$8000 மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச் உள்ளே அப்படி என்னதான் இருக்குது?
$8000 மதிப்புள்ள் ரோலக்ஸ் வாட்சில் அப்படி என்ன இருக்கின்றது என்பதை விளக்குகிறது
யூடியூப் சேனல்களில் 'வாட் இஸ் இன்சைட்' என்ற சேனலை பலர் அறிந்திருக்கலாம். அறியாதவர்கள் இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள். இந்த சேனலில் ஒரு பொருளின் உள்ளே என்ன உள்ளது? என்பதை விரிவாக விளக்கி சொல்கிறது. தந்தை, மகன் என இருவரும் இந்த சேனலில் வீடியோக்களை அப்டேட் செய்து வருகின்றனர். இவர்களது லேட்டஸ் வீடியோவில் $8000 மதிப்புள்ள் ரோலக்ஸ் வாட்சில் அப்படி என்ன இருக்கின்றது என்பதை விளக்குகிறது

இந்த வீடியோவில் இன்னொரு யூடியூப் பயனாளியின் வாட்சை உடைத்து அதன் உள்ளே என்ன உள்ளது என்பதை தந்தையும் மகனும் விளக்குகின்றனர். அதில் உள்ள பொருள், அதன் பயன், செயல், வடிவம் ஆகிய அனைத்தையும் இந்த வீடியோ விளக்குகிறது. இந்த சேனலின் உரிமையாளரான கோடி என்பவர் உண்மையில் ஒரு விஞ்ஞானி. அவர் வேதியியல் பொருட்களை ஆராய்ச்சி செய்பவர். இவர் $8000 மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச்சை உடைத்து, அதில் உள்ள வைரம், சில்வம், தங்கம் உள்பட அனைத்து பொருட்களையும் தனித்தனியே எடுத்து இந்த வீடியோவில் விளக்கியுள்ளார்.

இந்த வீடியோவில் ஒரு பொருளில் உள்ள அனைத்து பகுதிகளையும் எப்படி பிரித்தெடுப்பது, பிரித்தெடுக்க பயன்படும் எக்ஸ்ரே துப்பாக்கி, அதன் வேகம், சக்தி, இயங்கும் த்ன்மை என மிகத் தெளிவாக விளக்குகிறார். அனைத்து பொருட்களையும் அக்குவேறு ஆணி வேறாக பிரித்தவுடன் தந்தையும் மகனும் இணைந்து அதை ஒரு பொட்டலமாக கட்டி அதனை நமக்கு புரியும் படி விளக்குகின்றனர்.

ஒருமுறை பொருளின் தன்மைகள் குறித்து விளக்கியவுடன் இன்னொரு வீடியோவில் அதனை மீண்டும் ஒன்று சேர்ப்பது குறித்த வீடியோவும் பதிவு செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர் அந்த பொருளின் உள்ளே உள்ள ஒவ்வொரு பொருளின் மதிப்பையும் அளவிடுகிறார். ரோலக்ஸ் வாட்ச்சில் உள்ள ஒவ்வொரு பொருளின் மதிப்பையும் அவர் மதிப்பிடுவதை பார்க்க நமக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். $8000 மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்சில் $500 மதிப்புள்ள உலோகங்களும், வைரங்களும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட மொத்த மதிப்பில் இவை பத்து சதவிகிதம் உள்ளது
ஒரு பொருளின் உள்ளே உள்ள பாகங்கள் குறித்து அறிய விரும்புபவரா நீங்கள்? ஆம் என்றால் 'வாட் இஸ் இன்சைட்' என்ற யூடியூப் சேனலை சம்ஸ்கிரைப் செய்து ரோலக்ஸ் வாட்சில் இருப்பது என்ன? என்பது போன்ற வீடியோக்களை பாருங்கள்


Click it and Unblock the Notifications








