Home
News

ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக போஸ்ட்பெய்ட் திட்டத்தில் சிறந்த சலுகைகளை வழங்குகிறதா பிஎஸ்என்எல்?

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான சலுகைகளை வழங்கி வருகிறது. ஆனாலும் இந்நிறுவனம் 4ஜி சேவையை அனைத்து இடங்களிலும் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும். பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த மாதம் அதன் போஸ்ட்பெய்ட பிரிவின் கீழ் ரூ.199, ரூ.798 மற்றும் ரூ.999 போன்ற திட்டங்களை கொண்டுவந்தது. ஆனாலும் ஜியோ நிறுவனம் ஏற்கனவே ரூ.399 மற்றும் ரூ.525 போஸ்ட்பெய்ட் திட்டங்களையும் திருத்தியுள்ளது.

ஜியோ ரூ.399 மற்றும் ரூ.599 போஸ்ட்பெய்ட் பிளஸ்

அதன்படி ஜியோ நிறுவனத்தின் ஜியோ ரூ.399 மற்றும் ரூ.599 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்களுடன் ஒப்பிடும்போது பிஎஸ்என்எல் ரூ.399 மற்றும் ரூ.525 போஸ்ட்பெய்ட் திட்டங்கள் சிறந்த சலுகைகளை வழங்குகிறதா? என்பதை நாம் இப்போது விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் கர் வாப்சி பிளான் என்று அழைக்கப்படும் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டம் ஆனது 70ஜிபி டேட்டா நன்மையையும், 210ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் வசதியையும் வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளும் கிடைக்கும். ஆனால் இந்த இந்த திட்டம் பேமிலி ஆட் ஆன் இணைப்புகளுடன் வரவில்லை. இதில் கவனிக்கவேண்டியது என்வென்றால், ஜியோவின் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டமும் கிட்டத்தட்ட சமமான நன்மைகளை வழங்குகிறது.

ஜியோ ரூ.399  போஸ்ட்பெய்ட் திட்டம்

ஜியோ ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டம்

அதாவது ஜியோ ரூ.399 திட்டமானது 200ஜிபி வரையிலான ரோல்ஓவர் வசதியை வழங்குகிறது. பின்பு ஜியோவின் ரூ.399 திட்டத்தில் ரூ.199 மதிப்புள்ள நெட்பிளிக்ஸ் மொபைல் திட்டம், ரூ.999 மதிப்புள்ள அமேசான் ப்ரைம் சந்தா மற்றும் ரூ.399 மதிப்புள்ள டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா போன்ற நன்மைகளும் வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ ரூ.399 திட்டத்தில் 75 ஜிபி டேட்டா நன்மை, வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் கிடைக்கும்.

குறிப்பாக ஜியோ நிறுவனம் தான் பந்தயத்தில் வெற்றி பெறுகிறது என்று கூறவேண்டும். ஏனெனில் ஜியோ அதன் அனைதது போஸ்ட்பெய்ட் திட்டங்களுடனும் இலவச ஓடிடி சந்தாக்களை வழங்கி வருகிறது. பிஎஸ்என்எல் அத்தகைய நன்மைகள் எதையும் வழங்கவில்லை.

பிஎஸ்என்எல் ரூ.525 போஸ்ட்பெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.525 போஸ்ட்பெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மற்றொரு திட்டமான ரூ.525 போஸ்ட்பெய்ட் ஆனது 255 ஜிபி வரை ரோல்ஓவர் வசதியுடன் மாதத்திற்கு 85 ஜிபி அளவிலான டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் பிஎஸ்என்எல் ரூ.525 திட்டம் வரம்பற்ற குரல் அழைப்போடு ஒரு இலவச ஆட் ஆன்-ஐயும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.599 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டம்

ஜியோ ரூ.599 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.525 போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் போட்டியிடும் ஜியோவின் ரூ.599 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டம் ஒரு நாளைக்கு 100 ஜிபி டேட்டாவுடன் அனுப்பப்படுகிறது, இது 200 ஜிபி ரோல்ஓவர் வசதி உடன் மற்ற நன்மைகளுக்காக ஜியோ ரூ.399 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்துடன் இணையாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் VS ஜியோ

பிஎஸ்என்எல் VS ஜியோ

பிஎஸ்என்எல் நிறுவனம் ஜியோ போஸ்ட்பெய்ட பிளஸ் திட்டங்களை போன்ற நன்மைகளை வழங்கினாலும் கூட், இலவச ஓடிடி சந்தாக்கள் என்றும் வரும்போது ஜியோ நிறுவனம் மிகப்பெரிய அளவில் முன்னிலை வகிக்கிறது. பின்பு சிறந்த சலுகைளிலும் ஜியோ நிறுவனம் தான் முன்னிலை வகிக்கிறது.

Best Mobiles in India

English summary
What are the offers available on BSNL Rs.399 postpaid plan: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X