தெரியாம ரீசார்ஜ் பண்ணிட்டா.. நாங்க பொறுப்புல்ல.. எதுல 4K.. எது AD-FREE.. JioCinema-வின் ரூ.29 VS ரூ.89 பிளான்!
சில தினங்களுக்கு முன்னர்.. ஜியோ சினிமா ஆப் (JioCinema App) வாடிக்கையாளர்களுக்காக 2 புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த திட்டங்களின் விலை நிர்ணயம் - ரூ.29 மற்றும் ரூ.89 ஆகும். அதாவது இவ்விரு திட்டங்களுக்கும் இடையே ரூ.60 வித்தியாசம் உள்ளது.
உடனே.. "ரூ.60 வித்தியாசம் என்றால் இவ்விரு திட்டங்களுக்கும் இடையேயான வேறுபாடுகளும் நிறைய இருக்கும் அல்லவா?" யோசிக்க வேண்டாம். உண்மையில் இவ்விரு திட்டங்களுக்கும் இடையே ஒரே ஒரு வேறுபாடு மட்டுமே உள்ளது. அதென்ன வேறுபாடு? ஜியோ சினிமாவின் ரூ.29 திடத்திற்கும் ரூ.89 திட்டத்திற்கும் இடையே என்ன வித்தியாசம்? இதோ விவரங்கள்:

ஜியோ சினிமா ரூ.29 திட்டத்தின் கீழ் என்னென்ன கிடைக்கும்? இந்த திட்டத்தின் கீழ் 4கே கன்டென்ட், ஆட்-ஃப்ரீ வியூவிங், ஆஃப்லைன் வியூவிங் ஆப்ஷன்ஸ் பிரத்யேக சீரீஸ், திரைப்படங்கள், ஹாலிவுட், கிட்ஸ் மற்றும் டிவி கன்டென்ட்கள் உள்ளிட நன்மைகள் 1 மாத காலத்திற்கு கிடைக்கும்.
இந்த திட்டத்தில் உள்ள ஆட்-ஃப்ரீ அம்சமானது ஸ்போர்ட்ஸ் மற்றும் லைவ் சேனல்களுக்கு கிடைக்காது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது தவிர ரூ.29 திட்டத்தின் கீழ் ஒரு நேரத்தில் ஒரே ஒரு டிவைஸின் கீழ் மட்டுமே கன்டென்ட்களை பார்க்க முடியும். இருப்பினும் இந்த திட்டம் மொபைல் ஆப், வெப் மற்றும் டிவி உட்பட அனைத்து டிவைஸ்களிலும் கன்டென்டை பார்க்க அனுமதிக்கும்.

ஜியோ சினிமா ரூ.89 திட்டத்தின் கீழ் என்னென்ன கிடைக்கும்? இந்த திட்டமானது 99 சதவிகிதம் ரூ.29-ன் கீழ் கிடைக்கும் அதே நன்மைகளைத்தான் வழங்குகிறது. அதாவது இது 4கே கன்டென்ட், ஆட்-ஃப்ரீ வியூவிங், ஆஃப்லைன் வியூவிங் ஆப்ஷன்ஸ் பிரத்யேக சீரீஸ், திரைப்படங்கள், ஹாலிவுட், கிட்ஸ் மற்றும் டிவி கன்டென்ட்கள் உள்ளிட நன்மைகள் 1 மாத காலத்திற்கு வழங்கும்.
மேலும் ரூ.29-ஐ போலவே இந்த திட்டத்திலும் கூட ஆட்-ஃப்ரீ அம்சமானது ஸ்போர்ட்ஸ் மற்றும் லைவ் சேனல்களுக்கு கிடைக்காது. பிறகு ரூ.29-க்கும் ரூ.89-க்கும் என்னதான் வித்தியாசம் என்று கேட்டால்.. ரூ.89-ன் கீழ் ஒரு நேரத்தில் 4 டிவைஸ்களின் கீழ் கன்டென்ட்களை பார்க்க முடியும்.

அதாவது ரூ.29-ன் கீழ்.. ஒரே நேரத்தில் மொபைல் ஆப் அல்லது வெப் அல்லது டிவி ஆகிய ஏதேனும் ஒரு டிவைஸ் வழியாக மட்டுமே கன்டென்டை பார்க்க முடியும். ஆனால் ரூ.89-ன் கீழ்.. ஒரே நேரத்தில் மொபைல் ஆப், வெப், டிவி மற்றும் இன்னொரு டிவைஸ் அல்லது 4 ஸ்மார்ட்போன்கள் வழியாக கன்டென்டை பார்க்க முடியும்.
இந்த 2 திட்டங்களையும் புதிய திட்டங்கள் என்றும் கூறலாம் அல்லது ஜியோ நிறுவனமானது அதன் ஜியோ சினிமா பிரீமியம் சந்தா திட்டத்தின் மீது கொண்டுவந்துள்ள விலைக்குறைப்பு என்றும் கூறலாம்.
நினைவூட்டும் வண்ணம் ஜியோ சினிமா பிரீமியம் சந்தாவானது, முன்னதாக மாதத்திற்க்கு ரூ.99 க்கு அணுக கிடைத்தது. தற்போது அது ரூ.29 ஆக குறைக்கப்பட்டுள்ளது அதாவது ஜியோ நிறுவனமானது அதன் ஓவர்-தி-டாப் (ஓடிடி) பிளாட்ஃபார்மின் விலையை மூன்றில் இரண்டு பங்கு குறைத்து உள்ளது.
ஜியோ சினிமா பிரீமியம் ரூ.99 சந்தா திட்டமானது, 1 ஆண்டு திட்டமாக.. ரூ.999 க்கு அணுக கிடைத்ததும் என்பதும், ரூ.99 மாறட்டும் ரூ.999 ஆகிய இரண்டு ஜியோ சினிமா பிரீமியம் திட்டங்களுமே விளம்பரங்கள் இல்லாமல் ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களுக்கான ஆதரவை வழங்கின என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் நிறுவனமும் இதேபோன்ற நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. சினிமாபிளஸ் (Cinemaplus) எனப்படும் தனது ஓடிடி சேவையின் மீது தற்போது 50% தள்ளுபடியை அறிவித்துள்ளது. வழக்கமாக, இது மாதத்திற்கு ரூ.99 க்கு கிடைக்கும், ஆனால் இப்போது, வெறும் ரூ.49-க்கு ஸ்டார்டர் பேக்கை (Starter Pack) பெற முடிகிறது.
பிஎஸ்என்எல் சினிமாபிளஸ் ஸ்டார்டர் பேக்கின் கீழ் லயன்ஸ்கேட் (Lionsgate), ஷீமாரோ மீ ( ShemarooMe), ஹங்காமா (Hungama) மற்றும் எபிக் ஆன் (Epic On) உள்ளிட்ட பல ஓடிடி இயங்குதளங்களுக்கான அணுகல்கள் கிடைக்கும். இதே சேவையின் கீழ் ரூ.199 க்கும் ஃபுல் பேக் (Full Pack) மற்றும் ரூ.249 க்கு பிரீமியம் பேக்கும் (Premium Pack) கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications