Nothing லேப்டாப் அறிமும் செய்யப்படுமா? அடுத்த Nothing வரிசையில் என்ன எதிர்பார்களாம்?

|

Nothing என்றால் ஒன்றுமில்லை என்று பொருள், ஆனால், இந்த பெயரை வைத்து ஒரு நிறுவனம் உலகளவில் பிரபலம் அடைந்துள்ளது என்றால், அதற்கு காரணம் Carl Pei தான். கடந்த 2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் நிறுவனர் கார்ல் பெய் தற்போது மக்களிடையே மிகவும் விரும்பப்பட்டிருக்கும் ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் என்பதால் ஆரம்பத்தில் இருந்தே மக்களுக்கு நத்திங் மீது ஒரு தனி ஆர்வம் அதிகமாக இருந்து வருகிறது என்றே கூறலாம்.

Nothing அறிமுகம் செய்த சாதனங்களுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?

Nothing அறிமுகம் செய்த சாதனங்களுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?

அதுவும் குறிப்பாக இந்தியர்களுக்கு. இதுவரை இந்நிறுவனம் இரண்டு தயாரிப்புகளை உலக சந்தையில் விற்பனை செய்துள்ளனர். இவர்களின் முதல் படைப்பு வயர்லெஸ் இயர் பட்ஸ். மிகவும் ஸ்டைலாக வடிவமைக்கப்பட்ட இந்த இயர் பட்ஸ் உலக சந்தையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இரண்டாவதாக இவர்கள் ஸ்மார்ட் போன் ஒன்றை அறிமுகம் செய்தனர். இதுவரை அறிமுகம் செய்யப்பட்ட இவர்களின் இரண்டு தயாரிப்புகளும் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது.

Carl Pei இடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்ன தெரியுமா?

Carl Pei இடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்ன தெரியுமா?

இந்நிலையில் சமீபத்தில் நத்திங் நிறுவனர் கார்ல் பெய் தனது ட்விட்டர் பக்கத்தில் மக்கள் தன்னிடம் விருப்பப்படும் கேள்வியை கேட்கலாம் என்றும் அதற்கு தான் பதிலளிக்க விரும்புவதாகவும் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். இதையொட்டி பென் கெஸ்கின் என்பவர் அவரிடம் ஆர்வமாக பல கேள்விகள் கேட்டிருந்தார். அவர் கேட்ட சில கேள்விகளையும் அதற்கு பெய் கூறிய பதில்களையும் பார்க்கலாம்.

Unknown Number விபரங்களை இலவசமாக தெரிந்துகொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!Unknown Number விபரங்களை இலவசமாக தெரிந்துகொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

Nothing லேப்டாப் அறிமுகம் செய்யப்படுமா?

Nothing லேப்டாப் அறிமுகம் செய்யப்படுமா?

முதலில் பென், பெய்யிடம் நத்திங் நிறுவனம் முதலில் இயர் பட்ஸ் தயாரித்தது, அதன் பின் ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்தது அடுத்து லேப்டாப் தயாரிப்பில் இறங்க ஏதும் திட்டம் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு பெய், லேப்டாப் தயாரிப்பில் ஆர்வம் இருப்பதாகவும், அதற்காக திட்டமிடப்பட்டு இருந்ததாகவும் கூறினார். ஆனால், அதை தற்போது செயல்படுத்த வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

நத்திங் நிறுவனத்தின் முதல் நோக்கம் இது மட்டுமே - Carl Pei

நத்திங் நிறுவனத்தின் முதல் நோக்கம் இது மட்டுமே - Carl Pei

நத்திங் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்திருக்கும் 2 தயாரிப்புகளில் முதலில் கவனம் செலுத்த விரும்புவதால் புது வகை தயாரிப்பில் தற்போது இறங்க போவது இல்லை என்று கூறியிருந்தார். முதலில் தற்போது விற்கப்படும் தயாரிப்புகளில் வெற்றிகரமான சாதனைகள் செய்துவிட்டு எதிர்காலத்தில் மற்ற தயாரிப்புகள் பக்கம் கவனம் திருப்பப்படும் என்று கூறினார். அவர் கூறிய பதிலில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது நத்திங் லேப்டாப் எதிர்காலத்தில் வர வாய்ப்புகள் அதிகம் என்பது தான்.

