Home
News

ஸ்மார்ட் ஈபி மீட்டர் என்றால் என்ன? எப்படி ஆன்லைன் மூலம் உங்கள் வீட்டு மின்சாரம் துண்டிக்கப்படும்?

மின்சார கட்டணம் (Electricity bill) அல்லது ஈபி (EB) என்று சொன்னாலே எல்லோருக்கும் பிபி (BP) எகிறிவிடும். காரணம், மின்சார கட்டணம் இந்த முறை எவ்வளவு வந்துள்ளது என்ற கவலை எல்லோரிடமும் உள்ளது. சிலர் மீட்டர் ரீடிங் சுற்றும் வேகத்தை பார்த்தவுடனே பதறிப்போய்விடுவார்கள்.

சிலருக்கு பழைய ஈபி மீட்டரில் (EB meter) ரீடிங் தவறாக காண்பிக்கிறதோ என்ற சந்தேகம் கூட இருக்கிறது. இது ஒரு பக்கம் மக்களின் குறைகளாக இருக்க, மின்சார வாரியத்தின் அதிகாரிகளுக்கு (Electricity board of Tamilnadu) ஒரு சில குறைகள் ஈபி ரீடிங் (EB reading) எடுப்பதில் சிக்கலாக இருக்கிறது என்று பல காலமாக கூறப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் ஈபி மீட்டர் என்றால் என்ன? ஆன்லைன் மூலம் உங்க மின்சாரம் கட்-ஆ!

அவர்களுக்கு இருக்கும் பெரிய குறைகளில் ஒன்றாக, நேரடியாக சென்று வீடு வீடாக ரீடிங் எடுப்பது சிறப்பமான வேலையாக இருக்கிறதென்று கூறப்படுகிறது. இப்படி பல சிக்கல்களுக்கு ஒரே தீர்வாக இந்திய அரசாங்கம் மற்றும் தமிழ்நாடு அரசாங்கம் சேர்ந்து முடிவெடுத்த விடை தான் ஸ்மார்ட் ஈபி மீட்டர்கள் (smart EB meters).

ஸ்மார்ட் மீட்டர் (Smart meter) என்றால் என்ன? இது எப்படி செயல்படும்? இது எப்படி உங்கள் மின்சார கட்டணத்தை அளவிடும்? எப்படி மின்சார வாரியத்தின் அதிகாரிகள் உங்கள் வீடுகளுக்கு நேரில் வராமல், உங்கள் மின்சார கட்டணத்தை ஸ்மார்ட் மீட்டர் மூலம் கணக்கிடுவார்கள்? மின்சார கட்டணத்தை (EB bill) சரியான நேரத்தில் செலுத்தவில்லை என்றால், எப்படி மின்சாரம் ஆன்லைன் (Online power cut) மூலமாக துண்டிக்கப்படும் என்பது போன்ற விபரங்களை பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் (Tamil Nadu) உள்ள நகரங்கள் (Cities) மற்றும் கிராம பகுதிகளில் (Villages) ஸ்மார்ட் மீட்டர்களை பயன்படுத்துவதற்கான வேலைகளை நமது அரசாங்கம் மிகவும் தீவிரமாக நடந்தி வருகிறது. ஸ்மார்ட் மீட்டர்களை மொத்தமாக வாங்குவதற்கான டெண்டர் (Tender) அறிவிப்பும் கூட சமீபத்தில் வெளியாகியுள்ளது. நமக்கு தெரிந்த தகவலின் படி, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு முழுமையாக ஸ்மார்ட் மீட்டர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.

ஸ்மார்ட் ஈபி மீட்டர் என்றால் என்ன? ஆன்லைன் மூலம் உங்க மின்சாரம் கட்-ஆ!

இதற்காக, ஒட்டுமொத்தமாக சுமார் 3.3 கோடி ஸ்மார்ட் ஈபி மீட்டர்களை தமிழக அரசு வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான டெண்டர் விபரங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. சரி, முதலில் இந்த ஸ்மார்ட் ஈபி மீட்டர் என்றால் என்ன? (What is smart EB meter) என்று தெரிந்துகொள்ளலாம். ஸ்மார்ட் ஈபி மீட்டர் என்பது டிஜிட்டல் முறையில் செயல்படக் கூடியது. இது உங்கள் மின்சார பயன்பாட்டை டிஜிட்டல் முறையில் கணக்கிட்டு ஆன்லைனில் சேவ் செய்கிறது.

இதனால், உங்கள் மின்சார கட்டணத்தை அளவிட, இனி அதிகாரிகள் ஒவ்வொரு வீடாக நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் சேகரித்து, நேரடியாக சம்பந்தப்பட்ட மின் வாரிய அலுவலகத்திற்கு தகவலை அனுப்பிவிடும். அங்கு அதிகாரிகள் அதை கணக்கிட்டுக்கொள்வார்கள். கணக்கிடப்பட தொகை ஸ்மார்ட் மீட்டர் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு (Mobile number) அனுப்பப்படும்.

ஸ்மார்ட் ஈபி மீட்டர் என்றால் என்ன? ஆன்லைன் மூலம் உங்க மின்சாரம் கட்-ஆ!

அதேபோல், இனி பொதுமக்கள் அலட்சியமாக மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால், அதிகாரிகள் நேரில் வந்து பியூஸ் கட்டைகளை பிடுங்க வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறப்படுகிறது. காரணம், டிஜிட்டல் ஈபி மீட்டர்கள் (Digital EB meters) வந்துவிட்டால், அதிகாரிகள் அவர்களின் அலுவலகத்தில் இருந்தபடியே கட்டணம் செலுத்ததாக ஈபி கனெக்ஷனை ஆன்லைன் மூலமாக துண்டிக்க செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை போன்ற நகரங்களில் ஏற்கனவே இந்த ஸ்மார்ட் ஈபி மீட்டர்கள் சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக ஒவ்வொரு மாவட்டமாகவும், நகரமாகவும், கிராமப்புறங்களிலும் இந்த ஸ்மார்ட் ஈபி மீட்டர்களை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் பெரும்பாலான இடங்களில் ஸ்மார்ட் மீட்டர் பயன்பாடு பெருகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ஈபி மீட்டர் மூலம் கணக்கிடப்படும் மின்சார கட்டணங்களை மக்கள் ஆன்லைன் அல்லது நேரில் சென்று செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
What Is Smart EB Meter and How Tamil Nadu Electricity Board Planning To Change Billing Method
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X