Jio 5G விலை என்ன? JioPhone 5G இன்று அறிமுகமா? RIL AGM 2022 நிகழ்வை லைவ் பார்ப்பது எப்படி?

|

முகேஷ் அம்பானி தலைமையில் செயல்பட்டுக் கொண்டிருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) இப்போது, அவருடைய மகனான ஆகாஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் தனது 45வது ஆண்டு பொதுக்கூட்ட நிகழ்வை ஆகஸ்ட் 29 ஆம் தேதி (இன்று) பிற்பகல் 2 மணிக்கு நடத்தவிருக்கிறது. ஆகாஷ் அம்பானி தலைவரான பிறகு நடக்கும் முதல் RIL AGM 2022 மீட் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த RIL AGM 2022 நிகழ்வில் என்ன எதிர்பார்க்கலாம்?

இந்த RIL AGM 2022 நிகழ்வில் என்ன எதிர்பார்க்கலாம்?

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய மற்றும் வருங்கால முதலீட்டாளர்களுக்காக பொதுவாக ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வில், நிறுவனம் 5ஜி தொடர்பான விபரங்கள் மற்றும் 5ஜி இணக்கத்துடன் இயங்கும் புதிய JioPhone 5G மாடலை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வின் போது, நிறுவனத்தின் அடுத்த நிதியாண்டு திட்டங்கள் மற்றும் அடுத்த சில ஆண்டுகளின் நிறுவனம் என்ன செய்யத் திட்டமிட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படும்.

மலிவு விலையில் 5ஜி மற்றும் 5ஜி போன் அறிமுகம் செய்யப்படுமா?

மலிவு விலையில் 5ஜி மற்றும் 5ஜி போன் அறிமுகம் செய்யப்படுமா?

கடந்த 2021 ஆம் ஆண்டில் நடந்த அதன் கடைசி AGM நிகழ்வின் போது, நிறுவனம் இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் மற்றும் மலிவு விலையில் 5ஜி போனுக்கான திட்டங்களை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வாக்குறுதியை, ஜியோ இந்த ஆண்டு நிறைவேற்றும் என்று நம்பப்படுகிறது. காரணம், ஜியோ சமீபத்தில் நடந்து முடிந்த 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டது.

உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?

5ஜி போனுடன் சேர்த்து புதிய லேப்டாப்பை நிறுவனம் அறிமுகம் செய்யுமா?

5ஜி போனுடன் சேர்த்து புதிய லேப்டாப்பை நிறுவனம் அறிமுகம் செய்யுமா?

அதேபோல், நாட்டில் 5ஜி சேவையைக் குறைந்த விலையில் அறிமுகம் செய்யும் முதல் நிறுவனமாக ஜியோ இருக்கும் என்றும் ஏலத்தின் முடிவில் ஜியோ கூறியிருந்தது கவனிக்கத்தக்கது. இதேபோல், இந்த நிகழ்வின் போது ஜியோ புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கிறோம். இத்துடன் சேர்த்து, ரிலையன்ஸ் நிறுவனம் அதன் புதிய மலிவு விலையில் ஜியோபுக் என்ற லேப்டாப் மாடலையும் அறிமுகம் செய்ய அதிக வாய்ப்புள்ளது.

RIL AGM 2022 நிகழ்வை எப்படி லைவ் பார்ப்பது?

RIL AGM 2022 நிகழ்வை எப்படி லைவ் பார்ப்பது?

RIL அதன் AGM 2022 நிகழ்வை இன்று பிற்பகல் 2 மணி முதல் லைவ் ஸ்ட்ரீம் செய்யும் என்று அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் அப்டேட்ஸ் யூடியூப் சேனலின் மூலம் இந்த நிகழ்வை ரசிகர்கள் லைவ் ஆகப் பார்க்கலாம். AGM 2022 நிகழ்வு ஜியோவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும் ஸ்ட்ரீம் செய்யப்படும். இந்த நிகழ்வு பற்றிய அப்டேட்களை பெற ரசிகர்கள் ட்விட்டரில் '#RILAGM' மற்றும் '#WeCare' என்ற ஹேஷ்டேக்குகளை பின்தொடரலாம் என்று ரிலையன்ஸ் கூறியுள்ளது.

Jio, Airtel, Vi பயனர்களே இலவசமாக Disney+ Hotstar வேண்டுமா? அப்போ இதத்தான் நீங்க செய்யணும்!Jio, Airtel, Vi பயனர்களே இலவசமாக Disney+ Hotstar வேண்டுமா? அப்போ இதத்தான் நீங்க செய்யணும்!

RIL AGM 2022 நிகழ்வின் மூலம் 2ஜி இல்லாத இந்தியாவை ரிலையன்ஸ் உருவாக்குமா?

RIL AGM 2022 நிகழ்வின் மூலம் 2ஜி இல்லாத இந்தியாவை ரிலையன்ஸ் உருவாக்குமா?

ரிலையன்ஸ் அதன் ஜியோ 5ஜி திட்டத்தின் விலை விபரங்கள் மற்றும் அதன் வெளியீட்டுக் காலம் குறித்த முக்கிய தகவலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் 5ஜி திட்டங்களை வழங்குவதை இலக்காக ஜியோ கொண்டுள்ளது. ரிலையன்ஸ் அதன் 4G மற்றும் 5G சேவைகளுடன் இந்தியாவை 2G-mukt (free of 2G) நாடாக மாற்றம் செய்யும் என்று நம்புகிறது.

ரூ.4,000 விலை வரம்பில் ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி

ரூ.4,000 விலை வரம்பில் ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி

2G-mukt இந்தியாவை முன்னிட்டு நிறுவனம் கடந்த ஆண்டு தனது ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி சாதனத்தைக் கூகுளுடன் இணைந்து அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த விலையில் மக்களை 4ஜி நோக்கி மாற இந்த டிவைஸை ஜியோ நிறுவனம் ரூ.6,000 விலைக்கு கீழ் பிரத்தியேகமான ஆண்ட்ராய்டு OS உடன் அறிமுகம் செய்தது. இப்போது இதன் விலை ரூ.4,000 விலை வரம்பில் கிடைக்கிறது. இந்த ஆண்டின் நிகழ்வில், நிறுவனம் 5G இயக்கப்பட்ட புதிய ஜியோ ஸ்மார்ட்போனை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

iPhone 14 அறிமுக தேதி உறுதியானது.! ஆப்பிள் Far Out ஈவென்ட் நடக்கும் நேரம் இது தான்.!iPhone 14 அறிமுக தேதி உறுதியானது.! ஆப்பிள் Far Out ஈவென்ட் நடக்கும் நேரம் இது தான்.!

புதிய JioPhone 5G போனை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

புதிய JioPhone 5G போனை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

இது JioPhone 5G என்று அழைக்கப்படலாம். ஆனால், இதன் விவரங்கள் இன்னும் தெளிவாக வெளியாகவில்லை. இந்த 5ஜி ஸ்மார்ட்போனை நிறுவனம் ரூ.10,000 விலைக்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, ரிலையன்ஸ் ஜியோபுக் லேப்டாப் பற்றிய விவரங்களையும் இந்த நிகழ்வில் பகிர்ந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில மணி நேரத்தில் முழு விபரங்களுடன் உங்களை அப்டேட் செய்கிறோம். அதுவரை காத்திருங்கள்.

Best Mobiles in India

English summary
What is the price of Jio 5G? JioPhone 5G launch today? How to watch RIL AGM 2022 event live?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X