ரெடியா இருங்க! அடுத்த RIP மீம்ஸ்.. CAPTCHA கோட்-களுக்கு தான்! அப்படி என்ன நடந்தது?

|

நம்மில் பலருக்கும் கேப்ட்சா கோட் (CAPTCHA Code) பற்றி பெரிய அளவிலான அறிமுகம் தேவைப்படாது. ஆனால் விளக்கம் தேவைப்படலாம். அதாவது கேப்ட்சா குறியீடுகளின் நோக்கம் என்ன என்கிற விளக்கம் தேவைப்படலாம்.

கேப்ட்சா கோட்களின் பிரதான நோக்கம் என்னவென்றால் ஸ்பேம் (Spam) மற்றும் பாஸ்வேர்ட் டிக்ரிப்ஷனில் (Password decryption) இருந்து உங்களை பாதுகாப்பதே ஆகும்.

அம்மா சாத்தியமா... நான் ரோபோட் இல்லங்க!

அம்மா சாத்தியமா... நான் ரோபோட் இல்லங்க!

லாக்-இன் செய்ய முயற்சிக்கும் வழியில் கோரப்படும் கேப்ட்சா கோட் செயல்முறையின் கீழ், நீங்கள் ஒரு மனிதர் தான், பாஸ்வேர்ட் ப்ரொடெக்டட் அக்கவுண்ட்டில் லாக்-இன் செய்ய முயற்சிக்கும் ஒரு கம்ப்யூட்டர் (ஒரு ரோபோட்) அல்ல என்பதை நிரூபிக்கும் ஒரு எளிய சோதனை நடத்தப்படும்; அவ்வளவுதாங்க கேப்ட்சா கோட்!

இது முழுக்க முழுக்க பாதுகாப்பு தொடர்பான ஒரு செயல்முறையாக இருந்தாலும் கூட, மிகவும் சலிப்பான ஒரு வேலையும் கூட!

ஏன்? கேப்ட்சா கோட் இல்லாத ஒரு வழிமுறையை கண்டுபிடிக்க கூடாதா?

ஏன்? கேப்ட்சா கோட் இல்லாத ஒரு வழிமுறையை கண்டுபிடிக்க கூடாதா?

இந்த கேள்விக்கு, அமெரிக்காவை தளமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் "செஞ்சிட்டா போச்சு!" என்று பதில் அளிக்கும் வண்ணம் ஒரு புதிய அப்டேட்டை கொண்டு வருகிறது, அதுவும் ஐஓஎஸ் 16 வழியாக!

கடந்த ஜூன் 6, 2022 அன்று நடந்த, ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில், ஐபோன்களுக்கான ஐஓஎஸ் 16 அப்டேட் அறிவிக்கப்பட்டது. இந்த லேட்டஸ்ட் ஐஓஎஸ் ஆனது பல வகையான புதிய அம்சங்களை கொண்டு வருகிறது.

Netflix இல் தெரியாம கூட இந்த 3 மேட்டரையும் செஞ்சிடாதீங்க.. இல்லனா Account சோலி முடிஞ்ச்சு!Netflix இல் தெரியாம கூட இந்த 3 மேட்டரையும் செஞ்சிடாதீங்க.. இல்லனா Account சோலி முடிஞ்ச்சு!

அந்த லிஸ்டில் கேப்ட்சா-வை பைபாஸ் செய்ய வழிவகுக்கும் அம்சமும் அடக்கம்!

அந்த லிஸ்டில் கேப்ட்சா-வை பைபாஸ் செய்ய வழிவகுக்கும் அம்சமும் அடக்கம்!

MacRumors வழியாக கிடைத்த தகவல் என்று குறிப்பிட்டு, செய்தி நிறுவனமான IANS வழியாக வெளியான ஒரு புதிய அறிக்கையின்படி, ஆப்பிளின் ஆல்-நியூ ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆன ஐஓஎஸ் 16-இல், ஆப்ஸ் மற்றும் வெப்சைட்களில் கோரப்படும் கேப்ட்சா செயல்முறையை தவிர்ப்பதற்கான ஆதரவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செட்டிங்ஸ் ஆப்பில் அணுக கிடைப்பதாக கூறப்படும் இந்த அம்சம் இயக்கப்படும் போது, ​​ஆப்பிள் ஐக்ளவுட் ஆனது தானாகவே மற்றும் தனிப்பட்ட முறையில் உங்கள் டிவைஸ் மற்றும் உங்கள் ஆப்பிள் ஐடி அக்கவுண்ட்டை - பேக்கிரவுண்டில் - சரிபார்க்குமாம்.

இந்த அம்சம் எவ்வாறு வேலை செய்யும்?

இந்த அம்சம் எவ்வாறு வேலை செய்யும்?

'டெக்னீக்கல்' ஆன விடைகளை தேடுபவர்கள், இதுகுறித்து ஆப்பிள் பகிர்ந்துள்ள வீடியோவை பார்க்கலாம். அதில் இந்த அம்சம் எப்படி செயல்படுகிறது என்பது பற்றிய தொழில்நுட்ப விவரங்கள் உங்களுக்கு அணுக கிடைக்கும்.

மேலோட்டமான பதில்களை தேடுகிறீர்கள் என்றால், ஆப்பிளின் சிஸ்டம் ஆனது உங்கள் டிவைஸ் மற்றும் ஆப்பிள் ஐடி அக்கவுண்ட் நல்ல நிலையில் உள்ளதா என்பதை சரிபார்க்கும்.

பின்னர் கேப்ட்சா கோட் செயல்முறை எதுவும் இல்லாமல் குறிப்பிட்ட ஆப் அல்லது வெப்சைட்டிற்கு பிரைவேட் அக்செஸ் டோக்கன் (Private Access Token) என்கிற பெயரின் கீழ் அணுகலை வழங்கும், அவ்வளவு தான்!

இதன் கீழ் பாதுகாப்பு ஓட்டைகள் ஏற்படுமா?

இதன் கீழ் பாதுகாப்பு ஓட்டைகள் ஏற்படுமா?

கேப்ட்சா செயல்முறை உடன் ஒப்பிடும்போது, பிரைவேட் அக்செஸ் டோக்கன் ஆனது லாக்-இன் செய்யும் போதும் அல்லது ஒரு புதிய அக்கவுண்ட்டை உருவாக்கும் போதும், மேம்படுத்தப்பட்ட மற்றும் சிறந்த யூசர் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் என்று எவரும் நம்பலாம். ஆனால் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படுமா என்பது குறித்து வரும் நாட்களில் தான் நாம் அறிந்துகொள்ள முடியும்.

VPN பயன்படுத்த தடை; இந்திய அரசாங்கம் அதிரடி உத்தரவு; இந்த லிஸ்டில் Google Drive-வும் இருக்கு!VPN பயன்படுத்த தடை; இந்திய அரசாங்கம் அதிரடி உத்தரவு; இந்த லிஸ்டில் Google Drive-வும் இருக்கு!

இன்னும் சில காலங்கள் கழித்து கேப்ட்சா குறியீடுகள் - காணமால் போகும்!

இன்னும் சில காலங்கள் கழித்து கேப்ட்சா குறியீடுகள் - காணமால் போகும்!

வெளியான அறிக்கையின்படி, Cloudflare மற்றும் Fastly ஆகியவை ஏற்கனவே பிரைவேட் அக்செஸ் டோக்கன்களுக்கான ஆதரவை அறிவித்துள்ளன.

அதாவது கேப்ட்சாக்களை புறக்கணிக்கும் இந்த திறன் அந்தந்த ஆப்ரேட்டிங் சிஸ்டமின் கீழ் இயக்கப்படும் மில்லியன் கணக்கான ஆப்ஸ் மற்றும் வெப்சைட்களுக்கு அணுக கிடைக்கிறது. மேலும் காலப்போக்கில் இந்த இந்த அம்சம் மிகவும் பரவலாகவும் வெளிவரலாம்.

அதாவது எப்படி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ப்ரவுஸர் ஆனது இப்போது RIP மீம்ஸ்களில் அடிபடுகிறதோ அதே போல வருங்காலத்தில் Captcha-க்களும் RIP மீம்ஸ்களில் சிக்கலாம், ஆச்சரியப்படுவதற்கில்லை!

இது அனைவருக்கும் அணுக கிடைக்குமா?

இது அனைவருக்கும் அணுக கிடைக்குமா?

நினைவூட்டும் வண்ணம், ஐஓஎஸ் 16 மற்றும் ஐபேட்ஓஎஸ் 16-இன் முதல் பீட்டா வெர்ஷன்களில், டீபால்ட் ஆகவே ஆட்டோமேட்டிக் வெரிஃபிகேஷன் (Automatic Verification) இயக்கப்பட்டு இருந்தது.

மேக்ஓஎஸ் வென்ச்சுராவிலும் (macOS Ventura) இந்த அம்சம் ஆதரிக்கப்படுவதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த அனைத்து சாப்ட்வெர் அப்டேட்களும் தற்போது பீட்டாவில் மட்டுமே உள்ளன, இந்த ஆண்டு இறுதியில் அனைவருக்கும் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Photo Courtesy: Twitter

Best Mobiles in India

English summary
This is how Apple Kill Captchas uses Private Access Token via iOS 16 Update. Check full details.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X