பலூனில் அமர்ந்து விண்வெளி பயணம்: முதற்கட்ட சோதனை வெற்றி- விண்வெளி பலூன் சுற்றுலாவுக்கு தயாரா?

|

மத்திய புளோரிடா விண்வெளி சுற்றுலா நிறுவனமான ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு சிறந்த மைல்கல்லை எட்டியது. அது கேப் கனராவில் இருந்து ஏவப்பட்ட விண்வெளி பலூனில் பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டதாகும். ஸ்பேஸ் பலூன் முதல் சோதனை கேப் கனாவெரலில் இருந்து நடத்தப்பட்டது. இதன் முதல் சோதனையில் விண்வெளி பலூன் 20 மைல் தூரம் எட்டியது.

விண்ணுக்கு ஏவப்பட்ட பலூன்

விண்ணுக்கு ஏவப்பட்ட பலூன்

ப்ரெவார்ட் கவுண்டியில் உள்ள விண்வெளி கடற்கரையில் உள்ள மையத்தில் இருந்து நெப்டியூன் ஒன் வாகனம் ஏவப்பட்டது. விண்வெளியில் இருந்து 108409 அடி அதாவது 20.5 மைல்கள் உயரத்தை எட்டியது. அதே சமயத்தில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி மாநிலத்தை கடந்து மெக்ஸி வளைகுடா பிரிவில் நிறைவடைந்தது. அது 6 மணிநேர 39 நிமிட விமான பயணமாகும்.

2024 ஆம் ஆண்டில் விண்வெளி பலூன் பயணம்

அணியில் செயல்திறன் மற்றும் விமான அமைப்பு குறித்து தான் பெருமைப்பட முடியாது எனவும் உயர்மட்ட நிபுணத்துவம் இத்தகைய வெற்றிகரமான முடிவைக் கொடுக்கும் என இணை தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான டேபர் மெக்கல்லம் செய்திகுறிப்பில் குறிப்பிட்டார்.2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுடன் பறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 125000 டாலர் வரை டிக்கெட் மதிப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.

விமானி உட்பட எட்டு பயணிகள்

விமானி உட்பட எட்டு பயணிகள்

100,000 அடி உயரம் இலக்காக கொண்ட ஆறு மணிநேர பயணத்தில் விமானி உட்பட எட்டு பயணிகள் செல்வார்கள் என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து போயன்டர் தெரிவிக்கையில், இது விண்வெளி கடற்கரையில் இருந்து தொடங்கப்பட்ட ஒரு நம்பமுடியாத செயலாகும். கடந்த பல தசாப்தங்களாக மனித விண்வெளி பயணத்தின் வரலாறு இன்றும் நிரூபிக்கப்பட்டு வேகத்தை அதிகரித்து வருகிறது. விண்வெளி பயணத்தில் நெப்டியூன் பறப்பது விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு அசாதாரண அனுபவம் வழங்கும் என குறிப்பிட்டார்.

நெப்ட்யூன் ஒன் வாகன சோதனை

நெப்ட்யூன் ஒன் வாகன சோதனை

நெப்ட்யூன் ஒன் வாகன சோதனை விமானம் முழு அளவிலான கேப்ஸ்யூல் சிமுலேட்டரை பயன்படுத்தியது. இது சுற்றுலா பலூனில் இருப்பது என்ன என்பதை பிரதிபலிக்கும். இது ஸ்பேஸ்ஷிப் நெப்டியூன் என பெயரிடப்படும், அதேபோல் சோதனை விமானத்திற்கு பயலட் தேவையில்லை. இந்த சோதனை வெற்றிப்பெற்றுள்ளது.

பலூன் மூலம் நடத்தப்பட்ட விண்வெளி சுற்றுலா

அமெரிக்காவின் பலூன் மூலம் நடத்தப்பட்ட விண்வெளி சுற்றுலா செல்லும் திட்டத்தின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. புளோரிடா மாகாணத்தில் இருந்து நடத்தப்பட்ட இந்த சோதனையில் ஏவப்பட்ட பலூன் பூமிக்கு மேலே 20 கிமீ உயரத்தில் பறந்தது. அதேபோல் 6 மணிநேர பயணத்திற்கு பின் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் பாதுகாப்பாக இந்த பலூன் தரையிறக்கப்பட்டது.

ஸ்பேஸ் புளோரிடா தலைமை நிர்வாக அதிகாரி

படிப்படியாக இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 2024 ஆம் ஆண்டு முதல் பயணிகளை ஏற்றி இந்த பலூன் பறக்கும் என விண்வெளி வபலூன் நிறுவனமான ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் தெரிவித்தது. ஸ்பேஸ் புளோரிடாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பிராங்க் டிபெல்லோ சோதனைக்குப் பிறகான வாழ்த்து அறிக்கையை வெளியிட்டார்.

Pic Courtesy: Space Perspective

Best Mobiles in India

English summary
What is Space Balloon Tourism?- Space balloon Successfully landed after 20 miles Fly

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X