விமான பயணத்தின் போது 'ஏர்பிளேன் மோட்'டை இயக்காவிடில் என்ன நடக்கும்.?

ஒரு விமானத்தில் பயணம் செய்யும் போது, ​​உங்கள் ஸ்மார்ட்போனை "ஸ்விட்ச் ஆப்" செய்யுமாறு அல்லது "ஏர்பிளேன் மோட்" பயன்முறைக்கு மாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுவீர்கள்.

|

என்னதான் அதிநவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த உலகில் நாம் வாழ்ந்தாலும் கூட, எல்லாவற்றிற்குமே ஒரு எல்லை உண்டு. குறிப்பிட்ட சேவை அல்லது தொழில்நுட்பத்தை குறிப்பிட்ட இடத்தில் பயன்படுத்த முடியாது; பயன்படுத்தவும் கூடாது. அதற்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு தான் - நமது ஸ்மார்ட்போன்களில் "காட்சிப்படும்" ஏர்பிளேன் மோட் (Airplane Mode).

விமான பயணத்தின் போது 'ஏர்பிளேன் மோட்'டை இயக்காவிடில் என்ன நடக்கும்.?

ஒரு விமானத்தில் பயணம் செய்யும் போது, ​​உங்கள் ஸ்மார்ட்போனை "ஸ்விட்ச் ஆப்" செய்யுமாறு அல்லது "ஏர்பிளேன் மோட்" பயன்முறைக்கு மாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுவீர்கள். அதன் நிஜமான காரணம் தான் என்ன.? ஒருவேளை அதனை (ஏர்பிளேன் மோட்) நிகழ்த்தவிட்டால் என்னவாகும்.? என்ற கேள்விக்கான விடைகளை நீங்கள் அறிவீர்களா.? ஆராய்வோம் வாருங்கள்.!

விமான விபத்து வரை கொண்டு செல்லும்.!

விமான விபத்து வரை கொண்டு செல்லும்.!

விமான பயணங்களின் போது - நெடுங்காலமாக - கண்மூடித்தனமான பின்பற்றப்படும் ஏர்பிளேன் பயன்முறையானது கிட்டத்தட்ட ஒரு கட்டாயமான செயல்முறையாகும் என்பதும், விமானத்தில் உள்ள ஒருவர் செய்யும் சிறிய தவறானது, விமான விபத்து வரை கொண்டு செல்லும் என்பதும் நிதர்சனம்.

ஒரு பிரச்சனையும் இல்லை.!

ஒரு பிரச்சனையும் இல்லை.!

நீங்கள் ஒரு விமானத்தில் பயணிக்கிறீர்கள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். விமான பணியாளர்களின் அறிவுரையின் படி, உங்களின் ஸ்மார்ட்போனை ஏர்பிளேன் பயன்முறைக்கு மாற்றி விட்டால், ஒரு பிரச்சனையும் இல்லை. ஒருவேளை மெசேஜிங் செய்து கொண்டோ அல்லது சமூக ஊடங்களில் மூழ்கிக்கொண்டோ இருக்கிறீர்கள் என்றால், பின்வரும் நிகழ்விகளில் ஒன்றை நிச்சயமாக சந்திக்க நேரிடும்.

குறிப்பிட்ட எரிச்சலூட்டும் சப்தம்.!

குறிப்பிட்ட எரிச்சலூட்டும் சப்தம்.!

பொதுவாகவே, உரையாடல் அல்லது தகவல் பரிமாற்றத்தில் இடையூறுகளை ஏற்படுத்தும் சலசலப்பான சப்தமானது விமானிகளை எரிச்சலடைய செய்யும். இவ்வகையான சப்தத்தினை உண்டாக்குவது வேறு எதுவுமில்லை - உங்கள் கைகளில் - ஏர்பிளேன் பயன்முறைக்குள் குதிக்காமல் இருக்கும் - ஸ்மார்ட்போன் தான்.

எமெர்ஜ்ன்சி தகவல் கிடைக்கப்பெறும் போது.?

எமெர்ஜ்ன்சி தகவல் கிடைக்கப்பெறும் போது.?

இந்த இடத்தில், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஒரு அவசர தகவல் வரும்போது, அதாவது சில மணித்துளிகளுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு எமெர்ஜ்ன்சி தகவல் கிடைக்கப்பெறும் போது, குறிப்பிட்ட எரிச்சலூட்டும் சப்தம் அல்லது இடையூறு நிகழ்ந்தால், என்ன நடக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.?!

நேவிகேஷன் கட்டுப்பாடுகளை தொந்தரவு செய்யும்.!

நேவிகேஷன் கட்டுப்பாடுகளை தொந்தரவு செய்யும்.!

விமானத்திரற்குள் நிகழும் ஸ்மார்ட்போன் பயன்பாடானது, விமானிகளுக்கு கிடைக்கப்பெறும் முக்கியமான வழிமுறைகளை அனுகும் (கேட்கும்) அல்லது கடந்து செல்லும் தன்மையை கடினமாக்கும். உங்கள் கைகளில் இயங்கும் சிறிய சாதனங்கள், ஆப்பிள் ஐபாட் கருவி உட்பட ஒரு விமானத்தின் நேவிகேஷன் கட்டுப்பாடுகளை தொந்தரவு செய்யும் அளவிலான திறனை கொண்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

How to check PF Balance in online (TAMIL)
பாதுகாப்பா.? பொழுதுபோக்கா.?

பாதுகாப்பா.? பொழுதுபோக்கா.?

எனவே, அடுத்த முறை 'ஏர்பிளேன் மோட்'தனை இயக்கும்படி உங்களிடம் கேட்டுக்கொள்ளப்படும் போது, சொன்னதை அப்படியே செய்யவும். ஒட்டுமொத்த விமானத்தின் பாதுகாப்பை விட உங்களின் பொழுதுபோக்கு ஒன்றும் அவசியமானது அல்ல என்பதை உணருங்கள். உங்கள் அருகாமையில் இருக்கும் நபர்களையும் ஏர்பிளேன் பயணமுறையை இயக்குமாறு கேட்டுக்கொள்ளவும், அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ளவும்.

Best Mobiles in India

English summary
What Happens If You Don't Set Your Phone To Airplane Mode While Flying? Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X