ரூ.14,900க்கு கிடைக்கும் Apple TV 4K (2022): கம்மி விலையில் பக்கா தியேட்டர் தர அனுபவம்!

|

Apple TV 4K (2022) என்பது Dolby Vision மற்றும் HDR10 போன்ற மேம்பட்ட வீடியோ வடிவங்களை இயக்கும் திறன் கொண்ட சக்தி வாய்ந்த ஸ்ட்ரீமிங் சாதனமாகும். இதன் விலை ரூ.14,900 ஆகும். ஆப்பிள் டிவியின் பயன்பாடு மற்றும் சிறப்பம்சம் குறித்து பார்க்கலாம்.

பக்கா ஸ்ட்ரீமிங் சாதனம்

பக்கா ஸ்ட்ரீமிங் சாதனம்

Apple TV 4K (2022) என்பது இந்த ஆண்டின் சிறந்த கேஜெட்களில் ஒன்றாகும். இது மிகவும் துல்லியமான மற்றும் ஹேங் ஆகாத சாஃப்ட்வேர் ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது. முதலில் ஆப்பிள் டிவி என்றதும் இதை டிவி என்று தான் பலரும் நினைக்கின்றனர். இது பக்கா ஸ்ட்ரீமிங் சாதனமாகும். விலையுயர்ந்த ஸ்ட்ரீமிங் சாதனங்களில் இது பிரதான ஒன்றாகும்.

ஏன் ஆப்பிள் டிவி வாங்க வேண்டும்?

ஏன் ஆப்பிள் டிவி வாங்க வேண்டும்?

ஆப்பிள் என்றால் விலை உயர்வு தான் என்பது அனைவரும் அறிந்ததே. அனைத்து சாதனங்களில் இருந்தும் இது தனித்து நிற்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இதே போன்ற பயன்பாடு கொண்ட அமேசான் ஃபயர் ஸ்டிக் மற்றும் கூகுள் க்ரோம் காஸ்ட் ஆப்பிள் டிவியை விட பாதி விலையில் கிடைக்கிறது. அப்படி இருக்கும் போது ஏன் ஆப்பிள் டிவியை தேர்ந்தெடுக்க வேண்டும் என கேள்வி வரலாம். பதில் இருக்கிறது.

Apple TV 4K (2022) சிறப்பம்சங்கள்

Apple TV 4K (2022) சிறப்பம்சங்கள்

Apple TV 4K (2022) பயன்பாட்டை ஆண்ட்ராய்ட் போன்ற ஸ்மார்ட்டிவிகளுடன் இணைக்கும் போது ஏறத்தாழ தியேட்டர் தர அனுபவத்தை பெறலாம். இது வேகமான செயல்திறன் மற்றும் முடிவில்லா பொழுதுபோக்கு விருப்பங்களை வழங்குகிறது.

Apple TV 4K என்பது டிடிஎச் பாக்ஸ் போன்ற சாதனம் ஆகும். இதில் கேபிள் டிவிகள் ஆதரவு கிடைக்காது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இருப்பினும் சன் நெக்ஸ்ட், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு அணுகலை பெறலாம். கேம்களும் இதில் வழங்கப்படுகிறது. ஐபோன் 13 சீரிஸை இயக்கும் அதே ஏ15 பயோனிக் சிப்செட் மூலம் தான் Apple TV 4K சாதனமும் இயக்கப்படுகிறது. ஆப்பிள் டிவி டால்பி விஷனுடன் கூடிய HDR 10+ ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ஸ்மார்ட் ஹோம் அக்சஸெரீஸ்

ஸ்மார்ட் ஹோம் அக்சஸெரீஸ்

Apple TV 4K ஆனது இரண்டு கட்டமைப்புகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Apple TV 4K (Wi-Fi) ஆனது 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. Apple TV 4K இல் Wi-Fi + Ethernet, வேகமான நெட்வொர்க்கிங் மற்றும் ஸ்ட்ரீமிங்கிற்கான கிகாபிட் ஈதர்நெட்டிற்கான ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ஹோம் அக்சஸெரீஸ்கள் உடன் இந்த சாதனத்தை இணைக்க முடியும்.

