OnePlus உடைத்த புது சீக்ரெட்.! OnePlus 11 Concept போன் என்றால் என்ன? இது எப்போது அறிமுகம்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம், நேற்று இந்தியாவில் நடத்திய கிளவுட் 11 நிகழ்வில் மொத்தம் 6 புதிய சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் 2 ஸ்மார்ட்போன், 2 TWS இயர்போன்ஸ், 1 ஸ்மார்ட் டிவி மற்றும் 1 புதிய டேப்லெட் சாதனங்கள் அடங்கும்.
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் பிரிவில் OnePlus 11 மற்றும் OnePlus 11R ஆகிய இரண்டு மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு மத்தியில், யாரும் எதிர்பார்த்திடாத வகையில், நிறுவனம் ஒரு சீக்ரெட் தகவலை வெளியிட்டது. இதன்படி, சீன ஸ்மார்ட்போன் பிராண்டான OnePlus நிறுவனம், அதன் புதிய OnePlus 11 கான்செப்ட் போனை, இந்த ஆண்டு நடக்கவிருக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC 2023) நிகழ்வில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது என்று அறிவித்துள்ளது.

சீக்ரெட்டை உடைத்த OnePlus.! புது 'OnePlus 11 Concept' என்று போன் அறிமுகமாகிறதா?
MWC 2023 நிகழ்வு, இந்த ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 2 ஆம் தேதி வரை ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற உள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் இந்த புதிய ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போன் மாடலை வெளியிடும் என்பதை உறுதிப்படுத்தியதைத் தவிர, இந்த போனின் விவரங்களை MWC 2023 நிகழ்வில் வெளியிடும் என்று அறிவித்திருந்தது. ஆனால், இந்த OnePlus 11 Concept Phone பற்றிய மற்றொரு சுவாரசியமான தகவலை நிறுவனம் பகிர்ந்துகொண்டது.
அதன்படி, வரவிருக்கும் புதிய OnePlus 11 Concept போன் ஆனது, ஒன்பிளஸ் தொழில்துறை வரலாற்றில் இடம்பெறும், முதல் புதிய தொழில்நுட்பத்துடன் இமேஜிநேட்டிவ் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போன் ஆனது, தற்போதைய புது டெக் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

ஒன்பிளஸ் கான்செப்ட் போன் என்றால் என்ன? இதற்கு முன் இப்படிப்பட்ட போன் அறிமுகமாகியுள்ளதா?
ஒன்பிளஸ் நிறுவனம், இதற்கு முன்பும் அதன் தொழில்துறை நிகழ்வுகளில் கான்செப்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. துரதிர்ஷ்டவசமாக, இந்த போன்கள் வணிகமயமாக்கப்படவில்லை. முந்தைய கான்செப்ட் ஃபோன்களில், ஒன்பிளஸ் கான்செப்ட் ஒன் (OnePlus Concept One), CES 2020 இல் வெளியிடப்பட்டது. இதில் பின்பக்க கேமராவை மறைக்க, எலக்ட்ரோக்ரோமிக் கிளாஸை நிறுவனம் பயன்படுத்தியது. இது போன்ற ஒரு டிவைஸை தான் நிறுவனம் MWC 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யவுள்ளது.
அதேபோல், CES 2021 இல் வெளியிடப்பட்ட OnePlus 8T கான்செப்ட் என்ற மாடலை கூட நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது. ஆனால், இதுவும் வணிகமயமாக்கப்படவில்லை. இப்போது நிறுவனம் ஒன்பிளஸ் 11 கான்செப்ட்டை அறிவித்துள்ளது. இது சந்தைப்படுத்தப்படுமா? இல்லையா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நேற்று அறிமுகமான புது OnePlus சாதனங்களின் ஒட்டுமொத்த விலை விபரம்.!
இதற்கிடையில், நிறுவனம் புதிய OnePlus 11, OnePlus 11R , OnePlus Buds Pro 2, OnePlus Buds Pro 2R, OnePlus TV 65 Q2 Pro போன்ற சில தயாரிப்புகளை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
- OnePlus 11 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் ரூ.56,999 விலையில் வருகிறது.
- OnePlus 11 ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மாடல் ரூ.61,999 விலையில் வருகிறது.
- OnePlus 11R போனின் 8ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ. 39,999 விலையில் வருகிறது.
- OnePlus 11R போனின் 16ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ. 44,999 விலையில் வருகிறது.
- OnePlus Buds Pro 2 TWS இயர்பட்ஸ் ரூ.9,999 விலையில் வருகிறது.
- OnePlus Buds Pro 2R இயர்பட்ஸ் சாதனம் ரூ.11,999 விலையில் வருகிறது.
- OnePlus TV 65 Q2 Pro பிரீமியம் ஸ்மார்ட் டிவி மாடலாக ரூ. 99,999 விலையில் வருகிறது.
- OnePlus Pad சாதனத்தின் இந்திய விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications








