ஹைப்பர் லூப் என்றால் என்ன?

By Siva
|

எலான் மஸ்க் என்பவர் குறித்து கேள்விப்பட்டதுண்டா? அப்படி கேள்விப்படவில்லை என்றால் உடனே தேடி கண்டுபிடித்து தெரிந்து கொள்ளுங்கள். செவ்வாய் கிரகத்தின் ஆராய்ச்சி, டிரைவர் இல்லமால் செல்லும் கார் ஆகிய ஆராய்ச்சியில் வெற்றி பெற்ற இவர் கண்டுபிடித்த புதிய போக்குவரத்து டெக்னாலஜிதான் இந்த ஹைப்பர் லூப்

ஹைப்பர் லூப் என்றால் என்ன?

ஹைப்பர் லூப் என்றால் என்ன?

இதுவொரு குழாய் போன்ற வடிவத்தில் பூமிக்கு மேல் பாலத்திலோ அல்லது பூமிக்கு உள்ளே இருக்கும். இதன் உள்ளே ரப்பர் டியூப் போன்ற வடிவத்தில் கார் போன்று பகுதி பகுதியாக அமைக்கப்பட்டிருக்கும். அதில் தான் பயணிகள் பயணம் செய்வார்கள். இந்த ஹைப்பர்லூப் பயண ஊர்தி மணிக்கு 1200 கிமீ பயணம் செய்யும்.

12.3-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான கூகுள் பிக்சல்புக்.!12.3-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான கூகுள் பிக்சல்புக்.!

கடந்த 2013ஆம் ஆண்டு எலான் மஸ்க் என்பவரின் மூளையில் உதித்த இந்த ஊர்தி முதல்கட்டமாக மணிக்கு 610 மைல்கள் வேகத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நமரில் இருந்து சான்பிராசிஸ்க்கோ நகருக்கு வெறும் 30 நிமிடத்தில் சென்றுவிடும் தன்மையுடையும் அளவுக்கு உருவாக்கப்படவுள்ளது.

ஹைப்பர் லூப் என்றால் என்ன?

ஹைப்பர்லூப் வேலை செய்வது எப்படி?

இந்த ஹைப்பர் லூப் ஊர்தி என்பது குழாய்க்கும் கேப்ஸூல் என்று கூறப்படும் பயணிகள் பகுதிக்கும் இடையில் காந்த புலம் உண்டாக்க பட்டு அது தரும் விசையினால் இந்த ஊர்தி ஓடுகிறது.

காற்று மற்றும் பிறவற்றல் ஏற்படும் தடையை போக்க காற்றை உறிஞ்சி பின்னுக்கு தள்ளும் கம்ப்ரெசர் அமைப்பு ஒன்று இதில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கேப்ஸுளுக்கும் டியுபுக்கும் உள்ள இடைவெளியில் காற்று உராயவை குறைக்கவும் ஒரு அமைப்பு இதில் உண்டு.

பூகம்பம் வந்தால் கூட இது தாங்கக்கூடிய வகையில் உருவாக்கப்படும் இந்த போக்குவரத்து ஊர்தி இயங்க எந்த எரிபொருளும் தேவையில்லை ஏனெனில் இதன் மேற்பகுதியில் அதாவது குழாய்களின் வெளிப்பகுதி கூரையில் பதிக்க பட்டுள்ள சோலார் தகடுகள் இந்த ஊர்தி ஓடுவதற்கு தேவையான ஆற்றலை கொடுக்கும்

இந்தியாவில் முதல் ஹைப்பர்லூப் ஊர்தி ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா மற்றும் அமராவதிக்கு இடையே இயங்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த இரு நகரங்களுக்கு இடையே உள்ள 35 கிமீ தூரத்தை வெறும் ஐந்து நிமிடங்களில் இந்த போக்குவரத்து ஊர்தியின் மூலம் கடந்துவிடலாம்.

இந்த திட்டத்தின் பட்ஜெட் மற்றும் தொடங்கப்படும் தேதி குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை. எனினும் மிக விரைவில் இந்த திட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Elon Musk works on various innovative projects ranging from Mars colonization, automated driving cars and the recent one to add to the list is none other than Hyperloop transportation system.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X