OnePlus டிவியை ரூ.9,000 விலையில் வாங்க வாய்ப்பு.! OnePlus அறிவித்த கோலாகல தள்ளுபடி.!OnePlus டிவியை ரூ.9,000 விலையில் வாங்க வாய்ப்பு.! OnePlus அறிவித்த கோலாகல தள்ளுபடி.!

நத்திங் வயர்லெஸ் இயர் பட்ஸ்

நத்திங் வயர்லெஸ் இயர் பட்ஸ்

இதுவரை, அவர்கள் வெளியிட்ட இரண்டு தயாரிப்புகளும் மலிவு விலையில் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் நல்ல செயல்திறனுக்காக நிறைய பாராட்டுகளைப் பெற்றுள்ளன என்பதால் எதிர்காலத்தில் வரவிருக்கும் லேப்டாப் மீதும் மக்களுக்கு இப்போது இருந்தே ஆர்வம் அதிகமாக ஆரம்பித்துவிட்டது என்று தான் கூறவேண்டும். ஆனால், அதற்கு முன் நத்திங் நிறுவனத்தின் அடுத்த படைப்பாக மற்றொரு வயர்லெஸ் இயர் பட்ஸ் அறிமுகம் படுத்த இருக்கிறது.

நத்திங் TWS வயர்லெஸ் இயர் பட்ஸ் ஸ்டிக் புது வரவா?

நத்திங் TWS வயர்லெஸ் இயர் பட்ஸ் ஸ்டிக் புது வரவா?

இந்த TWS வயர்லெஸ் இயர் பட்ஸ்-ற்கு இயர் (ஸ்டிக்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த இயர் பட்ஸ் ஸ்டிக் வடிவில் வருவதோடு மட்டும் இல்லாமல் இந்த கேஸ் வடிவமைப்பு பெண்கள் பயன்படுத்தும் காஸ்மெட்டிக் போல் ஸ்டிக் வடிவில் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த இயர் பட்ஸ் பற்றிய மற்ற விவபரங்கள் அனைத்தும் கூடிய சீக்கிரம் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. நத்திங் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இயர் பட்ஸ் இயர் (1) ரூ. 7199 விலை விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

WhatsApp இல் யார் உங்களை Block செய்தார்கள் என்று தெரியனுமா? இந்த 5 டிப்ஸை பாருங்க.!WhatsApp இல் யார் உங்களை Block செய்தார்கள் என்று தெரியனுமா? இந்த 5 டிப்ஸை பாருங்க.!

Snapdragon 8 Gen 2 SoC உடன் புது நத்திங் போன் வெளிவருமா?

Snapdragon 8 Gen 2 SoC உடன் புது நத்திங் போன் வெளிவருமா?

மற்றொரு வாடிக்கையாளர் பெய்யிடம் எதிர்காலத்தில் Snapdragon 8 Gen 2 SoC குவால்காம் ஸ்மார்ட் போன் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறதா என்று கேட்டபோது. அதற்கு பெய் அவருடைய கேள்வியே தவறு என்றவாறு பதில் கூறியிருந்தார். அவர் கூறியதாவது: நாங்கள் இங்கே மற்றவரிடம் பொருட்களை வாங்கி அதனை சேர்த்து ஒரு பொருளாக தயாரித்து விற்க தொழிநுட்ப தயாரிப்பிற்கு வரவில்லை.

நத்திங் மற்ற நிறுவனங்கள் போல் செயல்படாது

நத்திங் மற்ற நிறுவனங்கள் போல் செயல்படாது

அதற்காக ஏற்கெனவே பல நிறுவனங்கள் இருப்பதாகவும் அதில் ஒன்றாக இருக்க நத்திங் ஆரம்பிக்கப்படவில்லை என்று விளக்கினார். எங்களுக்கென்று ஒரு தனித்துவம் இருக்க வேண்டும் என்று நினைக்குறோம் என்று கூறினார். அதாவது நத்திங் மற்ற நிறுவனங்கள் செய்வதையே செய்யாமல் அதிலிருந்து வேறுபட்டு மக்களுக்கு மற்ற தயாரிப்புகளின் அனுபவத்தையும் தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

Best Mobiles in India

English summary
What Carl Pei Says About Nothing working on a laptop

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X