Home
News

Sanchar Saathi ஆப்.. இனி எல்லா புது போன்களுக்கும் கட்டாயம்.. இந்திய அரசு உத்தரவு.. ஏன்?

திருடப்பட்ட மொபைல் போன்கள் மூலம் ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் முயற்சியில், இந்திய அரசாங்கம் அனைத்து ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுக்கும் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் விற்கப்படும் அனைத்து புதிய மொபைல் போன்களிலும் இந்திய அரசுக்கு சொந்தமான சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) என்கிற சைபர்-பாதுகாப்பு ஆப்பை கட்டாயமாக முன்கூட்டியே இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் தொடர்பான மோசடி மற்றும் சைபர் அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, ஆப்பிள் போன்ற உலகளாவிய ஜாம்பவான்களுடன் மோதலை உருவாக்கும் அதே வேளையில், தனியுரிமமற்ற ஆப்களை முன்கூட்டியே நிறுவுவதை தடைசெய்யும் நிறுவன கொள்கைகளுடன் பாதுகாப்பான சுற்றுச்சூழல் அமைப்பை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sanchar Saathi ஆப்.. இனி எல்லா புது போன்களுக்கும் கட்டாயம்!

நவம்பர் 28 அன்று இந்தியாவின் தொலைத்தொடர்பு அமைச்சகத்தால் தனிப்பட்ட முறையில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, சாம்சங், விவோ, ஒப்போ, சியோமி மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட முக்கிய உற்பத்தியாளர்களுக்கு,இதற்கு இணங்கவதற்காக 90 நாள் காலக்கெடுவும் கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கியமான விஷயம் என்னவென்றால், குறிப்பிட்ட ஆப்பை இன்ஸ்டால் செய்யப்பட்ட பின்னர், பயனர்களால் முடக்க முடியாத வகையில் அந்த ஆப்பை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே விநியோக சங்கிலியில் உள்ள டிவைஸ்களுக்கு, உற்பத்தியாளர்கள் சாஃப்ட்வேர் அப்டேட்கள் மூலம் குறிப்பிட்ட ஆப்பை கொண்டுவர வேண்டும் என்றும் உதவிர்ப்பட்டுள்ளது.

(UPDATE: இன்று (2205 டிசம்பர் 2) சஞ்சார் சாத்தி ஆப்பை பயனர்களால் டெலிட் செய்ய முடியும் என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் (Union minister for communications) ஆன ஜோதிராதித்ய சிந்தியா (Jyotiraditya Scindia) தெளிவுபடுத்தி உள்ளார். சஞ்சார் சாத்தியை நீங்கள் விரும்பவில்லை என்றால், அதை நீக்கலாம். அது உங்கள் விருப்பம் என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஆன ஜோதிராதித்ய சிந்தியா, ஏஎன்ஐ-யிடம் (ANI) கூறியுள்ளார்)

சஞ்சார் சாத்தி ஆப் என்ன செய்யும்? சஞ்சார் சாத்தி செயலி என்பது, ஒவ்வொரு ஸ்மார்ட்போனிற்குமான 14 முதல் 17 இலக்க அடையாளங்காட்டியான சர்வதேச மொபைல் உபகரண அடையாள (IMEI) எண்ணை பயன்படுத்தி, நெட்வொர்க் தவறாக பயன்படுத்துதல் மற்றும் மோசடி நடவடிக்கைகளிலிருந்து பயனர்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு சைபர் பாதுகாப்பு டூல் ஆகும்.

கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டதிலிருந்து, இந்த ஆப் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக இந்திய அரசாங்கம் கூறுகிறது. இந்த ஆப் என்னென்ன உதவிகளை செய்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன: முதலாவதாக இது கடந்த 2025 அக்டோபரில் மட்டும் 50,000 உட்பட 700,000க்கும் மேற்பட்ட தொலைந்து போன மொபைல் போன்களை மீட்டெடுக்க உதவியுள்ளது

மேலும் திருடப்பட்ட அல்லது தொலைந்து போன 3.7 மில்லியனுக்கும் அதிகமான மொபைல் போன்களை பிளாக் செய்துள்ளது. மேலும் 30 மில்லியனுக்கும் அதிகமான மோசடி இணைப்புகளை நிறுத்த உதவியுள்ளது. இந்த ஆப் குறித்த அதிகாரப்பூர்வ உத்தரவில் - மோசடிகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் நகல் அல்லது ஏமாற்றப்பட்ட ஐஎம்இஐ எண்களின் "கடுமையான ஆபத்தை" எதிர்த்து போராடுவதற்காக இது மிகவும் அத்தியாவ என்று இந்திய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு ஆப்பிள் இணங்குமா? சஞ்சார் சாதி ஆப் தொடர்பான மிக முக்கியமான இணக்க சவால் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் உள் செயல்பாடுகளை நன்கு அறிந்த வட்டாரங்கள், ஸ்மார்ட்போன் விற்பனைக்கு முன் எந்தவொரு மூன்றாம் தரப்பு அல்லது அரசாங்க ஆப்ளையும் நிறுவுவதை அதன் கடுமையான உலகளாவிய கொள்கைகள் தடைசெய்கின்றன என்று குறிப்பிட்டன.

அரசாங்க ஸ்பேம் எதிர்ப்பு ஆப்பை உருவாக்குவது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் ஆனது முன்னதாக இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துடன் மோதி உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக ஆப்பிள் - பல நிறுவனங்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்ப ஒரு முன்னுதாரணமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

குற்றத்தடுப்பில் சஞ்சார் சாதி ஆப் ஆனது தன்னை நன்கு நிரூபித்துள்ள நிலையில், அரசாங்க உத்தரவு மொபைல் துறைக்குள்ளேயே கவலையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு நிறுவனங்களுடன் கலந்தாலோசிக்கப்படாதது குறித்து இரண்டு பெயர் குறிப்பிடப்படாத தொழில்துறை வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளதாக பைனான்சியல் எக்ஸ்பிரஸின் (financial express) சமீபத்திய அறிக்கை கூறுகிறது. இது விரைவான பயன்பாட்டிற்கான சாத்தியமான தொழில்நுட்ப மற்றும் கொள்கை தடைகளை குறிக்கிறது.

Best Mobiles in India

English summary
What is Sanchar Saathi Why Govt Wants This App To Install in All New Smartphones sold in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X