ஜியோ கிரிக்கெட் கோல்ட் பாஸ் என்றால் என்ன.? அதை பெறுவது எப்படி.?

இந்த கிரிக்கெட் கோல்ட் பாஸ் என்றால் என்ன.? அதை பெறுவது எப்படி.? அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன.?

|

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் கிரிக்கெட் ரசிகர்களை குறிவைத்து - கிரிக்கெட் கோல்ட் பாஸ் என்கிற ஒரு வாய்ப்பை அறிவித்துள்ளது. இந்த கிரிக்கெட் கோல்ட் பாஸ் என்றால் என்ன.? அதை பெறுவது எப்படி.? அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன.? என்பதை விரிவாக காண்போம்.

ஜியோ கிரிக்கெட் கோல்ட் பாஸ் என்றால் என்ன.?

ஜியோ கிரிக்கெட் கோல்ட் பாஸ் என்பது ரூ.251/- மதிப்புள்ள ஒரு ரீசார்ஜ் பேக் ஆகும். இது 102ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை மொத்தம் 51 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும். அதாவது ஐபிஎல் 2018 போட்டி முடிவு பெறும் நாள் வரை நன்மைகளை வழங்கும். இந்த பேக்கின் கீழ், நாள் ஒன்றிற்கு அதிக வேக 2 ஜிபி தரவு மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த வரம்பை மீறியதும், உங்களின் இணைய வேகம் 64kbps ஆகக் குறைக்கப்படும். இது டேட்டா நன்மையை மட்டுமே வழங்கும் ஒரு ரீசார்ஜ் திட்டம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அதாவது, ஜியோவின் மற்ற காம்போ திட்டங்களை போல வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற பிற நன்மைகளை எல்லாம் வழங்காது என்று அர்த்தம்.

ஜியோ கிரிக்கெட் கோல்ட் பாஸ் என்றால் என்ன.? அதை பெறுவது எப்படி.?

இருப்பினும், நீங்கள் ஏற்கனவே வேறு சில ஜியோ திட்டங்களை ரீசார்ஜ் செய்து இருந்தால், உங்களின் தற்போதைய தினசரி டேட்டா வரம்புடன் ரூ.251/-ன் 2ஜிபி டேட்டா இணைக்கப்படும். அதாவது ஜியோ கிரிக்கெட் கோல்ட் பாஸிலிருந்து, நாள் ஒன்றிற்கு கிடைக்கும் 2 ஜிபி அளவிலான தினசரி டேட்டா உங்களின் வழக்கமான டேட்டா வரம்புடன் சேர்க்கப்படும். எடுத்துக்காட்டிற்கு, நீங்கள் நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி வழங்கும் ரூ.399/-ஐ ரீசார்ஜ் செய்து உள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அத்துடன் சேர்த்து ரூ.251/-ஐ ரீசார்ஜ் செய்ய, மொத்தம் நாள் ஒன்றிற்கு 3.5 ஜிபி தரவு அளவிலான டேட்டா கிடைக்கும்.

ஜியோ கிரிக்கெட் கோல்ட் பாஸை ரீசார்ஜ் செய்வது எப்படி.?

வழிமுறை 01: http://www.jio.com/en-in/4g-plans க்கு செல்லவும். அங்கு இதர ஜியோ திட்டங்களுடன் சேர்த்து, கிரிக்கெட் பேக் ஆன ரூ.251/- தொகுக்கப்பட்டு இருக்கும். இதை நீங்கள் உங்களின் மைஜியோ ஆப் வழியாகவும் அணுகலாம்.

ஜியோ கிரிக்கெட் கோல்ட் பாஸ் என்றால் என்ன.? அதை பெறுவது எப்படி.?

வழிமுறை 02: ஒருமுறை நீங்கள் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய முடிவு செய்த பின், உங்கள் ஜியோ மொபைல் எண்ணை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். பின்னர் ரீசார்ஜ் வெற்றி அடைந்தது என்கிற என்கிற தகவல் காட்சிப்படும் வரை கேட்கப்படும் அனைத்து ஆன்-ஸ்க்ரீன் வழிமுறைகளையும் பின்பற்றவும்.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)

வழிமுறை 03: ரீசார்ஜ் முடிந்த பின்னர், ஜியோடிவி பயன்பாட்டை திறக்கவும். அங்கு நீங்கள் விரும்பும் அனைத்து ஐபிஎல் போட்டிகளையும் ஆன்லைனில் பார்க்கலாம். நீங்கள் நேரடியாக லைவ் ஸ்ட்ரீமை பார்க்க ஹாட்ஸ்டார் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யுமாறும் தெரிவிக்கப்படும்.

Best Mobiles in India

English summary
What is Jio Cricket Gold Pass and how to buy it to watch IPL 2018 matches live. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X