புதிய கருவிகளின் வரவால் பழைய ஐபோன் மாடல்களுக்கு அதிரடி விலைக்குறைப்பு.!
ஐபோன் 6எஸ் பொறுத்தவரை 4.7-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் 3டி டச் அம்சத்திற்கான ஆதரவு இவற்றில் உள்ளது.
ஐபோன் எக்ஸ் ஆனது நவம்பர் 3-ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இதன்விலை மதிப்பு சற்று உயர்வாக உள்ளது, மேலும் இந்த ஐபோன் எக்ஸ் வருகையால் மற்ற ஐபோன்களின் விலைகள் குறையும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்தியாவில் ஐபோன் பயன்பாடு மிகக் குறைவாக தான் உள்ளது, மேலும் இப்போது பழைய ஐபோன்கள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டால் அதிக மக்கள் இந்த ஐபோனை வாங்கி பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் எஸ்இ:
ஐபோன் எஸ்இ பொறுத்தவரை 4-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் ஏ9 செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஐபோன் மாடல். அதன்பின் ஐபோன் எஸ்இ-ன் 32ஜிபி மற்றும் 128ஜிபி மாறுபாடு முறையே ரூ.22368/-மற்றும் ரூ.28777/-என்ற விலையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 6எஸ்:
ஐபோன் 6எஸ் பொறுத்தவரை 4.7-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் 3டி டச் அம்சத்திற்கான ஆதரவு இவற்றில் உள்ளது. ஐபோன் 6எஸ்-ன் 32ஜிபி மற்றும் 128ஜிபி மாறுபாடு முறையே ரூ.40000/- மற்றும் ரூ.49000/- என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 6எஸ் பிளஸ்:
ஐபோன் 6எஸ் பிளஸ் பொதுவாக 5.5-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் வேகமான செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதன்பின் பழைய ஐபோன் 6 உடன் ஒப்பிடும்போது பல வேறுபாடுகள் உள்ளன. ஐபோன் 6எஸ் பிளஸ்-ன் 32ஜிபி மற்றும் 128ஜிபி மாறுபாடு முறையே ரூ.49000/- மற்றும் ரூ.58000/- என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 7:
ஐபோன் 7 கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது,இதன் கேமரா அமைப்பு மிக அருமையாக இருக்கும், மேலும் ஏ10 ஃப்யூஷன் சிப் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பம் இவற்றுள் அடக்கம். ஐபோன் 7-ன் 32ஜிபி மற்றும் 128ஜிபி மாறுபாடு முறையே ரூ.49000/- மற்றும் ரூ.58000/-என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 7பிளஸ்:
ஐபோன் 7பிளஸ் பொறுத்தவரை ஏ10 ஃப்யூஷன் சிப் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இரட்டை கேமரா அமைப்பு இவற்றில் இடம்பெற்றுள்ளது. ஐபோன் 7பிளஸ்-ன் 32ஜிபி மற்றும் 128ஜிபி மாறுபாடு முறையே ரூ.59000/- மற்றும் ரூ.68000/-என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் எக்ஸ்:
ஐபோன் எக்ஸ் ஆனது நவம்பர் 3-ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும். அதாவது உலக சந்தையில் கிடைக்கும் அதே நாளில் இந்தியாவிலும் கிடைக்கும். இதன் இந்திய விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், ஐபோன் எக்ஸ்-ன் 64ஜிபி மற்றும் 256ஜிபி மாறுபாடு முறையே ரூ.89,000/- மற்றும் ரூ.102,000/- என்ற புள்ளிகளை எட்டலாம்.

ஐபோன் 8:
ஐபோன் 8 பொதுவாக டிஸ்பிளே வடிவமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது, மேலும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி போன்ற பல்வேறு வசதிகள்இவற்றுள் இடம்பெற்றுள்ளன. ஐபோன் 8-ன் 64ஜிபி மற்றும் 256ஜிபி மாறுபாடு முறையே ரூ.64000/- மற்றும் ரூ.77000/-என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 8 பிளஸ்:
ஐபோன் 8 பிளஸ்-ன் 64ஜிபி மற்றும் 256ஜிபி மாறுபாடு முறையே ரூ.73000/- மற்றும் ரூ.86000/-என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications