24 மணி நேரமும் உங்கள் Mobile Data On-ல் உள்ளதா? இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா?

|

நம்மில் பெரும்பாலானோரிடம் இப்போது ஸ்மார்ட்போன் இருக்கிறது, அதிலும் குறிப்பாக நம்முடைய எல்லா போன்களிலும் மொபைல் டேட்டா (Mobile data) இருக்கிறது. மொபைல் டேட்டா இல்லாத ஸ்மார்ட்போனை பார்ப்பது அரிதாகிவிட்டது. மொபைல் டேட்டா என்பது இப்போது அனைவருக்கும் தேவையான ஒரு முக்கிய அம்சமாகிவிட்டது. இதனால் தானோ என்னவோ, நம்மில் பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன் Mobile data அம்சத்தை On இல் வைத்திருக்கிறோம்.

24 மணி நேரமும் உங்கள் Mobile Data On-ல் உள்ளதா?

24 மணி நேரமும் உங்கள் Mobile Data On-ல் உள்ளதா?

இது சரியானது தானா? இல்லை தவறானதா? என்ற கேள்வி பலரிடமும் இருக்கிறது. ஒரு சிலர் மொபைல் டேட்டா அம்சத்தைத் தேவைப்படும் போது மட்டும் ஆன் செய்து பயன்படுத்துகிறார்கள். ஆனால், பெரும்பாலானோர் நோட்டிபிகேஷனை தவறவிடக் கூடாது என்பதற்காக மொபைல் டேட்டாவை 24 மணி நேரமும் ஆன் இல் வைக்கிறார்கள். இது உண்மையிலேயே என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

மொபைல் டேட்டா என்றால் என்ன?

மொபைல் டேட்டா என்றால் என்ன?

மொபைல் டேட்டா (Mobile data) என்பது ஸ்மார்ட்போனுக்கு தேவையான இன்டர்நெட் நெட்வொர்க் அம்சமாகும். இது பயனரை Wi-Fi இல் இல்லாத போது இணையத்தை அணுக அனுமதிக்கிறது. இணையத்துடன் இணைக்க உங்கள் போன் பொதுவாக 3G, 4G அல்லது 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். இதில் 3G மற்றும் 4G மட்டும் தான் மிகவும் பொதுவானவை மற்றும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் அணுகக்கூடியவை.

ஒரே ஸ்மார்ட்போனில் 2 WhatsApp நம்பரை பயன்படுத்துவது எப்படி? உங்க போனில் டூயல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாமா?ஒரே ஸ்மார்ட்போனில் 2 WhatsApp நம்பரை பயன்படுத்துவது எப்படி? உங்க போனில் டூயல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாமா?

மொபைல் டேட்டா ஏன் முக்கியமானது?

மொபைல் டேட்டா ஏன் முக்கியமானது?

நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான நிறைய விஷயங்களை இப்போது நாம் ஸ்மார்ட்போன் (smartphone) மூலமாக தான் தேடி நிறைவேற்றிக்கொள்கிறோம். டிஜிட்டல் உலகத்தில் (digital world) வாழும் மக்களுக்கு மொபைல் டேட்டா அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது. உதாரணமாக, உங்கள் சந்தேகங்களை கூகுள் சர்ச் (Google search) செய்து பார்ப்பது முதல், வாட்ஸ்அப் (WhatsApp) மெசேஜ் படிப்பது வரை எல்லாவற்றிற்கும் மொபைல் டேட்டா முக்கியமானது.

ஏன் மொபைல் டேட்டா முக்கியமானது?

ஏன் மொபைல் டேட்டா முக்கியமானது?

பொழுதுபோக்கிற்காக யூடியூப் வீடியோஸ் (YouTube) பார்ப்பது, இன்ஸ்டாகிராம் (Instagram) ஸ்க்ரோல் செய்வது, வீடியோ கால்ஸ் (Video calls) அழைப்பு, கேமிங் (Gaming), திரைப்படங்களை ஸ்ட்ரீமிங் (Online movie streaming) செய்தல், Spotify அல்லது Apple Music போன்ற இசை பயன்பாடுகளில் பாடல்களை ஸ்ட்ரீமிங் செய்வது போன்ற பெரும்பாலான விஷயங்களுக்கு இப்போது மொபைல் டேட்டா அவசியமாகிறது. இப்போது தெரிகிறதா ஏன் மொபைல் டேட்டா முக்கியமானதென்று.!

டூயல் சிம் பயனர்களுக்கு விழுந்த பேரிடி.! பாதிக்கப்படப் போகும் வாடிக்கையாளர்கள்.! என்னாச்சு?டூயல் சிம் பயனர்களுக்கு விழுந்த பேரிடி.! பாதிக்கப்படப் போகும் வாடிக்கையாளர்கள்.! என்னாச்சு?

உங்கள் போனில் மொபைல் டேட்டாவை எப்போதும் ஆன் இல் வைத்துள்ளீர்களா?

உங்கள் போனில் மொபைல் டேட்டாவை எப்போதும் ஆன் இல் வைத்துள்ளீர்களா?

மொபைல் டேட்டாவை எப்பொழுதும் இயக்கத்தில் வைத்திருக்கும் நபர் நீங்கள் என்றால், இதை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலானோர், மொபைல் டேட்டாவை எப்போதும் ஆன் இல் வைத்திருக்க முக்கிய காரணமே, அவர்களுக்கு வரும் நோட்டிபிகேஷன் மெசேஜ்களை தவறவிடக் கூடாது என்பதற்காகத் தான். ஆனால் இதைச் செய்யாமல் இருந்தால் நல்லது. ஏன் என்பது இங்கே..

மொபைல் டேட்டாவை எப்போதும் ஆன் இல் வைத்தால் என்ன சிக்கல் ஏற்படும்?

மொபைல் டேட்டாவை எப்போதும் ஆன் இல் வைத்தால் என்ன சிக்கல் ஏற்படும்?

முதலில் உங்கள் மொபைல் டேட்டாவை 24 மணி நேரமும் ஆன் (on) செய்து வைத்திருப்பது நல்லதல்ல. காரணம், இது உங்கள் போனின் ஆரோக்கியத்தையும், உங்களுடைய ஆரோக்கியத்தையும் பாதிப்படையச் செய்கிறது.

உங்கள் மொபைல் டேட்டா ஆஃப் (Off) செய்யப்பட்டிருப்பதை விட, ஆன் செய்யப்பட்டிருக்கும் போது தான் அதிகப்படியான பேட்டரி சக்தியை உறிஞ்சுவிடுகிறது. இது நடக்க சில காரணங்கள் உள்ளன.

பிளைட் மோடில் கூட இன்டர்நெட் யூஸ் செய்யலாமா? எப்படி? இந்த ரகசியம் பலருக்கும் தெரியாது.!பிளைட் மோடில் கூட இன்டர்நெட் யூஸ் செய்யலாமா? எப்படி? இந்த ரகசியம் பலருக்கும் தெரியாது.!

குறிப்பாக 'இந்த' பகுதிகளில் மொபைல் டேட்டாவை எப்போதும் ஆன் இல் வைக்க கூடாது.!

குறிப்பாக 'இந்த' பகுதிகளில் மொபைல் டேட்டாவை எப்போதும் ஆன் இல் வைக்க கூடாது.!

முதலாவதாக, உங்கள் ஸ்மார்ட்போன் நெட்வொர்க் கிடைக்கும் இடத்தில் இருந்தால் பெரியளவு சிக்கல் இல்லை. ஆனால், அதுவே நீங்கள் சரியாக நெட்வொர்க் கிடைக்கும் இடத்தில் இல்லையென்றால், உங்கள் போன் தொடர்ந்து சிக்னலைத் தேடும். குறிப்பாக மோசமான சிக்னல் உள்ள பகுதியில் நீங்கள் இருந்து, உங்கள் போன் சிக்னலை தேடும் போது உங்கள் போன் அதிக சக்தியைப் பயன்படுத்துகிறது. இது பல விஷயங்களை மோசமாகிவிடும்.

தேவையான நேரங்களில் மட்டும் மொபைல் டேட்டாவை ஆன் செய்வது சிறந்ததா?

தேவையான நேரங்களில் மட்டும் மொபைல் டேட்டாவை ஆன் செய்வது சிறந்ததா?

உங்கள் போனில் நெட்வொர்க் சூப்பராக கிடைத்தாலும், மொபைல் டேட்டாவை தேவைப்படும் போது மட்டும் இயக்கிக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது. காரணம், இது பேக்ரவுண்ட் ஆப்ஸ்களிடம் இருந்து இந்த டேட்டாவை பாதுகாக்கிறது மற்றும் உங்கள் பேட்டரி சக்தியை மிச்சம்பிடிக்கிறது.

அதனால், உங்களுக்குத் தேவையான நேரங்களில் மட்டும் மொபைல் டேட்டாவை ஆன் செய்வது சிறப்பானது மக்களே.

பூமியின் மிக பெரிய மிதக்கும் நகரம்.! 60000 பேர் தங்க கூடிய பிரமாண்டமான ஆமை வடிவ கப்பல்.!பூமியின் மிக பெரிய மிதக்கும் நகரம்.! 60000 பேர் தங்க கூடிய பிரமாண்டமான ஆமை வடிவ கப்பல்.!

இவ்வளவு பெரிய மறைமுக பிரச்சினை இருக்கிறதா?

இவ்வளவு பெரிய மறைமுக பிரச்சினை இருக்கிறதா?

சரி, நெட்வொர்க் இல்லாத இடங்களில் மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டிருந்தால் என்னவாகும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும் தானே. வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.

நெட்வொர்க் இல்லாத இடங்களில் மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டிருந்தால், உங்கள் போன் தொடர்ந்து சிக்னலை தேடி சர்ச் செய்துகொண்டிருக்கும்.

இந்த நேரத்தில் உங்கள் போன் தொடர்ச்சியாக வேலை செய்வதன் காரணமாக, போன் பேட்டரி சாதாரண நிலையை விட அதிக கதிர்வீச்சை வெளியிடும்.

உங்கள் போன் விரைவாகப் பழுதடைந்து விடுமா?

உங்கள் போன் விரைவாகப் பழுதடைந்து விடுமா?

இதன் காரணமாக உங்கள் போனின் பேட்டரி ஆயுள் குறைவதுடன், உங்கள் போனும் விரைவாகப் பழுதடைந்து விடுகிறது. அதுமட்டுமில்லாமல், அதிக கதிர்வீச்சு காரணமாக உங்கள் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது என்பதனால் கவனம் தேவை. அதேபோல், இந்த நேரத்தில் உங்கள் போன் அதிகம் வேலை செய்வதனால், போன் விரைவில் சூடாகிவிடும். இதுவும் நல்லதல்ல.!

4G போன் வாங்குவது சிறந்ததா அல்ல 5G போன் வாங்குவது சிறந்ததா? ரெண்டுமே தள்ளுபடியில் இருக்கு.!4G போன் வாங்குவது சிறந்ததா அல்ல 5G போன் வாங்குவது சிறந்ததா? ரெண்டுமே தள்ளுபடியில் இருக்கு.!

டேட்டா சுரண்டல் முதல் பாதுகாப்பு சிக்கலும் ஏற்படுமா?

டேட்டா சுரண்டல் முதல் பாதுகாப்பு சிக்கலும் ஏற்படுமா?

இதன் காரணமாக தான், மொபைல் டேட்டாவை 24 மணி நேரமும் On இல் வைத்து பயன்படுத்த வேண்டாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக நெட்வொர்க் சரியாகக் கிடைக்காத இடங்களில் மொபைல் டேட்டாவை எப்போதும் ஆன் இல் வைக்கும் பழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள். இது தவிர, உங்கள் போனின் மொபைல் டேட்டா ஆன் இல் இருக்கும் போது இரண்டாவதாக, பின்னணியில் டேட்டா சுரண்டப்படுகிறது மற்றும் பாதுகாப்பு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இறுதி முடிவு என்ன? எப்போது Mobile Data-வை பயன்படுத்துவது சிறப்பானது?

இறுதி முடிவு என்ன? எப்போது Mobile Data-வை பயன்படுத்துவது சிறப்பானது?

இன்டர்நெட் சேவை இயங்கிக்கொண்டிருக்கும் சாதனங்களில் தான் பெரும்பாலான ஹேக்கிங் மோசடிகள் நடப்பதனால், மொபைல் டேட்டாவை 24 மணி நேரமும் ஆன் இல் வைக்காமல் இருப்பது பாதுகாப்பானது என்றும் கூறப்படுகிறது. இறுதியாக, உங்கள் போனில் எப்போதும், 24 மணி நேரமும் மொபைல் டேட்டா ஆன் செய்யப்படாமல் இருப்பது உங்களுக்கும், உங்கள் போனிற்கும் ஆரோக்கியமானது பாதுகாப்பானது. தேவைப்படும் போது மட்டும் மொபைல் டேட்டாவை ஆன் செய்வது சிறப்பானது.

Best Mobiles in India

English summary
What happens when you keep your smartphone mobile data on for 24 hours daily

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X