Home
News

ஸ்மார்ட்போன் பேட்டரிகள் மாறப்போகிறதா? இனி சார்ஜ்ர் பவர் பேங்கை தேட வேண்டாம்.. மிரட்டலான புது தொழில்நுப்டம்..

ஸ்மார்ட்போன் பயனர்கள் அனைவரும் கொஞ்சம் கவனியுங்க.. அடுத்த ஆண்டு முதல் உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரிகள் முழுமையாக உருமாறப்போகின்றன. இனி சார்ஜ்ர், பவர் பேங்க் என்று எதையும் நீங்கள் அடிக்கடி பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகாது. காரணம், புதிய ஸ்டாக்டு-பேட்டரி தொழில்நுட்பம் வருகிறது.

ஸ்டேக்டு பேட்டரி (Stacked battery technology) தொழில்நுட்பமா? அப்படியென்றால் என்ன? இது என்ன செய்யும்? இது எப்படி நம்முடைய ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளை (smartphone battery life) அதிகரிக்கப்போகிறது என்று பார்க்கலாம் வாங்க. அடுத்த ஆண்டில் அறிமுகமாக ரெடி ஆகிக்கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24) மற்றும் ஐபோன் 16 (iPhone 16) பற்றி பேசுவது மிக விரைவில் என்று சிலருக்கு தோன்றலாம்.

ஸ்மார்ட்போன் பேட்டரிகள் மாறப்போகிறதா? இனி சார்ஜ்ர் பவர் பேங் வேண்டாமா?

ஆனால், இந்த 5G போன்கள் (5G mobiles) கொண்டு வரக்கூடிய புதிய தொழில்நுட்பம் பற்றி நாம் அறிந்துகொள்வது மிக முக்கியமானது. ஸ்மார்ட்ஃபோன்கள் காலப்போக்கில் பரிணாம வளர்ச்சியடைந்து வருகின்றன. ஆனால், இன்னும் மாற்ற முடியாத மிகப்பெரிய விஷயங்களில் ஒன்றாக, ஸ்மார்ட்போன்களின் பேட்டரி ஆயுள் (Battery life) பிரச்சினை திகழ்கிறது. ஒரு காலத்தில் ஃபீச்சர் ஃபோன்கள் இரண்டு நாட்கள் பேட்டரி ஆயுளைக் கொண்டிருந்தன.

ஆனால் இப்போது ஸ்மார்ட்போன்கள் வழங்கும் உயர்நிலை அம்சங்கள் காரணமாக சராசரி பயன்பாட்டுடன் ஒரு முழு நாள் பேட்டரி ஆயுளைப் பெறுவதே அரிதங்கிவிட்டது. இந்தச் சிக்கலைச் சரிசெய்வதற்கான வழியை OEMகள் இன்னும் கண்டுபிடிக்க முயன்று வருகின்றன. ஃபாஸ்ட் சார்ஜர்கள் (Fast chargers) இப்போது நமது வாழ்க்கையை எளிதாக்கியிருந்தாலும், பல நாட்கள் சார்ஜ்ரை தேடாமல், ஒரு போனை நீண்ட காலம் பயன்படுத்துவது தொலைதூரக் கனவாகவே உள்ளது.

ஆனால், இனி நிலைமை அப்படி இருக்கப்போவதில்லை என்கிறது சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனம். காரணம், சாம்சங் (Samsung) மற்றும் ஆப்பிள் (Apple) போன்ற நிறுவனங்கள் EV துறையில் இருந்து கடன் வாங்கப்பட்ட ஸ்டேக் செய்யப்பட்ட பேட்டரி தொழில்நுட்பத்தை அதன் ஸ்மார்ட்போன்களின் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் நிறுவனங்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் நீண்ட பேட்டரியை சேர்க்க உதவும் என்று கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போன் பேட்டரிகள் மாறப்போகிறதா? இனி சார்ஜ்ர் பவர் பேங் வேண்டாமா?

ஸ்லிம் சைஸ் போனில் நீண்ட நேர பேட்டரி ஆயுளை பெற இந்த புதிய தொழில்நுட்பம் கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை iPhone 16 மற்றும் Samsung Galaxy S24 Ultra ஆகியவற்றில் நாம் எதிர்பார்க்கலாம். எனவே, இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது நிறுவனங்களுக்கு பெரிய பேட்டரிகளை வழங்க அனுமதிக்கும். அதேபோல், இந்த தொழில்நுட்பம் ஆப்பிள் ஐபோன் 16 (Apple iPhone 16) தொடரிலும் இடம்பெறும்.

ஆனால், ஸ்டேக் செய்யப்பட்ட பேட்டரி தொழில்நுட்பம் (Stacked battery tech) என்றால் என்ன? அதன் முக்கிய நன்மைகள் என்ன ஸ்டேக் பேட்டரி தொழில்நுட்பம் என்பதன் பெயர் குறிப்பிடுவது போல, அடுக்கப்பட்ட பேட்டரி தொழில்நுட்பமானது செங்குத்தாக பல பேட்டரி அடுக்குகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைப்பதை உள்ளடக்குகிறது. ஒவ்வொரு அடுக்கிலும் முப்பரிமாண அமைப்பில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பேட்டரி செல்கள் உள்ளன.

சில போன்களில் நாம் பார்க்கும் இரட்டை செல் பேட்டரி (dual cell battery) தொழில்நுட்பத்தில் இருந்து இது வேறுபட்டது. இது ஒரு ஸ்மார்ட்போனுக்குள் இரண்டு தனித்தனி பேட்டரி செல்களைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது, பொதுவாக அருகருகே அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பேட்டரியும் சுயாதீனமாக இயங்குகிறது. ஆனால் சாதனத்திற்கு சக்தியை வழங்குவதற்காக இணைந்து செயல்படுகிறது.

ஸ்மார்ட்போன் பேட்டரிகள் மாறப்போகிறதா? இனி சார்ஜ்ர் பவர் பேங் வேண்டாமா?

இந்த பேட்டரி தொழில்நுட்பத்தின் நன்மைகள் என்ன? நீண்ட பேட்டரி, மெலிதான ஃபோன் வடிவமைப்பில் பொருத்த இது உதவுகிறது. அடுக்கப்பட்ட பேட்டரிகள் சிறிய இடத்தில் அதிக ஆற்றல் சேமிப்பை அனுமதிக்கின்றன. இது நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் மெலிதான சாதனங்களுக்கு வழிவகுக்கும். அடுக்கப்பட்ட வடிவமைப்புகள் சாதனத்தின் பரிமாணங்களை கணிசமாக மாற்றாமல் பெரிய பேட்டரிகளுக்கு இடமளிக்கும் வகையில் உள் இடத்தை திறமையாகப் பயன்படுத்துகின்றன.

மேம்படுத்தப்பட்ட வெப்பம் மற்றும் வெப்ப மேலாண்மை, பேட்டரி செயல்திறன், நீண்ட ஆயுள் மற்றும் பாதுகாப்பான சார்ஜ்ஜிங் முறை மற்றும் டிஸ்சார்ஜ் செய்யும் போது உருவாகும் வெப்பத்தை நிர்வகிப்பது போன்ற பல அம்சங்களை இந்த ஸ்டேக் பேட்டரிகள் கொண்டுள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
What is stacked battery technology and What are the benefits of Stacked Battery tech
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X