பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

|

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா நடவடிக்கை பல கட்டங்கள் முன்னேறி வருகிறது. ஆன்லைன் பரிவர்த்தனை, இ-கல்வி என தொடங்கி பெரும்பாலானோர் கையில் இணைய சேவையுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு வந்துவிட்டது. தொடர்ந்து இதன் முன்னேற்ற நடவடிக்கையாக 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இ-பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

சிப் அடிப்படையிலான பாஸ்போர்ட்

சிப் அடிப்படையிலான பாஸ்போர்ட்

இந்திய அரசு சிப் அடிப்படையிலான பாஸ்போர்ட்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த இ-பாஸ்போர்ட் ஆனது சிறிய மின்னணு சிப் உடன் வருகிறது. இந்த சிப் அடிப்படையிலான பாஸ்போர்ட்களை TCS உருவாக்கி வருகிறது. இ-பாஸ்போர்ட்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது.

சிப் பாஸ்போர்ட் என்பது புதிதல்ல

சிப் பாஸ்போர்ட் என்பது புதிதல்ல

சர்வதேச பயணத்தை எளிதாக்குவதற்கும் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் தரவுகளை பாதுகாப்பதற்கும் இந்திய அரசாங்கம் இ-பாஸ்போர்ட்களை அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் இ-பாஸ்போர்ட்கள் பயன்பாடு தொடங்கப்படும் என்பதை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிப்படுத்தினார். சிப் அடிப்படையிலான இ-பாஸ்போர்ட் என்பது புதிது அல்ல. 100-க்கும் மேற்பட்ட நாடுகள் முன்னதாவே இ-பாஸ்போர்ட்களை வழங்குகின்றன.

பல நாடுகளில் பயன்படுத்தப்படும் இ-பாஸ்போர்ட்

பல நாடுகளில் பயன்படுத்தப்படும் இ-பாஸ்போர்ட்

சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பு தரவுகளின் படி, அயர்லாந்து, ஜிம்பாப்வே இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளும் இ-பாஸ்போர்ட்களை வெளியிட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது. இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, அது எப்படி பாதுகாப்பாக செயல்படுகிறது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விரிவாக பார்க்கலாம்.

இ-பாஸ்போர்ட் என்றால் என்ன?

இ-பாஸ்போர்ட் என்றால் என்ன?

இந்த இ-பாஸ்போர்ட்களும் சாதாரண பாஸ்போர்ட் போன்றே அனைத்து பயன்பாட்டுக்கும் பயன்படும். தற்போது ஓட்டுனர் உரிமத்தில் உள்ளதை போலவே சிறிய எலெக்ட்ரானிக் சிப் உடன் இது வரும். பாஸ்போர்ட்டில் பொருத்தப்பட்டிருக்கும் சிப் இல் பயனர்களின் அனைத்து விவரங்களும் சேமித்து வைத்திருக்கப்படும். இந்த விவரங்களில் பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட பிற தகவல்களும் அடங்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

போலிகளை குறைக்கவும் பாதுகாப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை

போலிகளை குறைக்கவும் பாதுகாப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை

இந்த இ-பாஸ்போர்ட்களில் (RFID) எனப்படும் Radio Frequency Identification சிப் பொருத்தப்பட்டிருக்கிறது. இது பயணிகளின் தரவுகளை விரைவாக சரிபார்க்க அதிகாரிகளுக்கு உதவும். இதன்மூலம் புழக்கத்தில் இருக்கும் போலி பாஸ்போர்ட்களை குறைக்கவும் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தவும் முடியும்.

இ-பாஸ்போர்ட்களை யார் தயாரிக்கிறார்கள்? எப்போது வெளியாகும்?

இ-பாஸ்போர்ட்களை யார் தயாரிக்கிறார்கள்? எப்போது வெளியாகும்?

தொழில்நுட்ப நிறுவனமான Tata Consultancy Services (TCS) இ-பாஸ்போர்ட்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த தகவல் இந்திய அரசாங்கத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. இந்தாண்டு இறுதிக்குள் இந்த சேவை வெளியிடப்படும் என்பது உறுதி செய்யப்பட்டாலும் குறிப்பிட்ட தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

முன்னதாகவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மேம்படுத்த வேண்டுமா?

முன்னதாகவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மேம்படுத்த வேண்டுமா?

தற்போது பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அதை இ-பாஸ்போர்ட்டாக மேம்படுத்த வேண்டுமா அல்லது இ-பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க தற்போது பயன்படுத்தப்படும் பாஸ்போர்ட் காலாவதியாகும் வரை காத்திருக்க வேண்டுமா என்பதை அரசாங்கம் இன்னும் தெளிவுப்படுத்தவில்லை. புதிதாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் நாட்டில் இந்த சேவை வந்த உடன் உடனடியாக இ-பாஸ்போர்ட்டை பெறவார்கள் என கூறப்படுகிறது.

குடிமக்களுக்கு இ-பாஸ்போர்ட் வழங்கும் அரசு

குடிமக்களுக்கு இ-பாஸ்போர்ட் வழங்கும் அரசு

2022-23 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குடிமக்களுக்கு இ-பாஸ்போர்ட் வழங்க அரசு திட்டமிட்டிருக்கிறது என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்துள்ளார். இ-பாஸ்போர்ட் வழங்கும் அரசு திட்டம் குறித்த கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் முரளீதரன் மாநிலங்களவையில் பதிலளித்தார். இதுகுறித்து பிடிஐ செய்தித்தளத்தில் வெளியான தகவல்களை பார்க்கையில், இ-பாஸ்போர்ட் என்பது ஒருங்கிணைந்த காகிதத்துடன் கூடிய எலெக்ட்ரானிக் பாஸ்போர்ட் ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

விரைவாக தகவல் சரிபார்க்க முடியும்

விரைவாக தகவல் சரிபார்க்க முடியும்

ரேடியோ அதிர்வெண் அடையாள சிப் மற்றும் அது அண்டெனாவுடன் இணைக்கப்பட்ட வகையில் இருக்கும் எனவும் மத்திய இணை அமைச்சர் குறிப்பிட்டார். இந்த இ-பாஸ்போர்ட்களை தயாரிக்கும் பொறுப்பை தேசிய தகவல் மையத்திடம் வெளியுறவு அமைச்சகம் ஒப்படைத்திருக்கிறது. அதேபோல் இந்த இ-பாஸ்போர்ட் ஆனது நாசிக் பகுதியில் இருக்கும் இந்திய பிரஸ் மூலம் அச்சிடப்பட இருப்பதாக குறிப்பிட்டார்.

Best Mobiles in India

English summary
What is E-Passport? Government Going to Issue Chip based E-Passport this Year

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X