கூகுள் மேப்ஸ் செயலியில் தெரியும் வண்ணக் கோடுகள்.. ஒவ்வொரு இந்தியரும் தெரிஞ்சுக்கணும்.. ஏன்?
கூகுள் நிறுவனம் கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்களைச் சேர்த்து வருகிறது. குறிப்பாக இந்த கூகுள் மேப்ஸ் செயலி வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. நாம் அதிகம் பயன்படுத்தும் இந்த கூகுள் மேப்ஸ் செயலியில் சாலைகள் பல வண்ணக் கோடுகள் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? அவற்றின் பொருள் என்ன என்று இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அதாவது கூகுள் மேப்ஸில் இருக்கும் வெவ்வேறு வண்ணங்கள் உங்கள் பயணத்தைப் பற்றிய சரியான தகவல்களை உங்களுக்கு வழங்குகின்றன. இந்த வண்ணங்களின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டால். உங்கள் பயணம் இன்னும் எளிதாகிவிடும்.

பச்சை நிறம்
கூகுள் மேப்ஸ் பயன்படுத்தி நீங்கள் பயணம் செய்யும் போது, சாலை பச்சை நிறத்தில் தோன்றினால், அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லை என்று அர்த்தம். எனவே நீங்கள் எந்த தடையும் இல்லாமல் வசதியாகப் பயணம் செய்யலாம்.
ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறம்
பொதுவாக இந்த ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறங்கள் சாலையில் சிறிது கூட்டம் இருப்பதைக் குறிக்கிறது. வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன, ஆனால் அவை நின்றுவிடவில்லை. பெரிய அளவில் தாமதம் ஆகாது. நீங்கள் செல்லும் வழியில் மிதமான நெரிசல் இருப்பதை இது காட்டுகிறது.
சிவப்பு நிறம்
இந்த சிவப்பு வண்ணத்தைப் பார்த்தவுடன் உஷராக இருங்கள். இது அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள இடத்தைக் குறிக்கும். மேலும் இது அடர் சிவப்பு நிறமாக மாறினால், அங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் இருப்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். முடிந்த வரையில் இந்த வழியைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.
நீல நிறம்
கூகுள் மேப்ஸில் நீங்கள் ஒரு இடத்தை தேடும்போது, உருவாகும் நீல நிறக் கோடுதான் உங்கள் பயணத்தின் முக்கிய வழித்தடம் ஆகும். குறிப்பாக இந்த வழியில் செல்லும்படி கூகுள் மேப்ஸ் உங்களுக்கு அறிவுறுத்துகிறது. இதுவே பெரும்பாலும் குறைந்த தூரத்திலும் உங்களை இலக்கை அடைய உதவும் வழி ஆகும்.
ஊதா நிறம் (பர்பிள்)
கூகுள் மேப்ஸில் சில சமயங்களில் கூகுள் மேப்ஸ் உங்களுக்கு மற்றொரு விருப்பத்தை வருகிறது, அது ஊதா நிறத்தில் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த வழி சற்று நீண்டதாக இருக்கலாம் அல்லது அதில் போக்குவரத்து இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு அவசர சூழ்நிலைகளில் அல்லது முக்கிய வழித்தடத்தில் கடுமையான பிரச்சனை இருக்கும்போது, இந்த மாற்று வழிகளைப் பயன்படுத்தலாம்.

பழுப்பு நிறம் (பிரவுன்)
இந்த பழுப்பு நிறம் மலைகள் மற்றும் மேடான பகுதிகளைக் குறிக்கிறது, சமவெளிகள் அல்ல. நீங்கள் ஒரு இடத்தில் பழுப்பு நிறத்தைக் கண்டால், அங்கே உயரமான பகுதிகள் அல்லது மலைப்பாதைகள் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம். பொதுவாக மலையேற்றம் செய்பவர்களுக்கும், சாகசப் பயணம் செய்பவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பின்பு இந்த வழிகள் சவாலானதாக இருக்கும் என்பதால் கூடுதல் கவனத்துடன் பயணம் செய்ய வேண்டும்.
பொதுவாக கூகுள் மேப்ஸில் காட்டப்படும் வண்ணங்களில் அர்த்தம் பலருக்குத் தெரிவதில்லை. இதன் காரணமாக, அவர்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்கிறார்கள் அல்லது தவறான வழியில் செல்கிறார்கள். எனவே இந்த வண்ணங்களை நீங்கள் அடையாளம் காண முடிந்தால், உங்கள் நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும். இது உங்கள் பயணத்தை மிக வசதியாக மாற்றும்.


Click it and Unblock the Notifications








