இது பவர் பட்டன் என்று தெரியும் ஆனால், அர்த்தம் என்னவென்று தெரியுமா..?
இந்த பவர் பட்டன் குறியீட்டை நீங்கள் எங்கும் காணலாம், அவ்வளவு ஏன் இந்த நூற்றாண்டின் மிகப்பிரபலமான குறியீடு என்று கூட இதை குறிப்பிடலாம். அப்படியாக உங்கள் மொபைல், டிவி, லேப்டாப், மின் அடுப்பு, துணி துவைக்கும் இயந்திரம் மற்றும் வேறு எந்தவிதமான மின்சார அல்லது மின்னணு பயன்பாட்டிற்கான கருவிகளாய் இருந்தாலும் சரி இந்த குறியீடு கொண்ட பட்டன் தான் ஆற்றல் கட்டுப்பாடு பட்டனாய் திகழும்..!
அதெல்லாம் சரி, இந்த குறியீட்டிற்க்கும், அதன் வடிவமைப்பிற்கும் ஏதேனும் உள் அர்த்தம் இருக்கிறதா என்று கேட்டால், அதற்கு பதில் - ஆம் இருக்கிறது..!

#1
சரி, கடைசியாக ஒருமுறை நீங்கள் வழக்கம் போல் பார்க்கும் கோணத்தில் இந்த பவர் பட்டனை பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அதன் அர்த்தம் தெரிந்த பின்பு பவர் பட்டன் பழையபடி உங்கள் கண்களுக்கு தெரியாது.

#2
சரி இப்போது கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் பார்க்கும் பவர் பட்டனில் 'ஐ' (I) மற்றும் 'ஓ' (O) என்ற எழுத்துக்கள் தெரிகிறதா ?

#3
அந்த குறியீட்டின் உடைந்த வட்டமும் அதன் உள்ளே உள்ள வரியும் அதை 1 மற்றும் 0 என்பது போல் காட்டுவதை உங்களால் பார்க்க முடிகிறதா ?

#4
சரி, பவர் பட்டனின் அர்த்தத்தை புரிந்துகொள்ள நாம் இப்போது இரண்டாம் உலக யுத்த காலத்திற்கு செல்ல வேண்டும் வாருங்கள்..!

#5
இரண்டாம் உலகப்போர் பொறியாளர்கள் பயன்படுத்திய பவர் பட்டன்களில் இரும முறைமையை (Binary System) பயன்படுத்தின, அங்கிருந்து ஆரம்பித்தது தான் இந்த குறியீடு..!

#6
இரும முறைமையில் 1 என்றால் "ஆன்" (ON) உடன் 0 என்றால் "ஆஃப்" (OFF) என்று அர்த்தம்..!

#7
இறுதியாக, 1973-ல் இந்த குறியீடு ஒரு ஆற்றல் பட்டன் சின்னமாக சர்வதேச மின்னணு தொழில்நுட்ப ஆணையம் (International Electrotechnical Commission) மூலம் தரநிலைப்படுத்தப்பட்டது.

#8
நீங்கள் இதே மாதிரியான அர்த்தம் கொண்ட ஆற்றல் பட்டனை வெவ்வேறு வடிவமைப்பில் கூட காணலாம்..!

#9
இதே போல உங்கள் கீபோர்ட்டில் 'எஃப்' மாற்றம் 'ஜே' கீகளில் இருக்கும் சிறு கோடின் காரணம் பற்றி தெரிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்..!

#10
அடடா.. இத்தனை வருஷமா 'இது' தெரியாம போச்சே...!!?
இதை ஹோட்டல் அறையிலோ, குளியலறையிலோ கண்டால் உஷார்..!

#11
மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications