சாம்சங் - இது தான் விஷயமா..? இது தெரியாம போச்சே..!

By Meganathan
|

இந்தியாவில் சாம்சங் கருவிகளை பயன்படுத்தாதவர் இல்லை என்றே கூறமளவு அந்நிறுவன கருவிகளின் விற்பனை இருக்கின்றது. ஆப்பிள் நிறுவனத்திற்கு பலத்த போட்டியாக இருப்பதோடு அவ்வப்போது பல சர்ச்சைகளுக்கும் பெயர் போன சாம்சங் கருவி குறித்த சந்தேகத்திற்கு விடை கிடைத்திருக்கின்றது.

பலரது மனதில் அடிக்கடி வந்து போகும் இந்த சந்தேகம் என்ன, சாம்சங் கேலக்ஸி 'எஸ்' பல வெற்றி மாடல்களுக்கு சாம்சங் வழங்கிய இப்பெயரில் எஸ் என்பதற்கான அர்த்தமும் இவ்வாறு அந்நிறுவனம் வழங்கிய பெரும்பாலான பெயர்களுக்கான அர்த்தங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

எஸ்

எஸ்

ஆங்கில வார்த்தையான எஸ் (S) என்றால் சூப்பர் ஸ்மார்ட் (SuperSmart)என்று பொருள்படும் என அந்நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் சுமார் 1 கோடி யூனிட்கள் உலகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது

ஆர்

ஆர்

ஆர் (R) என்றால் ராயல்(Royal) அல்லது ரிஃபைன்டு(Refined) என்ற அர்த்தமாகும். இதன் மூலம் இயங்கும் திறன், தயாரிப்பு மற்றும் சக்தி என அனைத்தும் சம விகித்தத்தில் வழங்கப்படுவதாகும்.

டபுள்யூ

டபுள்யூ

டபுள்யூ (W) என்றால் வண்டர்(Wonder) என்று அர்த்தமாகும், இதன் படி கருவிகள் அதிக தரம் மற்றும் அழகாக காட்சியளிக்கும் கருவிகளை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்

எம்

மேஜிக்கல்(Magical) என்ற வார்த்தையை நினைவூட்டும் எம் (M), என்பது குறைந்த விலை மற்றும் அதிக தரம் வழங்குவது என்று கூறப்படுகின்றது.

வை

வை

வை (Y) என்றால் யங் (Young) என்று பொருள்படும், பொதுவாக இவை இளைஞர்களுக்காக தயாரிக்கப்படும் மாடல்களாக இருப்பதோடு சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப மற்ற நிறுவனங்களுக்கு போட்டியை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்.

அர்த்தம்

அர்த்தம்

இதுவரை கேள்விக்குறியாக இருந்த சில கேள்விகளுக்கு இங்கு பதில் கிடைத்திருக்கும் என நம்புகிறோம். எனினும் இவற்றில் பல மாடல்கள் இன்று புழக்கத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அறிவிப்பு

அறிவிப்பு

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் விளக்கங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சாம்சங் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகும்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Check out here What to do “S” mean In Galaxy S Smartphones. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X