கடைசி தேதி பிப்ரவரி 8: 'இதை' செய்யலான உங்கள் அக்கவுண்ட்க்கு நாங்க பொறுப்பில்லை: வாட்ஸ்அப் அதிரடி.!
வாட்ஸ்அப் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் பேஸ்புக் வழங்கும் பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் சிறப்பாக ஒருங்கிணைய வாட்ஸ்அப் அதன் தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகளை அப்டேட் செய்துள்ளது.

அதாவது வாட்ஸ்அப் வழங்கும் புதிய அப்டேட்டைப் போலன்றி, இம்முறை பல்வேறு புதிய மாற்றத்தை கொண்டுவர உள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். குறிப்பாக ஒரு ஆப் Notice வழியாக வாட்ஸ்அப் அதன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட மாற்றத்தை அறிவித்துள்ளது.

தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை
இந்த புதிய அறிவிப்பு வாட்ஸ்அப் அதன் தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகளில் கொண்டு வந்த மாற்றங்களில் ஒரு காட்சியை வழங்குகிறது. அதாவது ஒரு full-screen notice வழியாக நேரடியாக அப்டேட்டை ஒப்புக்கொள்வதற்கான விருப்பத்தையும் அது வழங்குகிறது.

பயனர்களின் தகவலை எவ்வாறு சேகரிக்கிறது?
மேலும் வாட்ஸ்அப்-ன் புதுபிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் ஆனது வாட்ஸ்அப் பயனர்களின் தகவலை எவ்வாறு சேகரிக்கிறது மற்றும் எப்படி கையாளுகிறது போன்ற தகவல்களை வழங்குகிறது.

அப்டேட் செய்யும் வழிமுறை
குறிப்பாக WhatApp is updating its terms and privacy policy என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும். இதை பிப்ரவரி 8-ம் தேதிக்குள் நீங்கள் ஓகே கொடுக்கவேண்டும். அவ்வாறு கொடுக்காவிட்டால் உங்களால் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது.

இதன் அவசியம் இப்போது ஏன் ?
குறிப்பாக இதன் அவசியம் இப்போது ஏன் என்று கேட்கிறீர்களா? பேஸ்புக் நிறுவனத்துடன் வாட்ஸ்அப் பயனாளிகளின் தகவல்களை ஷேர் செய்து கொள்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டுதான் இதுபோல ஒரு காலக்கெடுவை நிர்ணயத்துள்ளது அந்த நிறுவனம். ஒருவரிடமிருந்து இன்னனொருவருக்கு அனுப்பப்படும் மேசேஜ்கள் பாதுகாப்பானவை. பிறரால் படிக்க முடியாத encrypted செய்யப்பட்டவை என்பது தான் வாட்ஸ் அப் செயலியில் தனித்துவமாக இருந்தது. ஆனால் இப்போது இதில் சமரசம் செய்துகொண்டுள்ளது அந்த நிறுவனம்.

குறிப்பாக இப்போது கூட என்கிரிப்டட் வடிவில்தான் வாட்ஸ்அப் தகவல்கள், அவர்களின் சர்வர்களில் சேமித்துவைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அனால் ஒரு வாடிக்கையாளர் எப்படி வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்துகிறார். எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார், அவர் அதை கால் செய்வதற்கு பயன்படுத்துகிறாரா? மெசேஜ் செய்வதற்கு அதிகம் பயன்படுத்துகிறாரா? ஸ்டேட்டஸ் வைப்பதற்குஅதிகம் பயன்படுத்துகிறாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பதிவு செய்து வைக்கப்படுகிறது.

முக்கியமாக கவனிக்க வேண்டியது மூன்றாம் தரப்பு சேவை நிறுவனங்களுக்கும் வாட்ஸ்அப் பயனாளிகளின் தகவல்கள் பகிரப்படும் என்று கூறப்பட்டுள்ளது, பேஸ்புக் மற்றும் அதன் நிறுவனங்களான மெசேஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் அதன் வெப்சைட் ஆகியவற்றுக்கு இப்படி தகவல் பரிமாற்றம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் உங்களுக்கு சேவை மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான மாற்றம் இல்லை
அதேசமயம் இதில் அனைவரும் அச்சப்படும் அளவுக்கு மோசமான மாற்றம் இல்லை என்று கூறுகிறார்கள். ஏற்கனவே இதில் இருக்கும் பல்வேறு தனியுரிமை கொள்கைகள் இப்போதும் தொடர்கின்றன.

Facebook உடன் பகிர வேண்டும்
மேலும் எந்தெந்த தகவல்களைத் தனிப்பட்டதாக வைத்திருக்க வேண்டும், எந்தெந்த தகவல்களைச் சேகரித்து எங்கள் தாய் நிறுவனமான Facebook உடன் பகிர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க விரும்புகிறோம். நாங்கள் பகிரும் தகவல்கள், பயனர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்குவதிலும், பாதுகாப்பை அதிகரிப்பதிலும் எங்களுக்கு உதவுகின்றன என்று வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியுரிமைக் கொள்கைக்கு எதிராக மஸ்க் கருத்து
வாட்ஸ்அப் தனியுரிமைக் கொள்கைக்கு எதிராக எலான் மஸ்க் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார், அதாவது வாட்ஸ்அப் அதன் தனியுரிமைக் கொள்கையில் மாற்றங்களைச் செய்தபின் யூஸ் சிக்னல் என்று ட்வீட் செய்துள்ளார். அதாவது சிக்னல் என்பது நன்கு அறியப்பட்ட தனியுரிமை-மையப்படுத்தப்பட்ட செய்தியிடல் ஆப் பயன்பாடாகும், இது பாதுகாப்பு வல்லுநர்கள், தனியுரிமை ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பத்திரிகையாளர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வாட்ஸ்அப்
செயலியை விட மிக அருமையாக சிக்னல் செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications