனேபிள்டு ஆக இருக்கும். அதாவது அனைத்து ஸ்மார்ட் டிவைஸ்கள் வழியாகவே ஆட்டோமேட்டிக் ஆக கட்டணம் (Automated payments) செலுத்த அனுமதிக்கும்.
யுபிஐ 3.0 எப்படி வேலை செய்யும்? இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், யுபிஐ 3.0 அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், யுபிஐ பரிவர்த்தனைகளை செய்ய உங்கள் ஸ்மார்ட்போனை மட்டுமே நீங்கள் இனி நம்பியிருக்க வேண்டிய அவசியம் இருக்காது; மற்ற ஸ்மார்ட் டிவைஸ்கள் வலுயாகிவரும் யுபிஐ பேமண்ட் செலுத்தலாம்.
அதாவது ஸ்மார்ட் டிவிகள், ஏசிக்கள், வாஷிங் மெஷின்கள், கார்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்கள் போன்ற ஸ்மார்ட் டிவைஸ்கள் மூலம் மனித தலையீடு இல்லாமல் யுபிஐ கட்டணங்களை செய்ய முடியும். இந்த புதிய யுபிஐ 3.0 அமைப்பு ஆனது யுபிஐ ஆட்டோபே மற்றும் யுபிஐ சர்க்கிள் போன்ற ஏற்கனவே உள்ள அம்சங்களின் திறன்களில் செயல்படும்.
என்பிஐசி வட்டாரங்களின்படி, யுபிஐ 3.0 அமைப்பின் கீழ், பயனர்கள் தங்கள் பிரதான யுபிஐ டிவைஸில் இருந்து ஒரு ஸ்மார்ட் டிவைஸ்க்கான ஆணையை வழங்க முடியும். இது பயனரின் பிரதான அக்காவின் உடன் இணைக்கப்பட்ட இரண்டாம் நிலை யுபிஐ ஐடியை உருவாக்கும். இது சில வரம்புகளுக்குள் ஆட்டோமேடட் பேமண்ட்களை செய்யும்.
யுபிஐ 3.0 அமைப்பு என்னென்ன மாற்றங்களை கொண்டுவரும்? இந்த அமைப்பு பயனர்கள் தங்கள் ஸ்மார்ட் டிவைஸ்களிலிருந்து நேரடியாக மாதாந்திர சந்தாக்கள் போன்ற சேவைகளுக்கான கட்டணங்களை ஆட்டோமேட்டிக் ஆக செய்ய அனுமதிக்கும். அறியாதோர்களுக்கு ஐஓடி என்பது பரவலாக பயன்படுத்தப்படும் இணைப்பு மற்றும் தரவு பரிமாற்ற தொழில்நுட்பமாகும். இது மென்பொருள் அல்லது இணையத்துடன் இணைக்கப்பட்ட சென்சார்கள் கொண்ட டிவைஸ்களுக்கு இடையே கம்யூனிகேஷன் மற்றும் இன்டராக்ஷன்களை செயல்படுத்துகிறது.
யுபிஐ 3.0 எப்போது அறிமுகமாகும்? முன்னரே குறிப்பிட்டபடி, யுபிஐ-க்கான இந்த புதிய அமைப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2025 ஆம் ஆண்டுக்கான குளோபல் ஃபின்டெக் விழாவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு 2025 அக்டோபரில் மும்பையில் நடைபெற உள்ளது. இந்த கட்டத்தில், யுபிஐ 3.0 தொடர்பான ஒழுங்குமுறை ஒப்புதல்கள் இன்னமும் நிலுவையில் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக யுபிஐ 3.0 ஆனது ஸ்மார்ட் டிவைஸ்கள் வழியாக தானியங்கி பரிவர்த்தனைகளை அனுமதிப்பதன் மூலம் பயனர் அனுபவத்தை இன்னும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு தனிநபர் இன்னொரு தனிநபருக்கு பணம் செலுத்தும் கட்டளையை வழங்குவதை போலவே செயல்படும் ஆனால் வெவ்வேறு டிவைஸ்களுக்கு தனித்தனி ஐடிகளுடன் கூடுதல் நன்மை மற்றும் பாதுகாப்பு இருக்கும்.
யுபிஐ வழியிலான பணப்பரிமாற்ற வேலைகளை (நம்முடைய கட்டுப்பாட்டின் கீழ்) ஸ்மார்ட் டிவைஸ்கள் கையில் எடுத்துக்கொள்ளும் போது - அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் மற்றும் தனியுரிமை பற்றிய கவலைகள் மற்றும் சிக்கல்கள் - குறையும் மற்றும் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!


Click it and Unblock the Notifications








