அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!

|

நிறுவனத்தின் வருவாயை சரி செய்யும் வகையில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பயனர்கள் பாஸ்வேர்ட் பகிர்வதை தடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 2017 இல் பகிர்ந்த ஒரு ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

வைரலாகும் பழைய ட்வீட்

சமீபகாலமாக பாஸ்வேர்ட் பகிர்வதற்கு எதிராக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நெட்ஃபிளிக்ஸ் கடந்த 2017 ஆம் ஆண்டு பகிர்ந்த ஒரு ட்வீட் சமூகவலைதளங்களில் வைரலாகத் தொடங்கி இருக்கிறது. அதில் நெட்ஃபிளிக்ஸ் "அன்பு என்பது கடவுச்சொல்லை பகிர்தல்" என குறிப்பிட்டிருக்கிறது.

காதல்னா என்ன சார்? பயனர்களிடம் வசமா சிக்கிய Netflix!

அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க!

நெட்ஃபிளிக்ஸ் 2017 ஆம் ஆண்டெல்லாம் பாஸ்வேர்ட் பகிர்வதை தடுக்க வேண்டும் என குறிப்பிடவில்லை. பலரையும் நெட்ஃபிளிக்ஸ் வாடிக்கையாளர்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இருந்தது. அந்த காலக்கட்டத்தில் நிறுவனம் நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்ட் பகிர வேண்டும் என பயனர்களை ஊக்கப்படுத்தியது. ஆனால் காலப்போக்கில் வருவாய் வீழ்ச்சியை சந்தித்தப் பிறகு நிறுவனம் பாஸ்வேர்ட் பகிர வேண்டாம் அறிவுறுத்தியது. தற்போது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவே தொடங்கி இருக்கிறது.

அன்பு என்பது பாஸ்வேர்ட் பகிர்வது என நெட்ஃபிளிக்ஸ் ட்வீட்

Netflix நிறுவனம் 2017 ஆம் ஆண்டு பகிர்ந்த "அன்பு என்பது பாஸ்வேர்ட் பகிர்வது" என்ற வார்த்தையை தற்போது நீங்கள் பின்பற்றினால் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. நெட்ஃபிளிக்ஸ் இந்த ட்வீட் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகத் தொடங்கி இருக்கிறது. பாஸ்வேர்ட் பகிர்வது தான் அன்பு என கூறிய நெட்ஃபிளிக்ஸ் தற்போது இதை செய்தால் அபராதம் என கூறி வருகிறது என நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Netflix சிஇஓ உறுதி

Netflix முன்னாள் சிஇஓ ரீட் ஹேஸ்டங்ஸ் கடந்த ஆண்டே பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை குறித்து உறுதி செய்தார். இந்த நிலையில் புதிய இணை-தலைமை நிர்வாக அதிகாரிகளான (CEO) கிரெக் பீட்டர் மற்றும் டெட் சரண்டோஸ் இதுகுறித்த கூடுதல் விவரங்களை சமீபத்தில் வெளிப்படுத்தினர்.

காதல்னா என்ன சார்? பயனர்களிடம் வசமா சிக்கிய Netflix!

நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை

முன்னதாகவே பல நாடுகளில் நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை அமலுக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த நடவடிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து நாடுகளிலும் விரிவு செய்யப்பட்டு மார்ச் 2023க்குள் முழுமையாக கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்கத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால், பயனர்கள் இந்த நடவடிக்கை அதிருப்தி அடையாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் விளம்பர ஆதரவு சந்தா திட்டத்தை அறிமுகம் செய்தது.

இந்தியர்கள் தயாராக இருப்பது நல்லது

வருவாயில் வீழ்ச்சியை சந்தித்த நெட்ஃபிளிக்ஸ் அதை சரிசெய்யும் விதமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. நெட்ஃபிளிக்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரீட் ஹேஸ்டிங்ஸ், பாஸ்வேர்ட் பகிர்வு விருப்பம் படிப்படியாக அனைவருக்கும் முடிவுக்கு வரும் கடந்த ஆண்டே அறிவித்தார். இந்த நிலையில் தற்போது புதிய இணை-தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) கிரெக் பீட்டர்ஸ் மற்றும் டெட் சாண்டோஸ் ஆகியோர் ப்ளூபெர்க் இடம் அளித்த ஒரு நேர்காணலில் நெட்ஃபிளிக்ஸ் கடவுச்சொல் பகிர்வு விருப்பம் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் முடிவடையும் என குறிப்பிட்டுள்ளனர்.

காதல்னா என்ன சார்? பயனர்களிடம் வசமா சிக்கிய Netflix!

இந்தியாவில் எப்போது அறிமுகம்?

Netflix சேவைக்கு பணம் செலுத்தாமல் தளத்தை பயன்படுத்த பிறரை நம்பி இருக்கும் பயனர்கள் விரைவில் பணம் செலுத்தத் தொடங்குவார்கள் என பீட்டர்ஸ் கூறினார். பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கையில் சிஇஓக்கள் இந்தியா போன்ற நாடுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 15-2. மில்லியன் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கின்றனர் என கூறப்படுகிறது.

எனவே நெட்ஃபிளிக்ஸ் பயன்படுத்த நண்பர்கள் அல்லது பிறரை நம்பி இருக்கும் இந்தியர்கள், இனி தளத்தை பயன்படுத்த விரைவில் பணம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

Best Mobiles in India

English summary
What is Love? Netflix Old Tweet Getting Viral When it's Preventing Password Sharing

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X