ரூ.5000 வரும்.. Jumped Deposit மோசடி.. UPI ஆப் பயன்படுத்தும் மக்கள் உஷார்.. தப்பிப்பது எப்படி?
இந்தியாவில் நகரங்கள் முதல் துவங்கி உள்ளூர் சந்தைகள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர். அதாவது யுபிஐ (UPI) செயலிகள் செயலிகள் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, மளிகை கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இந்த யுபிஐ வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. ஆனால் யுபிஐ வசதியை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். அதாவது தற்போது ஜம்ப்ட் டெபாசிட் மோசடி (Jumped Deposit Scam) செய்து நமது பணத்தை சுலபமாகத் திருடுகின்றனர். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது ஸ்மார்ட்போன்கள், அன்லிமிடெட் டேட்டாக்கள் என்ற வசதிகள் எப்போது அறிமுகமானதோ, அன்றிலிருந்து புதுசு புதுசாக தினம் தினம் மோசடிகள் உருவாகி வருகிறது. அதற்கு முன்பும் இருக்கதான் செய்ததது, ஆனால் இந்த அளவுக்கு அதிகமாக இல்லை என்றே கூறலாம். அதன்படி இப்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட் தான் ஜம்ப்ட் டெபாசிட் மோசடி. இந்த புதிய மோசடி குறித்து கடந்த டிசம்பர் மாதமே தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார்ஜ எச்சரித்திருந்தனர்.
ஜம்ப்ட் டெபாசிட்: அதாவது மோசடியாளர் தன்னிடம் இருக்கும் தரவுகளை வைத்து, தான் யாரை மோசடி செய்யப்போகிறோம் என்பதை முதலில் திட்டமிடுவார்கள். அடுத்து திட்டமிட்ட நபருக்கு ரூ.5000 போன்ற ஒரு சிறிய தொகையை யு.பி.ஐ ஆப்கள் மூலம் அனுப்புவார்கள். இந்த தொகையை பெற்ற நபர் இதுகுறித்த குழப்பத்தில் இருக்கும்போதே, அந்த நபருக்கு யுபிஐ ஆப்பில் பெரிய தொகைக்கான ரெக்வஸ்ட் வரும்.
உடனே நமக்கு இந்தத் தொகை வரவில்லையே என்று பதட்டத்தில் அந்த நபர் பேங்க் பேலன்ஸை செக் செய்வார். அப்போது அவர் போடும் பின் நம்பர் இந்த பண ரெக்வஸ்டை ஒகே செய்துவிடும். இதனால் மோசடி நபருக்கு பெரிய தொகை சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மோசடியில் தப்பிப்பது எப்படி? அதாவது தெரியாத ஒரு நபரிடம் இருந்து சிறிய தொகை, பெரிய தொகை என எது வந்தாலும், 15-20 நிமிடங்களுக்கு பேங்க் பேலன்ஸை செக் செய்யவேண்டாம். இல்லையெனில், அப்படி தொகை வந்த உடனே பின் நம்பர் போடுகிறீர்கள் என்றால் வேண்டுமென்றே தவறான பின்னை பதிவிடுங்கள். இந்த இரண்டில் எதாவது ஒன்றை செய்தால் கூட, பண ரெக்வஸ்ட் ரத்தாகி விடும். இதானல் மோசடியில் எளிதாக தப்பிக்கலாம்.

குறிப்பாக இந்த டிஜிட்டல் (digital) யுகத்தில் ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருப்பது அனைவரின் கடமையாகும். கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழி கேள்விப்பட்டிருப்போம் அதேபோல் இந்த டிஜிட்டல் யுகத்திலும் இருக்க வேண்டும்.சிறுக சிறுக சேமித்த பணம், உங்கள் முக்கிய புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தும் டிஜிட்டல் மையமாக்கப்பட்டிருக்கின்றன.
அதுவும் டிஜிட்டல் இந்தியாவில் எச்சரிக்கையாக இருக்கும்படி பல்வேறு வகையில் அறிவுறுத்தப்பட்டு வந்தாலும் ஆங்காங்கே மோசடி கும்பல் விரிக்கும் வலையில் பொதுமக்கள் சிக்கிக் கொள்கின்றனர். எனவே யுபிஐ, ஆன்லைன் பணப் பரிமாற்றம் என அனைத்து விஷயங்களிலும் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








