Twitter நிறுவனமே பற்றி எரியும் இந்த நேரத்தில் கூலாக வந்து இறங்கிய CoTweets!

|

முன்னெப்போதை விடவும் ட்விட்டர் (Twitter) மிகவும் பரபரப்பாக பேசப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அதற்கு காரணம் எலான் மஸ்க் தான் என்பதிலும் சந்தேகம் இல்லை .

ட்விட்டர் நிறுவனத்தின் முழு கட்டுப்பாடும் மஸ்க்கின் கீழ் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது 44 மில்லியன் டீல்-ஐ எலான் 'வாபஸ்' வாங்கி கொண்டதும், இதற்காக ட்விட்டர் நிறுவனம் அவர் மேல் வழக்கு பதிவு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாவதும் என, ட்விட்டர் நிறுவனமே பற்றி எரியாத குறையாக உள்ளது!

உள்ளுக்குள் ஒரே அடிதடி; அதனால் என்ன?

உள்ளுக்குள் ஒரே அடிதடி; அதனால் என்ன?

ட்விட்டர் நிறுவனத்திற்குள் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகிறது என்பதால் "பந்தியில்" (பிளாட்பார்மில்) உட்காந்து இருக்கும் யூசர்கள் "பாயசம்" (புதிய அம்சங்களை) கேட்காமல் இருக்க முடியுமா?

அதன் அடிப்படையில், யூசர்களை தக்கவைக்கும் நோக்கத்தின் கீழ் ​​ட்விட்டர் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த பட்டியலில் லேட்டஸ்ட் ஆக இணைவது - கோட்வீட்ஸ் (CoTweets) அம்சம்.

கோட்வீட்ஸ் எப்படி வேலை செய்யும்?

கோட்வீட்ஸ் எப்படி வேலை செய்யும்?

இந்த அம்சம், இரண்டு ட்விட்டர் அக்கவுண்ட்களை ஒரே ட்வீட்டின் கீழ் இணைக்கும் மற்றும் அந்த இரண்டு அக்கவுண்ட்களையுமே ஒரே ட்வீட்டில் "குறிப்பிடும்" ஆதரவை வழங்கும்.

இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், இந்த புதிய அம்சம் இரண்டு ட்விட்டர் யூசர்ககளை ஒரு போஸ்ட்-ஐ ஒன்றாக ட்வீட் செய்ய அனுமதிக்கும்.

78 கிலோ குப்பையை விண்வெளியில் இருந்து தூக்கி போட்ட நாசா; இதோ வீடியோ!78 கிலோ குப்பையை விண்வெளியில் இருந்து தூக்கி போட்ட நாசா; இதோ வீடியோ!

CoTweets அம்சம் எந்தெந்த நாடுகளில் அணுக கிடைக்கிறது?

CoTweets அம்சம் எந்தெந்த நாடுகளில் அணுக கிடைக்கிறது?

இந்த அம்சம் தற்போது அமெரிக்கா, கனடா மற்றும் கொரியா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்தியங்களில் உள்ள சில யூசர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது.

மேலும் இது இன்னுமும் சோதனை கட்டத்தில் தான் உள்ளது என்பதால், மற்ற நாடுகளுக்கு வர இன்னும் கொஞ்சம் காலம் எடுத்துக்கொள்ளலாம்

CoTweet செய்வது எப்படி?

CoTweet செய்வது எப்படி?

கோட்வீட்ஸ் ஆனது, வழக்கமான ட்வீட்களை போலவே தான் உருவாக்கப்படும். ஆனால் யூசர்கள் மற்றொரு யூசரை போஸ்ட்டின் கோ-ஆத்தர் (co-author) ஆக இருக்கும்படி அழைப்பு விடுக்க வேண்டும், இதை செய்ய CoTweet ஐகானை பயன்படுத்த வேண்டும்.

கோ-ஆத்தர் ஆக நீங்கள் தேர்வு செய்யும் யூசர், உங்களை ஃபாலோ செய்பவராகவும், பப்ளிக் அக்கவுண்ட்-ஐ கொண்டவராகவும் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஒரு நேரத்தில் நீங்கள் ஒரே ஒரு யூசர் உடன் மட்டுமே CoTweet செய்ய முடியும்.

இஷ்டத்துக்கு யூஸ் பண்ணாதீங்க! ஆதார் அட்டை குறித்து அரசாங்கம் கடும் எச்சரிக்கை!இஷ்டத்துக்கு யூஸ் பண்ணாதீங்க! ஆதார் அட்டை குறித்து அரசாங்கம் கடும் எச்சரிக்கை!

ஒரு கோட்வீட்-ஐ உங்களால் ரீட்வீட் செய்ய முடியுமா?

ஒரு கோட்வீட்-ஐ உங்களால் ரீட்வீட் செய்ய முடியுமா?

கண்டிப்பாக! ஒரு கோட்வீட்டை பார்க்கக்கூடிய எந்தவொரு யூசருமே அதை ரீட்வீட் செய்யலாம், கோட் ட்வீட் (Quote Tweet) செய்யலாம் மற்றும் கமெண்ட் செய்யலாம்.

இருப்பினும், CoTweets-ஐ ப்ரோமோட் செய்ய முடியாது, மேலும் ஒரிஜினல் ஆத்தரால் மட்டுமே (அதாவது CoTweeting செய்ய இன்னொரு யூசரை இன்வைட் செய்த யூசரால் மட்டுமே) குறிப்பிட்ட கோட்வீட்டை 'பின்' செய்ய முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கோட்வீட் அழைப்பை நிராகரிக்க முடியுமா?

கோட்வீட் அழைப்பை நிராகரிக்க முடியுமா?

கோட்வீட்டிங் (CoTweeting) செய்ய ஒத்துழைக்குமாறு இன்வைட் செய்யப்பட்ட யூசர்களால் அந்த அழைப்பை நிராகரிக்க முடியும் மற்றும் பிற ட்விட்டர் யூசர்கள் கோட்வீட் அழைப்புகளை அனுப்புவதை தடுக்கவும் முடியும்.

ஒருவேளை குறிப்பிட்ட அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொண்ட பின்னர், உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டால், அதை ரிவோக் (Revoke) செய்யலாம். அப்படி செய்யும் போது குறிப்பிட்ட கோட்வீட் ஆனது ஒரு சாதாரண ட்வீட் ஆக மாறிவிடும்.

Google எச்சரிக்கை! இந்த 4 ஆப்களையும் உடனே DELETE செய்யவும்; ஏனென்றால்?Google எச்சரிக்கை! இந்த 4 ஆப்களையும் உடனே DELETE செய்யவும்; ஏனென்றால்?

இந்த அம்சம் பற்றி ட்விட்டர் என்ன சொல்கிறது?

இந்த அம்சம் பற்றி ட்விட்டர் என்ன சொல்கிறது?

"ட்விட்டர் தளத்தில், யூசர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புக்களை பகிர்ந்துள்ள கொள்ள உதவும் புதிய வழிகளை நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். புதிய யூசர்களின் எண்ணிக்கையை வளர்க்கவும், அவர்களை அடையவும், அக்கவுண்ட்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இந்த அம்சத்தை மக்களும், பிராண்டுகளும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி அறிய, நாங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு CoTweets -ஐ சோதித்து வருகிறோம்" என்று ட்விட்டர் தெரிவித்து உள்ளது.

Best Mobiles in India

English summary
What is Twitter CoTweets Feature How it Works

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X