ரூ.1000 கேரண்டி.. Airtel பிளான்களில் கிடைக்கும் Blue Ribbon Bag நன்மை பற்றி தெரியுமா?
அடடா இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே.. என்று ஏர்டெல் (Airtel) கஸ்டமர்கள் கவலைப்படும் அளவிற்கு ஏர்டெல் போஸ்ட்பெய்ட் சேவையின் கீழ் ஒரு அட்டகாசமான நன்மை அணுக கிடைக்கிறது. அது ப்ளூ ரிப்பர் பேக் கவரேஜ் (Blue Ribbon Bag Coverage) ஆகும். ஒருவேளை ப்ளூ ரிப்பர் பேக்ஸ் கவரேஜ் பற்றி உங்களுக்கு ஐடியாவே இல்லையா?
கவலையே வேண்டாம்! ஏர்டெல் போஸ்ட்பெய்ட் சேவையின் கீழ் கிடைக்கும் ப்ளூ ரிப்பர் பேக்ஸ் கவரேஜ் நன்மை என்றால் என்ன? இது எந்தந்த திட்டங்களில் அணுக கிடைக்கும்? ப்ளூ ரிப்பர் பேக்ஸ் கவரேஜின் கீழ் உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்? இதோ விவரங்கள்:

ப்ளூ ரிப்பன் பேக்ஸ் என்பது ஒரு பேக்கேஜ் சேவை (baggage service) ஆகும். இது விமான பயணிகளை மன அமைதியுடன் பறக்க அனுமதிக்க உதவும் ஒரு சேவையாகும். இது, உங்களுடையய ஒரு விமான பயணத்திற்கு பின்னர், 4 நாட்கள் தேடியும் உங்களுடைய பை கிடைக்கவில்லை என்றால், ஒவ்வொரு பைக்கும் உத்தரவாதமாக ரூ.1000 வழங்கும். மேலும் ஏர்டெல் வழங்கும் இந்த சேவை உலகளவில் உள்ள விமான நிறுவனங்களுக்கும் பொருந்தும்
தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கவரேஜை வழங்க ப்ளூ ரிப்பன் பேக்ஸ் உடன் ஒரு இந்திய டெலிகாம் நிறுவனம் கூட்டு சேர்வது இதுவே முதல் முறை ஆகும். ஆனால் இந்த சேவை ரயில்வே வழியாக பயணிக்கும் எந்த பயணிக்கும் பயனளிக்காது என்பதை நினைவில் கொள்ளவும். மேலும், இந்த சலுகையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்ன என்பது தெளிவாக இல்லை.
ஆனால் எது எப்படியோ, அடிக்கடி விமானப் பயணத்தில் ஈடுபடும் ஏர்டெல் போஸ்ட்பெய்டு மொபைல் வாடிக்கையாளர்களுக்கு இது நிச்சயமாக பயனளிக்கும் ஒரு சேவையாக இருக்கும். பார்தி ஏர்டெல் நிறுவனமானது மாதத்திற்கு ரூ.449 முதல் தொடங்கும் அதன் அனைத்து போஸ்ட்பெய்ட் திட்டங்கள் உடனும் ப்ளூ ரிப்பன் பேக்ஸ் சேவையை வழங்குகிறது.
ஏர்டெல்லின் போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா நம்மையும் அணுக கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இப்படியாக நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் கூடுதல் நன்மைகள் ஆனது, ஏர்டெல் சேவையை நோக்கி புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
சமீபத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனமானது தனது ப்ரீபெய்ட் பயனர்களை, ஏர்டெல் போஸ்ட்பெய்டுக்கு அப்கிரேட் ஆக ஊக்குவிக்கும் புதிய சலுகை ஒன்றையும் அறிவித்துள்ளது. இதன்கீழ் 25ஜிபி அளவிலான டேட்டா இலவசமாக கிடைக்கிறது. கட்டண திருத்தங்களுக்கு பின்னர் - ஏர்டெல்லின் இன்ஃபினிட்டி ரூ.449 போஸ்ட்பெய்ட் திட்டம் தான் அதன் பயனர்களுக்குக் கிடைக்கும் நுழைவு நிலை போஸ்ட்பெயிட் விருப்பமாக உள்ளது.
மாதத்திற்கு ரூ.449 என்கிற செலவின் கீழ் கிடைக்கும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங்), ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் மாதத்திற்கு 50 ஜிபி டேட்டா ஆகிய நன்மைகள் கிடைக்கும். ஒருவேளை நீங்கள் பிரீபெய்டில் இருந்து போஸ்ட்பெய்டுக்கு அப்கிரேட் ஆகியிருந்தால் "வழக்கமான" 50ஜிபி டேட்டாவுடன் சேர்ந்து "கூடுதலாக" 25 ஜிபி டேட்டா என மொத்தம் மாதத்திற்கு 75ஜிபி டேட்டா கிடைக்கும்.
இதோடு 200ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் ஆதரவும் கிடைக்கும். இதன்கீழ் பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த மாதத்திற்கு நகர்த்த முடியும். ஒருவேளை நீங்கள் டேட்டா நன்மை முழுவதையும் பயன்படுத்தி விட்டீர்கள் என்றால், டேட்டா சேவைகள் நிறுத்தப்படும், பின்னர் ஒரு எம்பிக்கு 2 பைசா என்கிற அடிப்படையில் கட்டணம் விதிக்கப்படும்.
ரூ.449 திட்டத்தின் கீழ் ஏர்டெல் ரிவார்ட்ஸ் நன்மையின் கீழ் அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், 3 மாதங்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தா, இலவச ஹெலோ ட்யூன்ஸ் மற்றும் ப்ளூ ரிப்பன் பேக்ஸ் சேவை ஆகியவைகளும் கிடைக்கும் ரூ.449-ஐ ரீசார்ஜ் செய்யும் போஸ்ட்பெய்ட் பயனர்கள் மேற்கண்ட அனைத்து நன்மைகளையும் ஒரே சிம் கார்டில் பெறுவார்கள். 3 மாதங்களுக்குப் பிறகு, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மாதத்திற்கு ரூ.99 என்கிற கட்டணத்தின் கீழ் அணுக கிடைக்கும். மேலும் வாடிக்கையாளர்கள் இந்த ஓடிடி சேவையை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி கொள்ளலாம்.
இந்தியாவில் பார்தி ஏர்டெல் ஒரு மிகப்பெரிய போஸ்ட்பெய்டு மொபைல் சேவை வழங்குநராக உள்ளது. ப்ரீபெய்ட் சேவையில் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் ஜியோவானது ஏர்டெல்லை பின்னுக்கு தள்ள, இன்னும் பல மைல்களை தாண்ட வேண்டி உள்ளது. ஏர்டெல்லின் போஸ்ட்பெய்டு மொபைல் திட்டங்கள் அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் நிலையானவைகளாக உள்ளன, மேலும் பிரீமியம் திட்டங்கள் நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி நன்மைகளையும் வழங்குகின்றன!


Click it and Unblock the Notifications








