5.5ஜி நெட்வொர்க் என்றால் என்ன? எந்தெந்த போன்களுக்கு இந்த சேவை கிடைக்கும்? இதோ முழு விவரம்.
ஜியோ (Jio) நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் தயாரிப்புகளுக்கும் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜியோ நிறுவனம் 5.5ஜி (5.5G) எனும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அதாவது ஜியோ நிறுவனம் தனது ஜியோ தனது 5ஜி (Jio 5G) சேவையை மேம்படுத்தி, புதிதாக சூப்பர் பாஸ்ட் மின்னல் வேகத்தில் (super fast speed internet service) இணைய சேவையை வழங்கும் 5.5ஜி நெட்வொர்க் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் 5ஜி மற்றும் 5.5ஜி வித்தியாசம் என்ன?
5ஜி சேவைையின் மேம்பட்ட பதிப்பு இந்த 5.5ஜி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5ஜி உடன் ஒப்பிடும்போது 5.5ஜி சிறந்த இணைய வேகம் மற்றும் மேம்பட்ட நெட்வொர் கனெக்ஷனை வழங்குகிறது. இது 3GPP கீழ் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் பயனர்கள் ஒரே நேரத்தில் பல நெட்வொர்க் செல்களுடன் (மல்டி-செல்) இணைப்பு ஏற்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் வழக்கமாக ஒரு மொபைல் ஒரு டவரில் இருந்து சிக்னலை பெரும். ஒருவேளை டவரில் வலிமையான சிக்னல் கிடைக்கவில்லை என்றால் வேறு ஒரு டவருக்கு மாறும். ஆனால் இந்த 5.5ஜி தொழில்நுட்பத்தில் மொபைலால் ஒரு நேரத்தில் பல டவர்களில் இருந்து சிக்னலை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது வேகமான பதிவிறக்கம் மற்றும் தரவு பரிமாற்ற வேகத்தை உறுதி செய்கிறது. பின்பு இந்த 5.5ஜி நெட்வொர்க் மூலம் அதிகபட்சம் நொடிக்கு 10ஜிபி வரை இணைய வேகத்தைப் பெறலாம் என்று கூறப்படுகிறது. பின்பு அப்லோட் வேகமும் நொடிக்கு 1ஜிபி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் 5ஜி விட 5.5ஜி ஆனது பல மடங்கு வேகத்தை உறுதி செய்கிறது.
சமீபத்தில் ஒன்பிளஸ் 13 போனின் அறிமுகத்தின் போது இந்த 5.5ஜி சேவையின் டெமோ வீடியோ காட்டப்பட்டது. அதில் டவுன்லோடிங் வேகம் 1014.96 Mbps ஆக ஜியோவின் நெட்வொர்க்கில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 5ஜி நெட்வொர்கில் நமது நாட்டில் நொடிக்கு 277.78 Mbps என்ற வேகத்தில் இணையம் கிடைக்கும். குறிப்பாக 5ஜி வேகத்தை விட 5.5ஜி வேகம் 380% அதிகமாகும்.

அதேபோல் 5.5ஜி தொழில்நுட்பம் மூலம் வெறும் 1 நொடிகளில் நம்மால் ஹெச்டி தரத்தில் 5 முழு படங்களை டவுன்லோடு செய்துவிட முடியும். பின்பு techpp இணையதளம் வெளியிட்ட தகவலின்படி, ஒன்பிளஸ் 13, ஒன்பிளஸ் 13ஆர், ஒப்போ ஃபைன்ட் எக்ஸ்7, ஒப்போ ஃபைன்ட் எக்ஸ்7 அல்ட்ரா, ஹானர் மேஜிக் 6 சீரிஸ், விவோ எக்ஸ் ஃபோல்ட் 3, விவோ எக்ஸ்100 சீரிஸ், ஐக்யூ 12 போன்ற போன்கள் இந்த 5.5ஜி தொழில்நுட்பத்துக்கு ஆதரவை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்பு இந்த 5.5ஜி சேவை வரும் காலங்களில் மற்ற ஸ்மாட்போன்களிலும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் உங்களிடம் இந்த 5.5ஜி சேவைக்கு இணக்கமான ஸ்மார்ட்போன்கள் ஏதேனும் இருந்தால், நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை, ஏனெனில் உங்கள் ஸ்மார்ட்போன் தானாகவே 5.5G நெட்வொர்க்குடன் இணைக்கப்படும். உங்கள் ஃபோனின் நெட்வொர்க் ஐகானுக்கு மேலே உள்ள 5GA ஐகான் மூலம் இது உறுதிப்படுத்தப்படும்.
photo credit: hindustantimes, jio, businesstoday


Click it and Unblock the Notifications








