பசுமை பட்டாசு என்றால் என்ன? இந்த தீபாவளிக்காவது பசுமை பட்டாசு கிடைக்குமா? தெரிஞ்சு பத்தவைங்க..

|

தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது, இந்த தீபாவளிக்குப் பட்டாசுகளை வெடிக்கலாமா? அல்லது வெடிக்கக் கூடாதா? எவ்வளவு மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்படும்? என்பது போன்ற பல விதமான கேள்விகளுக்கு நடுவில் மக்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர். நீண்ட நாட்களாக இருந்து வந்த குழப்பம் ஒரு வழியாக இப்போது நிறைவை எட்டியுள்ளது. காரணம், உச்ச நீதிமன்றம் இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனையைத் தடை செய்யமுடியாது என்று அண்மையில் தீர்ப்பு வழங்கி சில நிபந்தனைகளுடன் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீபாவளிக்கு எப்போது பட்டாசு வெடிக்கலாம்? எந்த வகை பட்டாசை வெடிக்கலாம்?

இந்த தீபாவளிக்கு எப்போது பட்டாசு வெடிக்கலாம்? எந்த வகை பட்டாசை வெடிக்கலாம்?

உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவலின் படி, மக்களின் தீபாவளியின் போது இரவு 8 மணி முதல் துவங்கி 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக அதிகப்படியான சத்தம் மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறைவான மாசு உடைய, மேம்படுத்தப்பட்ட நவீன வகை பசுமை பட்டாசுகளை மட்டுமே இனிமேல் பட்டாசு உற்பத்தியாளர்கள் தயாரிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தடையை மீறினால் காவல்துறை அதிகாரிகள் மீதே நடவடிக்கையா?

தடையை மீறினால் காவல்துறை அதிகாரிகள் மீதே நடவடிக்கையா?

அதேபோல், தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அந்தந்த பகுதியின் காவல் நிலைய அதிகாரியின் பொறுப்பு என்றும், இந்த உத்தரவைச் சரியாகப் பின்பற்றாத அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பண்டிகையின் போது மக்கள் பட்டாசு வெடிக்கலாம் என்பதை உறுதிப்படுத்திவிட்டது. அதேபோல், எவ்வளவு மணி நேரம் பட்டாசு வெடிக்க மக்கள் அனுமதிக்கப்படுவர் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.

ஆப்பிள் இலவசமாக வழங்கும் ரூ.3000.. இந்திய ஆப்பிள் பயனர்களுக்கு மட்டுமே இந்த சலுகை..ஆப்பிள் இலவசமாக வழங்கும் ரூ.3000.. இந்திய ஆப்பிள் பயனர்களுக்கு மட்டுமே இந்த சலுகை..

பசுமை பட்டாசு என்றால் என்ன? அது எங்கு வாங்கக் கிடைக்கும்?

பசுமை பட்டாசு என்றால் என்ன? அது எங்கு வாங்கக் கிடைக்கும்?

ஆனால், இப்போது மக்களுக்குப் பசுமை பட்டாசு என்றால் என்ன? அது எங்கு வாங்கக் கிடைக்கும்? அதை எப்படி வாங்குவது என்பது போன்ற பல புதிய சந்தேகத்திற்குரிய கேள்விகள் எழுந்துள்ளது. சந்தையில் தற்போது கிடைக்கும் வழக்கமான பட்டாசுகளுக்கும், பசுமை பட்டாசுகளுக்கும் என்ன வித்தியாசம் என்பதைப் பற்றித் தெளிவாகப் பார்க்கலாம். 'பசுமை பட்டாசு' என்பது தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமான 'நீரி'யின் (NEERI) கண்டுபிடிப்பு என்று கூறப்பட்டுள்ளது.

பசுமை பட்டாசுகளுக்கும், வழக்கமான பட்டாசுகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன?

பசுமை பட்டாசுகளுக்கும், வழக்கமான பட்டாசுகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன?

