Rental AC: மாத வாடகை ரூ.800 தானா? சொந்தமாக AC வாங்க வேண்டாமா? பெங்களூரு, சென்னையில் புது வாடகை ஏசி கலாச்சாரம்
இந்தியாவில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. இதுவரை மக்களை வாட்டி எடுத்த சூரியன் அடுத்த சில வாரங்களுக்கு இன்னும் உக்கிரமாக வாட்டி வதைக்கவிருக்கிறது. இதற்கிடையில், ஒருபக்கம் ஏசி (AC) விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது. மறுபக்கம் மாத வாடகைக்கு ஏசி வழங்கப்படுகிறது.
என்னது மாத வாடகைக்கு ஏசியா (Monthly Rental AC)? என்று சிலர் ஆச்சரியமாக கேட்கலாம். ஆனால், நீங்கள் படித்தது உண்மை தான். வாடகை வீடு (rental house), வாடகை வாகனம் (rental vehicle), வாடகை சோபா (rental sofa), வாடகை பிரிட்ஜ் (rental fridge) என்ற வரிசையில், இப்போது இந்தியாவில் வாடகைக்கு ஏசி (rental AC) சாதனமும் பயன்பாட்டிற்கு கிடைக்க துவங்கியுள்ளது.

சென்னை, பெங்களூரில் பெருகும் வாடகை ஏசி கலாச்சாரம்.. ரெண்டல் ஏசி என்றால் என்ன? (What is mean by rental AC):
குறிப்பாக, சென்னை (Chennai) மற்றும் பெங்களூரு (Bengaluru) போன்ற மெட்ரோ நகரங்களில் (Metro cities) மாத வாடகைக்கு ஏசி பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. உண்மையை சொல்ல போனால், இதுவொரு நல்ல பிஸ்னஸ் ஐடியாவாக தெரிகிறது. மறுபுறம், ரூ. 30,000 முதல் ரூ. 50,000-திற்கு மேல் ஒரு பெருந்தொகையை செலவு செய்து, சொந்தமாக ஒரு புது ஏசி வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக, வாடகை ஏசி நோக்கி மக்கள் நகரத் துவங்கியுள்ளனர்.
உங்கள் கையில் மாதம் வெறும் ரூ.800 இருந்தால் போதும், உங்கள் வீட்டிற்கு இப்போதே ஒரு ரெண்டல் ஏசியை (rental AC) வாங்கி மாட்டிவிடலாம் என்கின்றனர் வாடகை ஏசி உரிமையாளர்கள். ரெண்டல் ஏசி கலாச்சாரம் பற்றி தெரியாதவர்களுக்காக, முதலில் ரெண்டல் ஏசி என்றால் என்ன (What is rental AC)? இதை எப்படி வாங்குவது? இதன் மாத கட்டணம் எவ்வளவு? இது பாதுகாப்பானது தானா? இதை நம்பி வாங்கி பயன்படுத்தலாமா?
இன்ஸ்டாலேஷன் (AC Installation) மற்றும் இதர செலவுகள் என்று மறைமுக செலவுகள் எதுவும் இந்த ரெண்டல் ஏசி பயன்பாட்டில் இருக்கிறதா? என்று உங்கள் சந்தேகங்களுக்கான மொத்த விளக்கத்தையும் இந்த பதிவின் மூலம் முழுமையாக பார்க்க போகிறோம். முதலில் ரெண்டல் ஏசி என்றால் என்ன என்பதை பார்க்கலாம். ரெண்டல் ஏசி என்பது மாத வாடகைக்கு ஒரு ஏசி (Monthly rental AC) சாதனத்தை உங்கள் வீட்டில் பயன்படுத்துவதாகும்.

ரெண்டல் ஏசி-க்கு மாதம் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது? மறைமுக கட்டணம் எதுவும் இருக்கிறதா?
அதிக பணம் செலுத்தி, ஏசி சாதனத்தை சொந்தமாக வாங்க முடியாத மக்களுக்காக சில தனியார் நிறுவனங்கள் இப்போது மாத வாடகை என்ற பெயரில் ஏசி சாதனத்தை பயன்படுத்த வழங்கி வருகின்றனர். அதாவது, அந்த நிறுவனத்திடம் இருந்து நீங்கள் பெரும் ஏசிக்கு சொந்தக்காரர் அந்த நிறுவனம் தான் என்றாலும், அதை நீங்கள் ரெண்டல் பேஸிஸ் (rental basis AC for usage) இல் வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதற்கான பயன்பாட்டு கட்டணமாக நீங்கள் தேர்வு செய்த ஏசி மாடலுக்கு ஏற்ற மாதாந்திர வாடகை (AC rent Price) கட்டணத்தை நீங்கள் செலுத்தி வரவேண்டும். உதாரணமாக, சென்னையில் இப்போது 1 டன் ஏசி மாடலின் மாதாந்திர வாடகை (1 Ton AC model rent price) கட்டணமாக ரூ.800 வசூலிக்கப்படுகிறது. இதுவே, நீங்கள் தேர்வு செய்த மாடல் 1.5 டன் என்றால், மாத வாடகையாக ரூ.1000 வசூலிக்கப்படுகிறது.
ஒருவேளை உங்கள் வீட்டின் அறை பெரியது என்றாலோ அல்லது உங்களுக்கு 2 டன் ஏசி (2 Ton AC model rent) தேவைப்படுகிறது என்றாலோ, நீங்கள் ரூ.1200 கட்டணத்தை மாதாந்திர வாடகையாக செலுத்த வேண்டும். இறுதியாக, சென்னையில் இப்போது 3 டன் ஏசி (3 Ton AC model rent) மாடலுக்கு மாதம் தோறும் ரூ.1500 ரெண்டல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஒரு வாடகை ஏசியை பெற நீங்கள் உங்கள் ஆதார் (Aadhaar) விபரம் மற்றும் பான் (PAN) விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். 3 மாதம் அல்லது 6 மாதம் அல்லது 1 வருடம் என்ற விருப்பத்தில் நீங்கள் ஒரு ஏசி சாதனத்தை வாடகைக்கு பெறலாம். முதல் முறை மட்டும் டெபாசிட் தொகை (deposit amount) செலுத்த வேண்டும். பிறகு இன்ஸ்டாலேஷன், மெயிண்டனென்ஸ், சர்வீஸ் போன்ற சேவைகளுக்கு எந்தவித கூடுதல் கட்டணங்களும் வசூலிக்கப்படாது.
இது ஒவ்வொரு ஏசி வழங்கும் ரெண்டார்களுக்கு இடையில் விதிமுறைகள் மாறுபடுகிறது. நீங்கள் தேர்வு செய்யும் ரெண்டல் ஏசி வெண்டார் (AC vendor) மற்றும் ஏசி மாடலை பொறுத்து உங்கள் மாத கட்டணம் மாறுபடலாம். முக்கிய குறிப்பு, 5 ஸ்டார் ரேட்டிங் ஏசி மற்றும் இன்வெர்ட்டர் அம்சம் கொண்ட ஏசிகளுக்கு கட்டணம் வேறுபாடும் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் பயன்படுத்தும் மின்சார கட்டணத்தை நீங்கள் தான் செலுத்த வேண்டும். அது வாடகையுடன் உட்படுத்தப்படமாட்டாது.


Click it and Unblock the Notifications








