கூகுளின் பியூஷன் டேபிள் செயல்படும் விதம் எப்படின்னு தெரியுமா?

பியூஷன் டேபிளில் நமக்கு தேவையான டேட்டாக்களை அப்லோட் செய்து அதன் பின்னர் ஷேர் செய்வது, ஒன்றோடு ஒன்றை இணைப்பது உள்பட பல விஷயங்கள் அடங்கியுள்ளது.

By Siva
|

கூகுள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளித்து வரும் பல்வேறு வசதிகளில் ஒன்று ஃபியூசன் டேபிள் (Fusion Table). இந்த டேபிள் டேட்டாக்களை சேமித்து வைப்பதற்கும், தேவையான போது பார்ப்பதற்கும், தேவைப்பட்டால் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்வதற்கும் உதவுகிறது.

கூகுளின் பியூஷன் டேபிள் செயல்படும் விதம் எப்படின்னு தெரியுமா?

இந்த டேபிளில் நமக்கு தேவையான டேட்டாக்களை அப்லோட் செய்து அதன் பின்னர் ஷேர் செய்வது, ஒன்றோடு ஒன்றை இணைப்பது உள்பட பல விஷயங்கள் அடங்கியுள்ளது.

நமது கம்ப்யூட்டரில் எக்ஸெல் ஷீட் மூலம் நாம் பல டேட்டாக்களை டேபிள் வடிவில் அமைத்து கொள்வோம். இந்த டேபிளை உங்கள் நண்பரின் மூலம் எடிட் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் அந்த டேபிளை நண்பருக்கு இமெயில் செய்ய வேண்டும். அதன் பின்னர் அந்த நண்பர் எடிட் செய்து உங்களுக்கு திருப்பி அனுப்புவார்.

டேட்டாக்களை பிரித்து பார்ப்பது எப்படி?

டேட்டாக்களை பிரித்து பார்ப்பது எப்படி?

இந்த வேலையை சுலபமாக்குவதுதான் ஃபியூஷன் டேபிளின் மகிமை. இந்த ஃபியூஷன் டேபிளில் உள்ள டேட்டாவை நேரடியாக உங்கள் நண்பர் காணும்படி செய்யலாம். உங்கள் டேபிள் கூகுள் டிரைவில் இருந்தால் அதில் உள்ள Add a Chart என்பதில் மூலம் நாம் பார்க்கலாம்.

இதன் மூலம் லைன், பார், சார்ட் மற்றும் பிரிவுகளாக மாற்றி பார்க்கும் வசதி உண்டு. இந்த டேபிளை பார்க்க கோட் அல்லது எம்பெடட் வடிவில் மாற்றும் வசதியும் உண்டு.

புவியியல் டேட்டாக்களை மேப் மூலம் பார்க்கும் வசதி:

புவியியல் டேட்டாக்களை மேப் மூலம் பார்க்கும் வசதி:

உங்கள் டேட்டாக்கள் புவியியல் தகவல்களாக இருந்தால் இந்த பியூஷன் டேபிள் மேப் மூலம் உங்களது தகவல்களை இடத்துடன் சேர்ந்து காண்பிக்கும். அதுமட்டுமின்றி மேப்பின் கோட்களை நீங்கள் அனுப்பி, சேவ் செய்து கூகுள் எர்த் மூலமும் பார்க்கலாம்

வாட்டர் ஏடிஎம் : இதற்கு நாம் பெருமைப்படக்கூடாது, வெட்கப்பட வேண்டும்.!வாட்டர் ஏடிஎம் : இதற்கு நாம் பெருமைப்படக்கூடாது, வெட்கப்பட வேண்டும்.!

கூகுள் டிரைவில் இருந்து பியூஷன் டேபிளை இணைப்பது எப்படி?

கூகுள் டிரைவில் இருந்து பியூஷன் டேபிளை இணைப்பது எப்படி?

1. முதலில் இணையதள பக்கத்தில் உள்ள இடது மேல்புறத்தில் உள்ள சிகப்பு நிற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்

2. பின்னர் 'கனெக்ட் மோர் ஆப்ஸ்' என்பதை க்ளிக செய்ய வேண்டும்

3. பின்னர் அதில் உள்ள சியர்ச் பாக்ஸில் 'பியூஷன் டேபிளை' தேர்வு செய்ய வேண்டும்

4. பின்னர் அதில் உள்ள கனெக்ட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்

Best Mobiles in India

Read more about:
English summary
Google offers many web based services and one among them is the Fusion Tables for Data management. Check out more information about it here.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X