Home
News

கூகுள் பே முதல் வாட்ஸ்அப் வரை.. UPI பரிவர்த்தனையில் வந்த முக்கிய மாற்றங்கள்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

இந்தியா முழுவதும் யுபிஐ (UPI) சேவையை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ செயலிகள் மூலம் சில நொடிகளில் பணம் அனுப்பவும், பெறவும் முடிகிறது. எனவே தான் இந்த செயலிகளை தற்போது அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இந்த 2025-ல் யுபிஐ சேவையில் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளது. அது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

1.கூகுள் பே (Google Pay): சமீபத்தில் இந்தியாவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் கூகுள் பே செயலியில் ஒரு முக்கியமான மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதாவது கூகுள் பே செயலியில் இனி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வழியிலான பில் பேமெண்ட்டுகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பே முதல் வாட்ஸ்அப் வரை.. UPI பரிவர்த்தனையில் முக்கிய மாற்றங்கள்

குறிப்பாக கூகுள் பே செயலியில் நீங்கள் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குச் செய்யும் பணப்பரிவர்த்தனை அல்லது கடைக்காரருக்கு நீங்கள் செய்யும் வழக்கமான யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. இதுபோன்ற பணப்பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.ஆனால் கூகுள் பே செயலியில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பில் பேமண்ட்களை செய்தால் அப்போது கட்டணம் வசூலிக்கப்படும் .

அதன்படி டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திச் செய்யப்படும் பில் பேமெண்ட்களுக்கு, அதன் இறுதி தொகையில் இருந்து 1 சதவீதம் மூதல் 5 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணமாக நீங்கள் செலுத்த வேண்டிய சிலிண்டர் கட்டணம் ரூ.1000 ஆக இருந்தால், அதில் 1 சதவீதம் அதாவது ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படும்.

2.யுபிஐ மூலம் PF பணத்தை எடுக்கும் புதிய வசதி: EPF உறுப்பினர்கள் தங்கள் உரிமைக்கோரல் தொகையை இனி யுபிஐ (UPI) மூலம் பெறுவதற்கான முயற்சியில் EPFO அமைப்பு ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பிளானை EPFO அமைப்பு தயாரித்துள்ளது. மேலும் யுபிஐ தளங்களில் இந்த வசதியை அறிமுகப்படுத்த நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

எனவே ஏப்ரல் பிற்பகுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் யுபிஐ மூலம் PF பணத்தை எடுக்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. பொதுவாக பிஎப் பணத்தை எடுக்க சில நாட்கள் ஆகும். ஆனால் இந்த யுபிஐ ஒருங்கிணைப்பின் மூலம் விரைவாக பரிவர்த்தனையை முடிக்க முடியும்.

3.சிறப்பு எழுத்துக்களால் ஆன UPI ID: அதேபோல் இந்த மாதம் துவக்கத்தில் யுபிஐ விதிகளில் ஒரு முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதாவது பிப்ரவரி 1, 2025 முதல் சிறப்பு எழுத்துக்களால் ஆன UPI ID-களைக் கொண்ட பரிவர்த்தனைகள் இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, உங்கள் UPI ID தகவலில் @,#, $, *, ! போன்ற சிறப்பு எழுத்துக்கள் (special characters) இருந்தால் அவற்றை உடனே மாற்ற வேண்டும்.

குறிப்பாக NPCI வெளியிட்ட தகவலின்படி, பிப்ரவரி 1 முதல், பரிவர்த்தனை ஐடியில் எண்ணெழுத்து எழுத்துக்கள் (எழுத்துக்கள் மற்றும் எண்கள்) மட்டுமே பயன்படுத்தப்படும். அதாவது உங்கள் பெயருக்கு இடையில் எழுத்துக்களுடன் நம்பர்களை சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், இனி ஸ்பெஷல் கேரக்டர்ஸ் என்றழைக்கப்படும் சிறப்பு எழுத்துக்கள் இருக்கவே கூடாது என்ற புது விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.

கூகுள் பே முதல் வாட்ஸ்அப் வரை.. UPI பரிவர்த்தனையில் முக்கிய மாற்றங்கள்

4.வாட்ஸ்அப் யுபிஐ லைட் பேமெண்ட் ஆப்ஷன் (WhatsApp UPI Lite payment option): வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் இந்தியாவில் இந்தியாவில் யுபிஐ லைட் பேமெண்ட் ஆப்ஷனை (WhatsApp UPI Lite payment option)அறிமுகப்படுத்தும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வாட்ஸ்அப் v2.25.5.17 பீட்டாவீல் UPI Lite ஆப்ஷன் காணப்பட்டது. எனவே வாட்ஸ்அப் பயனர்களுக்கு யுபிஐ லைட் ஆப்ஷன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்.

யுபிஐ லைட் என்பது UPI-இன் எளிய பதிப்பாகும். அதுவும் இது நெட்ஒர்க் வசதி இல்லாத பகுதிகளில் உள்ள மக்களை குறிவைத்து கொண்டுவரப்பட்டது. சிறிய அளவிலான தொகையை அனுப்புவதற்காக இந்த யுபிஐ லைட் பயன்படுகிறது. அதேபோல் இணைய இணைப்பு குறைவாக உள்ள பகுதிகளிலும் யுபிஐ லைட் மூலம் மக்கள் பணம் அனுப்புகின்றனர். எனவே வாட்ஸ்அப்-ல் யுபிஐ லைட் ஆப்ஷன் வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
What are the major changes in UPI transactions in 2025: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X