4கே தர வீடியோ ஆதரவுடன் டால்பி சவுண்ட்

4கே தர வீடியோ ஆதரவுடன் டால்பி சவுண்ட்

ஆப்பிள் டிவி 4கே ஆனது பயனர்களுக்கு பிடித்தமான பல பொழுதுபோக்கு அம்சத்தை வீட்டில் இருந்தபடியே அணுகலாம். மிகப் பெரிய திரையில் 4கே தர வீடியோவை இதன்மூலம் பெற முடியும். பெரிய அளவு டிஸ்ப்ளே உள்ள டிவிகளை வாங்கிவிட்டு அதற்கு ஏற்ப செட்டாப் பாக்ஸ் கிடைக்கவில்லையே என்று வருந்துபவர்களுக்கு இந்த சாதனம் வரப்பிரசாதமாக இருக்கும். 4கே தர வீடியோ ஆதரவுடன் டால்பி சவுண்ட் வெளியீடும் கிடைக்கும். உங்களிடம் யமஹா போன்ற சிறந்த ஆம்ப்ளிஃபயர்கள் இருந்தால் இந்த சாதனத்தின் மூலம் வேற லெவல் சவுண்ட் அவுட்புட்டை பெறலாம்.

அதிக சக்தி வாயந்த அம்சங்கள்

அதிக சக்தி வாயந்த அம்சங்கள்

முந்தைய மாடல் ஆப்பிள் டிவி 4கே சாதனத்தை விட பல மடங்கு அதிக சக்தி வாயந்த அம்சங்கள் உடன் இது வெளியாகி இருக்கிறது. குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பக்கூடிய பல பொழுதுபோக்கு அம்சங்களை ஆப்பிள் டிவி 4கே மூலம் அனுபவிக்கலாம்.

Apple TV HD

Apple TV HD

இந்த சிரி ரிமோட் ஆனது முந்தைய தலைமுறையின் அதே வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டைக் கொண்டிருக்கிறது. யூஎஸ்பி டைப்-சி போர்ட் மூலம் இதை சார்ஜ் செய்யலாம். இந்த Siri ரிமோட் ஆனது அனைத்து தலைமுறை Apple TV 4K மற்றும் Apple TV HD ஆகியவற்றுக்கும் இணக்கமானது. கேம்கள் போன்ற பயன்பாடுகளுக்கு இந்த ரிமோட் சிறந்த அனுபவத்தை அளிக்கும்.

50 சதவீதம் அதிக செயல்திறன்

50 சதவீதம் அதிக செயல்திறன்

முந்தைய தலைமுறை ஆப்பிள் டிவி 4கேவை விட இது 50 சதவீதம் அதிக செயல்திறன் வேகத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஸ்னாப்பியர் யுஐ அனிமேஷன் ஆதரவு இதில் இருக்கிறது. HDR10+ ஆதரவுடன் சிறந்த காட்சி தரத்தை வழங்குகிறது. துடிப்பான வண்ணங்கள், துல்லியமான காட்சிகள் என டிவியின் அனுபவம் மேம்பட்டு இருக்கும். Dolby Atmos, Dolby Digital 7.1 மற்றும் Dolby Digital 5.1 சரவுண்ட் சவுண்டுடன் கூடிய ஹோம் தியேட்டர் அனுபவத்தை இதில் பெறலாம்.

என்னதான் விலை உயர்ந்த ஸ்மார்ட் டிவி வாங்கினாலும் அதை இயக்குவதற்கு ஸ்ட்ரீமிங் மற்றும் டிஷ் பாக்ஸ் ஆதரவு பிரதானம். நீங்கள் எத்தனை விலை உயர்ந்த ஸ்மார்ட்டிவியை வாங்கினாலும் அதற்கு இதுபோன்ற ஸ்ட்ரீமிங் பாக்ஸ் என்பது பிரதான ஒன்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Best Mobiles in India

English summary
What is the use of Apple TV 4K (2022) available for Rs 14,900? Perfect device to Turn your Home into a Theater

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X