கூகுளின் பிரம்மாண்ட கண்காட்சி!

By Super
|
கூகுளின் பிரம்மாண்ட கண்காட்சி!

சர்ச் என்ஜினான கூகுளின் ஆற்றல் என்ன என்பது, இன்டர்நெட்டில் தகவல்களை தேடும் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் கூகுள் நிறுவனத்தின் ஐஓ கண்காட்சி நேற்று சான் ஃப்ரானிசிஸ்கோவில் துவங்கியது.

கூகுள் ஐஓ என்றால் என்ன? இதில் யாரெல்லாம் பங்கு பெறலாம்? இந்த கண்காட்சியின் என்ன தான் நடக்கும்? என்ற கேள்விகளுக்கு பதில் இதோ!

நேற்று துவங்கிய இந்த கூகுள் ஐஓ கண்காட்சி 29-ஆம் தேதி வரையில் நடை பெறும். இதில் கூகுள் நிறுவனத்தின் புதிய தொழில் நுட்பங்கள் அனைத்தும் அறிமுகமாகும்.

வெப், மொபைல், அப்ளிக்கேஷன் டெவலப்பர்கள் போன்று தொழில் நுட்பம் சம்மந்தமாக பணி புரிவோர் அனைவரும் கூகுளின் இந்த ஐஓ கண்காட்சியில் பங்கு பெறலாம். முன்பதிவு செய்வதன் மூலம் இந்த கண்காட்சியில் பங்குகொள்ளலாம்.

இந்த கண்காட்சிக்கு ரூ. 51,369 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. மாணவர்கள் பங்கேற்க தள்ளுபடியில் சில கட்டண சலுகைகளும் உள்ளது. மாணவர்கள், கல்லூரி ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு தள்ளுபடியில் ரூ. 17,125 கட்டணம் செலுத்தினால் போதும்.

மேலும் கூகுள் நிறுவனத்தின் அரிய பல தொழில் நுட்ப விவரங்களை நேரில் சென்று தெரிந்து கொள்ள, தொழில் நுட்பம் சார்ந்து பணி புரிவோருக்கு ஒரு அரிய வாய்ப்பாக இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது கூகுள்.

கூகுளின் இந்த ஐஓ கண்காட்சி நடை பெறும் நேரமும் கொடுக்கப்பட்டுள்ளது. 27, 28, 29 என்று 3 தினங்கள் நடக்க இருக்கும் இந்த நிகழ்ச்சியில் ஒரு நாள் நிறைவடைந்துவிட்டது. ஆனால் இந்த 3 நாட்களிலும், 3 விதமாக நேரங்களில் நடக்கிறது கூகுள் ஐஓ.

27-ஆம் தேதி காலை 9 மணியில் இருந்து மாலை 5.15 மணி வரையில் நடந்தது. மீண்டும் மாலை 6.30 மணியில் இருந்து இரவு 10.30 மணி வரையில் நடை பெற்றது.

இன்று காலை 8.30 மணியில் இருந்து 5.45 மணி வரையிலும், நாளை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரையிலும் கூகுள் ஐஓ நடை பெறும்.

தொழில் நுட்பம் சம்மந்தமாக இல்லாமல் மற்ற நபர்கள் இந்த கண்காட்சியினை பார்ப்பதற்காக, இந்த நிகழ்ச்சிகள் வீடியோவாகவும் வெளியாக இருக்கிறது. மேலும் இதன் விவரங்களை அரிய இங்கே க்ளிக் செய்யவும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X