எதுக்கும் ரெடியா இருங்க: நிஜத்தை தத்ரூபமாக உருவாக்கும் டீப் ஃபேக்- தொழில்நுட்பத்தின் அசுர முன்னேற்றம்!

|

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப போட்டிப்போட்டுக் கொண்டிருக்கும் தொழில்நுட்பத்துக்கு நடுவே நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். தொழில்நுட்பங்கள் தேவைக்கேற்ப வளர்ந்துக் கொண்டிருக்கிறது என்பதைவிட தொழில்நுட்பங்களின் தேவைக்கேற்ப மனிதர்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றனர்.

உண்மைத்தன்மையை அதிகரிக்கும் காட்சிகள்

உண்மைத்தன்மையை அதிகரிக்கும் காட்சிகள்

ஒரேமாதிரி ஏழு பேர் இருப்பார்கள் என்று கூறி கேள்விபட்டிருப்போம் அதை திரைப்படத்தில் நிஜமாக்கியும் காட்டியிருப்பார்கள். தொழில்நுட்பம் வளரவளர காட்சிகள் தத்ரூபம் நிறைந்த உண்மைத்தன்மையோடு வடிவமைக்கப்பட்டு வருகிறது.

உண்மையாக உருவாகும் போலி காட்சிகள்

உண்மையாக உருவாகும் போலி காட்சிகள்

தற்போது உண்மையாக நீங்கள் இல்லாத இடத்தில் நீங்கள் இருப்பது போல் செயற்கையாக வடிவமைத்து வீடியோக்களை உருவாக்க முடியும். அதையும் தாண்டி ஒருவராகவே நீங்கள் உருமாறி வாழ்ந்து காட்சிகளை வடிவமைக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா?. இந்தக்கால தொழில்நுட்பத்தில் அனைத்தும் சாத்தியமே.

மெஷின் லேர்னிங் என்ற தொழில்நுட்பம்

மெஷின் லேர்னிங் என்ற தொழில்நுட்பத்தின் உதவியோடு டீப் ஃபேக் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது. டீப் ஃபேக் தொழில்நுட்பம் குறைந்த செலவில் உருவாக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் ஒருவராக உருமாறி அவர்களின் தோற்றத்தில் உங்களை பார்க்க பயன்படுத்தலாம்.

கூடு விட்டு கூடு பாயும் வித்தை ஓலைச்சுவடிகளில் எழுத்துகளாக புதைக்கப்பட்டிருக்கிறது என கூறப்படும் நிலையில் தொழில்நுட்பம் அதை சாத்தியமாக்கி இருக்கிறது. இதற்கு நீங்கள் பலவகை முகப்பாவங்கள், வெவ்வேறு தோரணைகள், வெவ்வேறு ஆங்கிள்களில் தங்களது வீடியோவை பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஆகியவற்றின் உதவியுடன் நீங்கள் விரும்பிய தோற்றம் உங்களின் பாவணையில் காட்டப்படும்.

புகார்கள் அதிகரிக்க வாய்ப்பு

இருப்பினும் இந்த பயன்பாடுகள் தவறான செயல்களுக்கு பயன்படுத்துவது பல்வேறு புகார்களுக்கு உட்படுத்தப்படுகிறது. சமூகவலைதளங்களில் பதிவேற்றப்படும் பெண்களின் புகைப்படங்கள் மார்பிங் செய்து தவறாக சித்தரிக்கப்படுகிறது. இதனால் இதுபோன்ற பயன்பாடுகள் ஆபத்தானவையாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் இறந்தவர்களின் உருவங்களையும் தத்தரூபமாக வரவழைத்து காட்டுகிறது இந்த பயன்பாடு என கூறப்படுகிறது.

பேஸ் ஸ்வாப், ஃபேக்கர் ஆப்

பேஸ் ஸ்வாப், ஃபேக்கர் ஆப், டீப்பேஸ் லேப், ரீஃபேஸ், மார்பின், ஜிக்கி போன்ற பயன்பாடுகள் அனைத்தும் தற்போது ஆப் ஸ்டோரிலேயே கிடைக்கிறது. சமீபத்தில் பிரபல கிரக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடிகர் விஜய் போல் செய்தது அனைத்தும் இந்த வீடியோவின் மூலமாக தான், அதேபோல் இதே டீப் பேக் தொழில்நுட்பத்தைதான் திரைப்படங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

டாம் க்ரூஸ்-ன் ஒரு புதிய டிக்டாக் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது குறிப்பாக டுவிட்டர் பக்கத்தில், டாம் க்ரூஸ் ஒரு வீடியோவில் மேஜிக் தந்திரங்களை செய்கிறார். அதே டாம் க்ரூஸ் மற்றொரு வீடியோவில் கோல்ஃப் விளையாடுவது போல் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோக்கள் உண்மை போல் தோற்றம் அளித்தாலும் இது அனைத்தும் தொழில்நுட்ப தோற்றமே ஆகும். சற்று ஆழமாக சிந்தித்து பார்த்தால், ஒருவரின் தரவு அனைத்தும் திருடப்பட்டு இதுபோன்ற மார்பிங் மூலம் காரியங்களை கையாண்டால் இதுமிகப்பெரிய ஆபத்தாக அமையும்.

Best Mobiles in India

English summary
What is New Deep Fake AI Usage?- Can Make AI Animate Within Seconds

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X