உங்க வீட்டுக்கு இனி திருட்டு பயமில்லை.. புது Airtel XSafe சேவை மூலம் 360° முழு பாதுகாப்பு.!

|

பாரதி ஏர்டெல் இன்று Xsafe என்ற அழைக்கப்படும் சர்வைலென்ஸ் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த Xsafe சேவை எளிதாக இயக்கக்கூடிய, எண்டு-டு-எண்டு என்கிரிப்ஷன் உடன் Wi-Fi அடிப்படையிலான மேம்பட்ட கேமராக்களை இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த Xsafe கேமராக்கள், வாடிக்கையாளர்கள் வெளியில் இருக்கும் போதும் கூட அவர்களுடைய வீடுகளுடன் இணைந்திருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த Airtel Xsafe சேவை என்ன செய்யும் என்று பார்க்கலாம்.

ஏர்டெல் Xsafe என்றால் என்ன?

ஏர்டெல் Xsafe என்றால் என்ன?

ஏர்டெல் Xsafe சேவை மேம்பட்ட சர்வைலென்ஸ் கேமராக்களைப் பயன்படுத்துகிறது. இது மோஷன் டிடெக்ஷன் அம்சத்தில் செயல்படுத்துகிறது. நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுடன் சாட் செய்ய இந்த கேமரா அனுமதிக்கிறது. ஆம், இதில் கேமராவுடன் மைக் வழங்கப்படுகிறது. இதற்கான பிரத்தியேகமான ஏர்டெல் Xsafe ஆப் மூலம் உங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்பதைப் 360 டிகிரி வியூவை வழங்குகிறது. இந்த கேமரா மோஷன் டிடெக்ஷன் உடன் வருவதனால், பாதுகாப்பிற்கும் சிறப்பானது.

செக்யூரிட்டி கேமராவை கண்ட்ரோல் செய்ய தனி ஆப்ஸ்-ஆ?

செக்யூரிட்டி கேமராவை கண்ட்ரோல் செய்ய தனி ஆப்ஸ்-ஆ?

பிரத்தியேகமான ஆப்ஸ் மூலம், நீங்கள் விரும்பும் போதெல்லாம் உங்களை வீட்டுடன் இணைந்திருக்கச் செய்கிறது. நீங்கள் வீட்டில் இல்லதாக நேரத்தில், முழு நாள் என்ன நடந்தது என்ற ஊட்டத்தையும் இது தெளிவாக காண்பிக்கிறது. ஆம், இது ஏர்டெல்லின் பாதுகாப்பான கிளவுட் ஸ்டோரேஜ் அம்சத்துடன் வருகிறது. மொபைல் ஆப்ஸ் மூலம் எந்த நேரத்திலும் பதிவு செய்யப்பட்ட வீடியோவை நீங்கள் பார்வையிடலாம்.

Unknown Number விபரங்களை இலவசமாக தெரிந்துகொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!Unknown Number விபரங்களை இலவசமாக தெரிந்துகொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

ஏர்டெல் Xsafe அம்சத்தின் சிறப்பு என்ன தெரியுமா?

ஏர்டெல் Xsafe அம்சத்தின் சிறப்பு என்ன தெரியுமா?

வீடியோக்கள் அனைத்தும் எண்ட்-டு-எண்டு என்க்ரிப்ட் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பான பாதுகாப்பு அம்சம், உங்களுக்குக் குறைந்த விலையில் அணுகக் கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. கேபிள் டிவி இணைப்பு போல, இனி உங்கள் வீட்டிற்கு தேவையான பாதுகாப்பு செக்யூரிட்டி சேவையை இனி நீங்கள் ஏர்டெல் Xsafe அம்சத்தின் மூலம் பெற்றுப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இந்த Xsafe அம்சத்தின் கீழ் என்ன கிடைக்கும் என்று பார்க்கலாம்.

2-வே காண்டாக்ட் அம்சம் கூட இருக்கிறதா? கேமரா வழியாக பேசலாமா?

2-வே காண்டாக்ட் அம்சம் கூட இருக்கிறதா? கேமரா வழியாக பேசலாமா?

ஏர்டெல் நிறுவனம் இப்போது உங்களுக்கு 3 கேமரா மாடல்களுடன் இந்த ஏர்டெல் Xsafe அம்சத்தை வழங்குகிறது. இதில் முதலாவது மாடல், ஸ்டிக்கி இன்டோர் கேமராவாகும். இது 7-நாள் கிளவுட் ஸ்டோரேஜ் வீடியோ ரெக்கார்டிங் உடன் வருகிறது. இது 2-வே காண்டாக்ட் அம்சத்தையும் ஆதரிக்கிறது. வீட்டின் சுற்றளவில் நடக்கும் அனைத்தையும் கண்காணிக்கிறது. மொபைல் ஆப்ஸ் மூலம் வீடியோவிற்கான பல நபர் அணுகல் போன்ற அம்சங்களை இது கொண்டுள்ளது.

இது மோசடி மாதிரில இருக்கு.! 28 நாள் ரீசார்ஜ் பிளான் பின்னணியில் உள்ள பகிரங்கமான உண்மை.!இது மோசடி மாதிரில இருக்கு.! 28 நாள் ரீசார்ஜ் பிளான் பின்னணியில் உள்ள பகிரங்கமான உண்மை.!

360 டிகிரி இண்டோர் கேமரா

360 டிகிரி இண்டோர் கேமரா

இந்த செக்யூரிட்டி கேமரா உங்களுக்கு மோஷன் சென்சிட்டிவிட்டி கட்டுப்பாட்டுடன் வருகிறது. இது ஸ்மார்ட் டிராக்கிங், பிளைண்ட் ஸ்பாட் இல்லாத பாதுகாப்பு போன்ற அம்சங்களுடன் வருகிறது. மற்ற அணைத்து அம்சங்களும் முந்தைய கேமராவில் இருப்பது போல அப்படியே இருக்கிறது. அதேபோல், ஸ்பாட்லைட் மற்றும் சைரன் ஆகிய மாடல்கள் AI அடிப்படையிலான கேமரா அம்சத்துடன், நைட் விஷன் போன்ற அம்சங்களும் இதில் உள்ளது.

Airtel XSafe யாருக்கெல்லாம் கிடைக்கிறது?

Airtel XSafe யாருக்கெல்லாம் கிடைக்கிறது?

மும்பை, டெல்லி-என்சிஆர், பெங்களூர், சென்னை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட 40 நகரங்களில் இப்போது இந்த Xsafe சேவை கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர்டெல் Xsafe சேவையைப் பெற வாடிக்கையாளர்கள் XSafe இணையதளத்திற்குச் செல்லலாம் அல்லது Airtel Thanks ஆப்ஸ் மூலம் லாகின் செய்வதன் மூலம் Xsafe சாதனங்களை முன்பதிவு செய்யலாம் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது.

Airtel XSafe இன் விலையில் கிடைக்கும்?

Airtel XSafe இன் விலையில் கிடைக்கும்?

இந்த பண்டிகைக் காலத்தில், ஏர்டெல் அதன் Xsafe தயாரிப்புகளுக்குக் குறிப்பிட்ட கால தள்ளுபடியை வழங்குகிறது. இதன் படி, ஸ்டிக்கி கேமராவின் விலை ரூ.2,499 ஆகவும், 360° கேமராவின் விலை ரூ.2,999 ஆகவும் மற்றும் ஆக்டிவ் டிஃபென்ஸ் கேமராவின் விலை ரூ.4,499 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் Xsafe சேவைக்கான ஆண்டு சந்தாக் கட்டணமாக ரூ.999 செலுத்தி முதல் 1 மாத சந்தாவை இலவசமாக அனுபவிக்கலாம்.

இனி YouTube வீடியோக்களை யூடியூப் தளத்திலேயே டவுன்லோட் செய்யலாமா? புது வசதி சூப்பர்.!இனி YouTube வீடியோக்களை யூடியூப் தளத்திலேயே டவுன்லோட் செய்யலாமா? புது வசதி சூப்பர்.!

எக்ஸ்ட்ரா கேமராவிற்கு எக்ஸ்டரா கட்டணமா?

எக்ஸ்ட்ரா கேமராவிற்கு எக்ஸ்டரா கட்டணமா?

நீங்கள் கூடுதலாக 1 அல்லது அதற்கு மேலான கேமராக்களை ஆட்-ஆன் செய்ய விரும்பினால், நீங்கள் ரூ.699 என்ற எக்ஸ்ட்ரா கட்டணத்தைச் செலுத்திட வேண்டும். இந்த Xsafe சேவைக்கான கட்டணங்களை மாதாந்திர போஸ்ட்பெய்டு கட்டணம் அல்லது பிராட்பேண்ட் பில்களுடன், Xsafe சந்தாக் கட்டணங்களை ஒருங்கிணைக்கும் தீர்வைத் தயார் செய்து வருவதாக ஏர்டெல் கூறுகிறது. இது விரைவில் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
What Is The Price Of Airtel XSafe Surveillance Solution Launched in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X