Metaverse: ஓவர் பில்ட்-அப் செய்யப்படுகிறதா? அல்லது உண்மையான தொழில்நுட்ப புரட்சியா?

|

இன்டர்நெட் (Internet) - ஒரே இரவில் உருவாகி விடவில்லை; கடந்த பல ஆண்டுகளாக ஏற்பட்ட 'பரிணாம வளர்ச்சியின்' விளைவாக மெல்ல மெல்ல வளர்ந்து, தற்போது மெட்டாவேர்ஸ் (Metaverse) வரை வந்து நிற்கிறது.

இங்கே நாம் மெட்டாவேர்ஸ் பற்றி பேசுவதால், மனிதகுல வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் நடந்து கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்று மிகைப்படுத்தி கூறினாலும் தவறில்லை.

ஏனெனில் மெட்டாவேர்ஸின் எதிர்காலம் வெறுமனே விர்ச்சுவல் ரியாலிட்டி / ஆக்மென்டட் ரியாலிட்டியோடு முடிந்துவிடாமல், ஒரு தனி யுனிவர்ஸ் ஆக உருமாறி, நாம் நினைத்து பார்க்கமுடியாதபடி மிகவும் பிரம்மாண்டமாக இருக்க போகிறது.

"என்னப்பா? ஓவர் பில்ட்-அப் ஆக இருக்கிறதே!" என்று நினைப்பவர்கள் தொடர்ந்து படிக்கவும்; மெட்டாவேர்ஸின் வருங்காலம் எப்படி இருக்கும் என்பதை பற்றிய அறிய ஆர்வமுள்ளவர்களும் உடன் இணைந்து கொள்ளலாம்.

மெட்டாவேர்ஸ் - நாவலில் இருந்து

மெட்டாவேர்ஸ் - நாவலில் இருந்து "பிறந்த" ஒரு வார்த்தை!

மெட்டாவேர்ஸ் என்கிற வார்த்தை, நீல் ஸ்டீபன்சன் என்பவரால் 1992-இல் எழுதப்பட்ட 'ஸ்னோ க்ராஷ்' என்கிற சைன்ஸ்-பிக்ஷன் நாவலில் உருவாக்கப்பட்டது.

இருப்பினும் பேஸ்புக் நிறுவனம் தன் பெயரை 'மெட்டா' என்று மாற்றிக்கொண்டதன் விளைவாகவே 'மெட்டாவேர்ஸ்' என்கிற வார்த்தை அனைவரின் கவனத்திற்கும் சென்றடைந்தது.

உண்மையில்.. மெட்டாவேர்ஸ் என்றால் என்ன?

உண்மையில்.. மெட்டாவேர்ஸ் என்றால் என்ன?

மெட்டாவேர்ஸ் என்கிற வார்த்தை, எந்தவொரு குறிப்பிட்ட வகையான தொழில்நுட்பத்தையும் குறிக்கவில்லை, மாறாக வேகமாக வளர்ந்து வரும் இந்த உலகில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாம் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம் என்பதில் பரந்த அளவிலான மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பான ஒரு வார்த்தை ஆகும்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், மெட்டாவேர்ஸை உள்ளடக்கிய தொழில்நுட்பங்களில் விர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்), ஆக்மென்ட்டட் ரியாலிட்டி (ஏஆர்) முக்கியமானவைகளாக பார்க்கப்படுகிறது.

மெட்டாவேர்ஸ் - 3டி விர்ச்சுவல் உலகங்களின் நெட்வொர்க்!

மெட்டாவேர்ஸ் - 3டி விர்ச்சுவல் உலகங்களின் நெட்வொர்க்!

இன்னும் எளிமையாக கூற வேண்டுமென்றால், மெட்டாவர்ஸ் என்பது உண்மையான உலகத்தை போல பிரதிபலிக்கும் மேம்பட்ட யூசர் இன்டராக்ஷனை (user interaction) உருவாக்க, சோஷியல் கனெக்ஷனில் கவனம் செலுத்தும் 3டி விர்ச்சுவல் உலகங்களின் ஒரு நெட்வொர்க் ஆகும்.

இது டிஜிட்டல் மீடியா கான்செப்ட்களான ஆக்மென்டட் ரியாலிட்டி (AR), விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) மற்றும் பிளாக்செயின் ஆகியவற்றை பயன்படுத்தும் உருவகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் சூழலாகவும் (Digital environment) வரையறுக்கப்படுகிறது.

Google ஆண்டவரின் அடுத்த அதிரடி; Chrome ப்ரவுஸரில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!Google ஆண்டவரின் அடுத்த அதிரடி; Chrome ப்ரவுஸரில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

மெட்டாவேர்ஸின் நிகழ்காலம்

மெட்டாவேர்ஸின் நிகழ்காலம் "எந்த லெவலில்" இருக்கிறது?