NEERI என்பது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் என்று அழைக்கப்படும் CSIR கீழ் வரும் ஒரு அரசு நிறுவனமாகும். பசுமை பட்டாசுகளுக்கும், வழக்கமான பட்டாசுகளைப் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத் தான் காட்சியளிக்கின்றன. இருப்பினும், பசுமை பட்டாசுகள் வெடிக்கும் போது குறைவான ஒலியுடன் குறைந்த மாசுடன் வெடிக்கிறது என்பதே இவ்விரண்டு பட்டாசுகளுக்கும் இடையில் உள்ள ஒரு முக்கிய வேறுபாடாகும். பசுமை பட்டாசுகளும், சாதாரண பட்டாசுகளைப் போலவே இருக்கும் என்பதால் இதை மக்கள் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படலாம்.

வரிசையில் நின்னு பில் கட்டியதுலாம் அப்போ- எலெக்ட்ரிக் பில் எளிதாக ஆன்லைனில் கட்டுவது எப்படி?வரிசையில் நின்னு பில் கட்டியதுலாம் அப்போ- எலெக்ட்ரிக் பில் எளிதாக ஆன்லைனில் கட்டுவது எப்படி?

பசுமை பட்டாசு எப்படி இயற்கைக்கு பாதுகாப்பானது?

பசுமை பட்டாசு எப்படி இயற்கைக்கு பாதுகாப்பானது?

பசுமை பட்டாசில் இயற்கைக்குத் தீங்கு விளைவிக்கும் நஞ்சு பொருட்கள் மற்றும் மாசு ஏற்படுத்தும் வாயுவை உருவாக்கும் பொருட்களின் சதவீதம் சுமார் 40% முதல் 50% குறைவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரண பட்டாசுகள் இயற்கைக்குத் தீங்கான பல நஞ்சுகளைக் காற்றில் மாசுவாக பரப்புகிறது. ஆனால், பசுமை பட்டாசுகள், 50% வரை குறைவான மாசை வெளியிடுவதன் காரணமாக, பசுமை பட்டாசுகளைப் பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இது முற்றிலும் பாதுகாப்பானது என்று நாம் கூறிவிட முடியாது, இருப்பினும் இதன் தாக்கம் குறைவாகவே இருக்கிறது.

4 வகை பசுமை பட்டாசுகள்.. நீராக மாறும் பட்டாசுகள்..

4 வகை பசுமை பட்டாசுகள்.. நீராக மாறும் பட்டாசுகள்..

NEERI உருவாக்கியுள்ள பசுமை பட்டாசுகளை நிறுவனம் 4 வெவேறு வகைகளாகப் பிரித்துள்ளது. இதில் ஒரு வகை பசுமை பட்டாசு வெடித்தவுடன் நீராக மாறிவிடும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. எது பட்டாசு வெடித்தால் நீராக மாறுமா? இது என்னப்பா புது கதையா இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இது தான் உண்மை, NEERI மேற்கொண்ட பலகட்ட ஆராய்ச்சியின் முடிவாக இந்த வாட்டர் ரிலீசர் பட்டாசுகளை நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது வெடிக்கும் போது, கரியாக மாறுவதற்குப் பதிலாக நீராக மாறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் சிறப்பு விற்பனை: சாம்சங் சாதனங்களுக்கு அசத்தலான சலுகை.!அமேசான் சிறப்பு விற்பனை: சாம்சங் சாதனங்களுக்கு அசத்தலான சலுகை.!

 'வாட்டர் ரிலீசர்' பட்டாசு என்றால் என்ன? வெடித்தால் இது நீராக மாறுமா?

'வாட்டர் ரிலீசர்' பட்டாசு என்றால் என்ன? வெடித்தால் இது நீராக மாறுமா?

இதன் மூலம் பட்டாசில் உள்ள சல்ஃபர் மற்றும் நைட்ரஜன் வாயுக்கள் நீரில் கரைந்துவிடும். இந்த வகை பட்டாசுக்கு NEERI 'வாட்டர் ரிலீசர்' என்று பெயரிட்டுள்ளது. நீரி இந்த வகை நீர் பட்டாசை உருவாக்க முக்கிய காரணம் ஒன்று உள்ளது, மாசை குறைக்கும் முக்கியமான காரணியாகத் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இதனால், நிறுவனம் இப்படி ஒரு விசித்திரமான முயற்சியை ஆராய்ச்சி செய்து வெற்றி அடைந்துள்ளது. இப்போது தெரிகிறதா இதை ஏன் பசுமை பட்டாசு என்று வகைப் படுத்துகிறார்களென்று.

