விண்ணில் இருந்து விழுந்த மர்மமான ஸ்பேஸ் பால்ஸ், பின்னணி என்ன..!?

Written By:

எவ்வளவு புரிந்துகொள்ள முயற்சித்தாலும், சில விடயங்களை புரிந்து கொள்ளவே முடியாது. அப்படியான சிக்கலான விடயங்களைத்தான் - மர்மங்கள், புதிர்கள், விசித்திரங்கள் என்பதற்குள் அடங்கும். அம்மாதிரியான பட்டியலில் முதலில் இருப்பது நாம் வாழும் இந்த அண்டம் தான் அதாவது விண்வெளி..!

அப்படியான மேலும் ஒரு விண்வெளி மர்மம் தான் சமீபத்தில் விண்ணில் இருந்து விழுந்ததாக கருதப்படும் மர்மமான வியட்நாமீஸ் ஸ்பேஸ் பால்ஸ் (Vietnamese 'space balls). மேலும் அது சார்ந்த தகவல்களை கீழ்வரும் ஸ்லைடார்களில் தொகுத்துள்ளோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மூன்று உலோக பொருட்கள் :

மூன்று உலோக பொருட்கள் :

சீன நாட்டின் வடக்கு எல்லை அருகில் உள்ள வியட்நாம் பகுதியில், விண்வெளியில் இருந்து மூன்று உலோக பொருட்கள் விழுந்ததாக கருதப்படுகிறது.

ஸ்பேஸ் பால்ஸ் :

ஸ்பேஸ் பால்ஸ் :

வியட்நாமீஸ் ஸ்பேஸ் பால்ஸ் (Vietnamese 'space balls) என்று அழைக்கப்படும் இந்த மர்மமான பந்துகள் விண்ணில் இருந்து தான் விழுந்து இருக்கின்றன என்று வியட்நாம் இராணுவ நிபுணர்ககளும் சந்தேகிகின்றனர்.

எடை :

எடை :

விண்ணில் இருந்து விழுந்ததாக கருதப்படும் வியட்நாமீஸ் ஸ்பேஸ் பந்து, அதிகபட்சம் சுமார் 45 கிலோ எடை கொண்டதாய் உள்ளன.

யேன் பாய் பகுதி :

யேன் பாய் பகுதி :

மேலும் யேன் பாய் (Yen Bai) பகுதியில் ஆராய்ந்த போது 6 கிலோ, 250 கிராம் என பல வகையான எடைகளில் ஸ்பேஸ் பால்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

ரஷ்ய வம்சாவளி :

ரஷ்ய வம்சாவளி :

அந்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இந்த பந்துகள் ரஷ்ய வம்சாவளியை சேர்ந்த உலோக சிலிண்டர்கள் என்றும், இருப்பினும் அவைகள் ஏனைய நட்பு நாடுகளுக்கு விற்கப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.

செயற்கைகோள் :

செயற்கைகோள் :

ஒருவேளை இவைகள் தோல்வியில் முடிந்த செயற்கைகோளின் பாகங்களாய் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

எரிப்பொருள் சேமிப்பு :

எரிப்பொருள் சேமிப்பு :

குறிப்பாக இவைகள் செயற்கைகோளின் எரிப்பொருள் சேமிப்பு கிடங்கின் பகுதிகளாய் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

வீட்டின் கூரை :

வீட்டின் கூரை :

விண்ணில் இருந்து விழுந்த இந்த பந்துகளில் ஒன்று வீட்டின் கூரை ஒன்றிலும், மற்றொன்று தோட்டப்பகுதியிலும் விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இடி :

இடி :

இந்த மர்ம பந்துகள் விழுந்த போது இடி விழுந்தது போல் சத்தம் கேட்டது என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெடிப்பு :

வெடிப்பு :

மேலும் அதிராகமற்ற தகவலின்படி விண்ணில் இருந்து விழுந்த எந்தவொரு பந்தும் வெடிப்பு நிகழ்த்தவில்லை என்று தெரிகிறது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
What are these mysterious Vietnamese space balls..? Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot