மதுரையில் பிறந்த கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் இணைந்த அவரது மேற்பார்வையின் கீழ், கூகுளின் இணைய உலவியான க்ரோம், மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட் ஆகியவை உருவாக்கப்பட்டன.

|

கூகுள் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது, மேலும் தற்சமயம் இந்நிறுவனத்தின் சிஇஒ மதுரையை சேர்ந்த சுந்தர் பிச்சை என்பவர் குறிப்பிடத்தக்கது. மேலும் சுந்தர் பிச்சை அவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் மதுரை மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார, இவருடைய அம்மா-லட்சுமி, அப்பா-ரகுநாத பிச்சை.

மதுரையில் பிறந்த  சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு  தெரியுமா?

குறிப்பாக சுந்தர் பிச்சை சென்னை ஜவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பு, வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல்,ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டம், வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம், 2004-ஆம் ஆண்டில் கூகுளில் இணைந்த சுந்தர் பிச்சை இப்பொது கூகுள் நிறுவனத்தின் சிஇஓ - இது எல்லோருக்குமே தெரியும்.

லார்ரி பேஜ்

லார்ரி பேஜ்

கூகுள் நிறுவனத்தில் 2004 ஆம் ஆண்டில் இருந்து பணியாற்றி வரும் சுந்தர் தனது கடமை மற்றும் அர்ப்பனிப்பு மூலம் என்னை வெகுவாக கவர்ந்தார் என்றும் லார்ரி பேஜ் தெரிவித்திருக்கின்றார். மேலும் எனக்கு கிடைக்கும் நேரத்தை சுந்தர் பிச்சையுடன் செலவிட்டு அதன் மூலம் நிறுவனத்திற்கு என்னால் முடிந்தவரை உதவியாக இருப்பேன் என்றும் லார்ரி குறிப்பிட்டிருக்கின்றார்.

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் இணைந்த அவரது மேற்பார்வையின் கீழ், கூகுளின் இணைய உலவியான க்ரோம், மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட் ஆகியவை உருவாக்கப்பட்டன.கூகுள் நிறுவனத்திற்கு வருமானத்தைப் பெற்றுத்தரும் கூகுள் தேடல், விளம்பரம்,கூகுள் மேப் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட தயாரிப்புகளில் சுந்தர் பிச்சையின் பங்களிப்பு இருந்துவந்தது.

சுந்தர் பிச்சையின் தந்தை

சுந்தர் பிச்சையின் தந்தை

இரு அறைகளைக் கொண்ட வீட்டில் வசித்துவந்த சுந்தர் பிச்சையின் வீட்டில் சொந்தமாக டிவி, கார் போன்றவை இருந்திருக்கவில்லை. ஆனால், சுந்தர் பிச்சையின் தந்தை,தன் மகன்களின் கல்வியில் கூடுதல் கவனத்தைச் செலுத்திவந்தார்.ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பனியில் பணியாற்றிய சுந்தர் பிச்சையின் தந்தை ரகுநாத பிச்சை, வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு, அன்று தன் வேலையில்
தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து மகன்களிடம் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறினார்.கூகுள் நிறுவனத்தில் சேரும் முன் சுந்தர் பிச்சை பொறியாளராக மெக்கன்சி எனும் நிறுவனத்தில் பணியாற்றினார்.

2,500 கோடி:

2,500 கோடி:

தற்சமயம் கூகுள் பங்குகளின் உயர்வால் இவரது சம்பளம் 2,500 கோடியை தொட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்சமயம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆழமான சிந்தனையின் போது

ஆழமான சிந்தனையின் போது

பழக்கம் ஆழமான சிந்தனையின் போது வெளியே நடந்து செல்லும் பழக்கம் கொண்டவர் சுந்தர் பிச்சை. சில சமயங்களில் மீட்டிங்கில் இருந்து எழுந்து வெளியே சென்று விடுவாராம் திரும்பி உள்ளே வரும் போது பிரச்சினைக்கு சரியான தீர்வை கையோடு கொண்டு வருவாராம்.

Best Mobiles in India

English summary
What is the salary of Google CEO per month: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X