Swiggy, Zomato-வுக்கு ஆப்பு வைத்த ONDC! இனி கம்மி காசுக்கு நிறைய சாப்பிடலாம்-ஆ? உடனே இன்ஸ்டால் செய்யுங்க!
இரட்டை தலை நாகத்தை போல, ஒரு தலைக்கு இன்னொரு தலை சளைத்தது இல்லை என்ற படி, இந்தியாவில் கொடிகட்டி பறந்த 2 ஜாம்பவான்களான ஸ்விகி (Swiggy) மற்றும் ஜோமாட்டோ (Zomato) தலைக்கு வாழ் வைத்துவிட்டது இந்தியாவின் புதிய ONDC சேவை.
ONDC சேவையா? அப்படி என்றால் என்ன? இது என்ன செய்யும்? இது எப்படி இனி நமக்கு கிடைக்க போகும் உணவுகளின் விலையை குறைக்க போகிறது? இது என்ன புது சேவை? இது எப்படி ஸ்விகி மற்றும் ஜோமாட்டோ தளங்களுக்கு ஆப்பு வைக்க போகிறது? என்பது போன்ற முழு தகவலை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். வாருங்கள், காலம் தாமதிக்காமல் நேரடியாக விஷயத்திற்கு செல்வோம்.

ONDC என்பது ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் கமெர்ஸ் (Open Network For Digital Commerce) என்பது பொருளாகும். பொதுவாக சொல்ல போனால், இது இந்தியாவின் இ-காமெர்ஸ் ஆன்லைன் ஷாப்பிங் தளமாகும். இது உணவு, வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், வீட்டை சுத்தம் செய்யும் அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றையும் ஆன்லைன் மூலம் வாங்க அனுமதிக்கிறது. இது Swiggy இன்ஸ்டாமார்ட், Zepto மற்றும் Blinkit போலவும் செய்லடுகிறது.
இந்தியாவில் உணவு ஆர்டர் செய்ய ஸ்விகி மற்றும் ஜோமாட்டோ மட்டுமே உள்ள நிலையில், இது இனி மாற்று செயலியாக செயல்படப்போகிறது. ONDC என்பது டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க்காகும். உணவகங்கள் தங்கள் உணவை நேரடியாக நுகர்வோருக்கு விற்க இது அனுமதிக்கும் ஒரு இடமாகும். இந்த தளம் இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது என்பதால், இது மிகவும் நம்பகமானது. கடந்த ஆண்டு பெங்களூருவில் இதன் சேவைகள் முதன்முதலில் தொடங்கப்பட்டது.
இப்போது, இந்தியாவின் பல நகரங்களில் உணவு மற்றும் பல்வேறு பொருட்களை ஆர்டர் செய்ய இந்த தளம் கிடைக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் ஆன்லைன் ஷாப்பிங் சேவை மற்றும் வருவாயை ONDC அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ONDC, இந்திய அரசாங்கத்தின் தலைமையில் இயங்கும் தளமாக இருப்பதால், பிற இ-காமெர்ஸ் தளங்களை விட ஒப்பீட்டளவில் மலிவான விலையில் தயாரிப்புகளை வழங்குகிறது. இதன் முக்கிய நன்மை என்றால், மிகவும் மலிவான விலையில் உணவை ஆர்டர் செய்லாம்.

டோமினோஸ், மெக்டொனால்ட்ஸ், பிஸ்ஸா ஹட் போன்ற பிரபலமான இடங்களில் இருந்து உணவை ஆர்டர் செய்தால் கூட, மலிவான விலையில் உணவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, ஸ்விகி மற்றும் ஜோமாட்டோ ஆகிய இரண்டு தளங்களில் ஆர்டர் செய்யப்பட்ட அதே உணவு ONDC தளத்தில் மிகவும் குறைந்த விலையில் கிடைத்ததை கண்டு நாங்களே வியப்பில் ஆச்சரியப்பட்டோம். 3 தளங்களுக்கும் இடையிலான விலை அதிக வித்தியாசத்துடன், விலை மாற்றங்களை கொண்டிருந்தது.
ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் ஒரே கடையில், ஒரே மெனுவுடன், ஒரே எண்ணிக்கையில் ஆர்டர் செய்யப்பட்ட போதிலும் ஸ்விகி அதிக கட்டணத்தை வசூலித்தது. இதற்கு அடுத்தபடியாக Zomato ரூ.77 விலை குறைவுடன் அதே உணவை டெலிவரி செய்தது. ஆனால், ONDC அதே ஆர்டருக்கு ரூ.116 விலை குறைவாக வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ONDC ஒரே ஆர்டரில் பயனருக்கு 116 ரூபாய் மிச்சம் பிடித்தது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இனி ONDC சேவையுடன் மக்கள் குறைந்த செலவில் அதிக உணவை சுவைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதேபோல், உணவுகள் மட்டுமின்றி மற்ற பொருட்களையும் மக்கள் ONDC மூலம் ஆர்டர் செய்து, குறைந்த செலவில் ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தை அனுபவிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த ONDC சேவையை அணுக மக்கள் Magicpin ஆப்ஸை பயன்படுத்தலாம். அல்லது PayTm, Meesho, MyStore, Craftsvilla போன்ற தளங்களில் ONDC சேவையை அணுகலாம்.


Click it and Unblock the Notifications








