5ஜி நெட்வொர்க்: நன்மைகள் மற்றும் தீமைகள் என்னென்ன?

|

நாடு முழுவதும் அதிகமாக எதிர்பார்க்கப்படுவது 5ஜி தொழில்நுட்பம் தான். அதாவது ஜந்தாம் தலைமுறைக்காக அலைபேசியை அடிப்படையாக கொண்ட இணையதள தொழில்நுட்பமே 5ஜி எனப்படும். இது 4ஜி என்னும் நான்காம் தலைமுறைக்கான தொழில்நுட்பத்தை விட பன்மடங்கு வேகமாக பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகத்தை கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.

இப்போது உள்ள 4ஜி

ஆனால் உலகம் முழுவதும் இப்போது உள்ள 4ஜி தொழில்நுட்பத்திற்கென குறிப்பிட்ட அலைவரிசையும், தரமும், சராசரி வேகமும் நிர்ணயிக்கப் பட்டிருந்தாலும், ஒவ்வொரு நாடுகளுக்கிடையேயும் இணையதள வேகத்தில் பெரும் வேறுபாடுகள் இருக்கிறது என்றே

கூறலாம்.

புதிய 5ஜி தொழில்நுட்பத்தினால்

மேலும் இந்த 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தப் பல முன்னை நிறுவனங்கள் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த புதிய 5ஜி தொழில்நுட்பத்தினால் என்னென்ன நன்மைகள் என்று பலருக்கும் தெரியும், உங்களின் மொபைல் நெட்வொர்க் வேகமாக இருக்கும், வீடியோகளை உடனுக்குடன் டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ள முடியும் என்பதே நாம் பார்க்கும் சில நல்ல விஷயங்கள்.

ஆப்பிளை கலாய்த்த ஒன்பிளஸ்.. ஒன்பிளஸை செமையாக பங்கம் செய்த சியோமி.. என்ன நடந்தது தெரியுமா?ஆப்பிளை கலாய்த்த ஒன்பிளஸ்.. ஒன்பிளஸை செமையாக பங்கம் செய்த சியோமி.. என்ன நடந்தது தெரியுமா?

மற்றனைத்து துறைகளிலும்

ஆனால் 5ஜி தொழில்நுட்பம் முன்னெப்போதும் இல்லாத வகையிலான மாற்றங்களை திறன்பேசி பயன்பாடு மட்டுமின்றி மற்றனைத்து துறைகளிலும் ஏற்படுத்தும் என்று தொழில்நுட்பவியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பரிமாறிக்கொண்டு விபத்துகள்

உதாரணமாக கூறவேண்டும் என்றால், 5ஜி தொழில்நுட்பத்தை வாகனத்தில் புகுத்துவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சாலையில்

சென்றுக்கொண்டிருக்கும் அனைத்து வாகனங்களும் ஒன்றோடொன்று தகவல்களை பரிமாறிக்கொண்டு விபத்துகள் ஏற்படுத்துவதையும், எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க முடியும்.

ஆஃப் திங்ஸ் எனப்படும்

அதேபோல் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் எனப்படும் பொருள்களுக்கான இணையம், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றறிதல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நகரங்களின் பாதுகாப்பு, எரிசக்தி, சேமிப்பு, சுற்றுச்சூழல் மேலாண்மை பேரிடர் மேலாண்மை, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் துல்லியத்தை புகுத்த முடியும்.

ரியாலிட்டி, ஆகுமெண்டட்

குறிப்பாக விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டட் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களை மையமாக கொண்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த நேரலை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், செயலிகளின் பயன்பாட்டை எளிதாக்கும்.

தென்கொரியா உள்ளிட்ட சில

தற்சமயம் சீனா, தென்கொரியா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே இந்த 5ஜி தொழில்நுட்பம் உள்ளன. இருப்பினும் பல நாடுகளும் இந்த தொழில்நுட்பத்தை 2021-22 க்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளன. அதேபோல் இந்த 5ஜி தொழில்நுட்பம் கண்டிப்பாக இந்தியாவுக்கும் பெரும் பயனுள்ளதாக அமையும். தற்போது இருக்கும் நுட்பியலில் கேபிள் (கம்பி வடம்) வைத்து நெருசலான இடங்களில் குழி தோண்டி சேவை வழங்குவதைவிட, 5ஜி தொழில்நுட்பம் மூலம் வசதியாகவும் துரிதமாகவும் இணைப்புகளை வழங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியைச் சுற்றி பூமியின் சுற்றுப்பாதையில் சுமா

ஆனாலும் இந்த 5ஜி தொழில்நுட்பம் வெற்றிகரமாகக் களமிறக்க, பூமியைச் சுற்றி பூமியின் சுற்றுப்பாதையில் அதிக சாட்டிலைட்கள் அமைக்கப்பட வேண்டும். இப்படி செய்வதால் பூமியின் இயல்பு நிலையையும் மாற்றுகிறது. உண்மையில் சொல்லப்போனால் மைக்ரோவேவ் சிக்னல்கலால் பூமி சூடடைந்து, பெருமளவிலான வானிலை மாற்றத்தைச் உருவாக்க போகிறது. அதுமட்டுமின்றி அதிகளவிலான இயற்கை சீற்றத்தை பூமி சந்திக்க நேரிடும்.

கொடூரமான ஆபத்து, மைக்ரோவே

அதைவிடக் கொடூரமான ஆபத்து, மைக்ரோவேவ் சிக்னல்கள் பூமியில் உள்ள மக்கள் இனத்திற்கும், பூமியில் வாழும் ஜீவராசிகளுக்கும் கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக மனிதர்கள், பறவைகள், மிருகங்கள் மற்றும் தாவிரங்கள் என்று அனைத்திற்கும் பெரும் சிக்கலை கொண்டுவரும் என்றுதான் கூறவேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
What are the advantages and disadvantages of 5G: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X