டெக்னோஃபில்களுக்கு (technophiles), அதாவது புதிய தொழில்நுட்பத்தின் மீது ஆர்வமுள்ள நபர்களுக்கு, மெட்டாவேர்ஸ் என்பது எந்தவொரு டிஜிட்டல் உலகத்திலும் மூழ்கி திளைக்கவும், எந்த நேரத்திலும், எந்தவொரு பிஸிக்கல் ரியாலிட்டியிலும் பங்கேற்க வழிவகுக்கும் ஒரு வரம் ஆகும்.

இதன் கீழ், மக்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும் கூட, எதையும் பார்க்கவும், உணரவும் முடியும்!

வீட்டில் இருந்தபடியே விர்ச்சுவல் உலகம்!

வீட்டில் இருந்தபடியே விர்ச்சுவல் உலகம்!

இது தவிர்த்து மெட்டாவேர்ஸின் கீழ் டிஜிட்டல் பொருளாதாரமும் வளர்ந்து வருகிறது. குறிப்பாக விர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்) அடிப்படையிலான வியரிபிள்ஸ்-களை (Wearables) அறிமுகப்படுத்துவதன் மூலம் மெட்டாவர்ஸ், பல துறைகளில் பெரிய அளவிலான மாற்றங்களை கொண்டு வரும்.

மெட்டாவர்ஸின் கீழ், (குறிப்பிட்ட வியரிபிள்ஸ்-களை வாங்கும்) யூசர்கள் அவரவர்களின் வீடுகளில் இருந்தபடியே ஆல்டர்நேட் விர்ச்சுவல் உலகிற்கு அழைத்துச்செல்ல படுவார்கள்.

மேலும் திரைப்படங்களை பார்ப்பது அல்லது நண்பர்களுடன் உரையாடுவது போன்ற வேலைகளையும் - நிஜ உலக தொந்தரவுகள் எதையும் சந்திக்காமல் - விர்ச்சுவல் உலகின் வழியாக நிகழ்த்திக்கொள்ளலாம். அதாவது மெட்டாவேர்ஸ் உடனான சாத்தியங்கள் - முடிவற்றவைகளாக இருக்கும்!

மெட்டாவேர்ஸின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

மெட்டாவேர்ஸின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

மெட்டாவேர்ஸின் கான்செப்ட் ஆனது பிளாக்செயின் (Blockchain) தொழில்நுட்பம் மூலம் இயக்கப்பட்ட வெப்3 (Web3) தொழில்நுட்பத்தை இணைக்கத் தொடங்குவதால், எதிர்காலத்தில் மெட்டாவேர்ஸின் பல அம்சங்கள், நிஜ உலகத்திற்கு மிகவும் ஒத்ததாக இருக்கும் மற்றும் சில நிஜ உலக செயல்பாடுகளையே கூட மாற்றலாம்.

ஏற்கனவே சில மெட்டாவேர்ஸ் நான்-பஞ்சபிள் டோக்கன் (Metaverse non-fungible token - NFT) விற்பனையாளர்கள் தங்கள் NFT-களை ஆடைகள் மற்றும் காலனிகளாக, சில மெட்டாவேர்ஸ் கேம்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் செயல்படுத்தியுள்ளனர். மேலும் பலர், இந்த களத்தில் இறங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

பணம் கொடுத்து பயன்படுத்துற அளவுக்கு Telegram Premium-ல அப்படி என்ன தான் இருக்கு?பணம் கொடுத்து பயன்படுத்துற அளவுக்கு Telegram Premium-ல அப்படி என்ன தான் இருக்கு?

சுதந்திரமாக மற்றும் வெளிப்படையாக!

சுதந்திரமாக மற்றும் வெளிப்படையாக!

ஆகமொத்தம் மெட்டாவேர்ஸின் கீழ் பயனர்கள் மற்றும் படைப்பாளிகள் என இருவருமே பெற்றுக்கொள்ள நிறைய இருக்கும், நிறைய கிடைக்கும்.

மேலும் மெட்டாவேர்ஸின் எதிர்காலமானது, ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது நிறுவனத்திடம் இருந்து எந்த இடையூறும் இல்லாமல், சுதந்திரமாக மற்றும் வெளிப்படையாக இயங்கும் ஒரு யோசனையையும் உள்ளடக்கும்.

மேலும் இதுபோன்ற மெட்டாவேர்ஸ் தொடர்பான தகவல்கள் மற்றும் லேட்டஸ்ட் டெக் நியூஸ்களுக்கு கிஸ்பாட் தமிழ் வலைத்தளத்தை பின்தொடரவும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Do you want to know how our future of work, life and business under Metaverse may look like in 2030 Check the details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X