அரோமா பட்டாசு என்றால் என்ன? இது என்ன செய்யும்?

அரோமா பட்டாசு என்றால் என்ன? இது என்ன செய்யும்?

இதேபோல், STAR பசுமை பட்டாசு என்ற புதிய வகை பட்டாசை நீரி உருவாகியுள்ளது. இது ஆக்சிஜன் ஏஜென்ட் கொண்ட பொருட்களுடன் மாசு குறைவாக ஏற்படுத்தும் பட்டாசாக வருகிறது. அதேபோல், SAFAL என்ற பட்டாசில் 50% முதல் 60% சதவிகிதத்திற்கும் குறைவான அலுமினியம் பயன்படுத்தப்படுகிறது. இறுதியாக அரோமா பட்டாசு என்ற வகையை நீரி உருவாகியுள்ளது. இந்த பட்டாசுகள் வெடிக்கும் போது தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் குறைவாக வெளியேற்றுகிறது. முக்கியமாக இதன் பெயர் குறிப்பிடுவது போல வெடித்த பின்னர் இது ஒரு வகை நறுமணத்தை வெளிப்படுத்துகிறது.

இந்தியாவில் OnePlus 9RT இந்த விலையில் தான் அறிமுகமா? டிப்ஸ்டர் வெளியிட்ட தகவல்..இந்தியாவில் OnePlus 9RT இந்த விலையில் தான் அறிமுகமா? டிப்ஸ்டர் வெளியிட்ட தகவல்..

இந்த பசுமை பட்டாசுகளை எங்கு நாங்கள் வாங்கலாம்?

இந்த பசுமை பட்டாசுகளை எங்கு நாங்கள் வாங்கலாம்?

சரி, இந்த விஷயமெல்லாம் கேட்கப் பிரமாதமாக இருக்கிறது, இப்போது இந்த பசுமை பட்டாசுகளை எங்கு நாங்கள் வாங்கலாம் என்ற கேள்வி உங்களுக்கு எழுந்திருக்கும். உண்மையைச் சொல்லப்போனால் நீரியின் பசுமை பட்டாசுகள் தற்போது இந்தியச் சந்தையில் கிடைக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. காரணம், 'நீரி' இந்த பசு வகைகளை இப்போது தான் கண்டுபிடித்துள்ளது. இதற்குப் பின்னர், இதை நீரி உருவாக்கி, இதன் தரம் மற்றும் மாசு குறைப்பு போன்ற அம்சங்களை அரசிடம் நிரூபித்து சான்றிதழ் பெற வேண்டும். இதற்குப் பின்னர் தான் இது விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என்பதே தற்போதைய சூழ்நிலை.

பசுமை பட்டாசை பயன்படுத்தும் முதல் நாடாக இந்தியாவாக இருக்குமா?

பசுமை பட்டாசை பயன்படுத்தும் முதல் நாடாக இந்தியாவாக இருக்குமா?

என்ன தான் இது நீரியின் கண்டுபிடிப்பாக இருந்தாலும், இந்த வகை பட்டாசுகளை உருவாக்கி சந்தைப்படுத்த நிச்சயம் பட்டாசு உற்பத்தியாளர்களின் முக்கிய பங்கு தேவைப்படும் என்பது தெளிவாகத் தெரிகிறது. பசுமை பட்டாசுகளுக்கான தயாரிப்பு சான்றிதழ் கிடைத்த பின்னர், நீரி அனைத்து பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு பசுமை பட்டாசு தயாரிக்கும் முறையை கற்றுத் தரவேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதும் தெரிகிறது. இந்த முயற்சி வெற்றிபெற்றால் இந்தியா தான் பசுமை பட்டாசு பயன்படுத்திய முதல் உலக நாடாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
What Are Green Crackers And How Do You Identify A Green Crackers In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X