Home
News

Aadhaar, பான் கார்டு இருக்கா.. டிசம்பர் முதல் மாறப்போகும் முக்கிய விஷயங்கள்.. மிஸ் பண்ணாதீங்க..

இந்த டிசம்பர் மாதத்தில் ஆதார் (Aadhaar) மற்றும் பான் (pan) கார்டுகளில் பல மாற்றங்கள் வர இருக்கிறது. குறிப்பாக இலவசமாக ஆதார் அப்டேட் செய்ய இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. இப்போது இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பான் கார்டு (pan card): அதாவது வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதார் கார்டை (Aadhaar Card) பான் கார்டுடன் (pan card) இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் மூலம் உங்கள் பான் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பொருளாதார நடவடிக்கைகள் சோதனை செய்யப்படும், அதன்பின்பு வருமான வரி விவரங்கள் சோதனை செய்யப்படும், இதுதவிர உங்கள் பான் கார்டு வைத்துச் செய்யப்படும் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும்.

Aadhaar, பான் கார்டு.. டிசம்பர் முதல் மாறப்போகும் முக்கிய விஷயங்கள்..

சுருக்கமாக கூறவேண்டும் என்றால், ஆதாருடன் இணைக்கப்பட்டு உள்ளதால் பான் தகவல்கள் கூடுதல் பாதுகாப்பு உடன் இருக்கும். எனவே ஃபின்டெக் நிறுவனங்கள் உங்களைத் தொடர்பு கொள்ள முடியாது. ஒருவேளை ஃபின் டெக் நிறுவனங்கள் முறையாக உங்களிடம் வாங்கிய டேட்டா மூலம் தொடர்ந்து கால் செய்யலாம். அதேசமயம் உங்கள் பான் விவரங்களை அவர்கள் வேறு வழியில் வாங்கி இருந்தால் அதைப் பயன்படுத்தி தொடர்பு கொள்ள முடியாது.

அதேபோல் இதுவரை, 11.48 கோடி நிரந்தரக் கணக்கு பான் எண்கள் இன்னும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்று நிதித்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் பதிலளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்கவில்லை என்றால் டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு பான் செயல் இழக்கும் என்று கூறப்படுகிறது.

எனவே இப்போதே வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலுக்கு (Income Tax e-filing portal) சென்று தேவையான விவரங்களைக் கொடுத்து ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்க வேண்டும்.

ஆதார் கார்டு (aadhaar card): பலர் 10 வருட முந்தைய பழைய ஆதார் அட்டையை வைத்திருப்பார்கள். இந்த பழைய ஆதார் கார்டினை அப்டேட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆதார் அட்டையில் உங்களது தகவல்கள் அனைத்தும் தற்போதைய அப்டேட்டுகளாக இருக்க வேண்டும். இதற்காகத் தான் உங்கள் தகவல்களைப் புதுப்பித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Aadhaar, பான் கார்டு.. டிசம்பர் முதல் மாறப்போகும் முக்கிய விஷயங்கள்..

குறிப்பாக ஆதார் அட்டைகளில் எந்தவிதமான பிழைகளும் இருக்கக்கூடாது. ஒருவேளை ஆதாரில் பிழைகள் இருந்தால் நமக்கு கிடைக்க வேண்டிய அரசின் சில சலுகைகள் மற்றும் உதவிகளைப் பெற முடியாது. எனவே ஆதாரில் பிழைகள் இருந்தால் உடனே சரி செய்ய வேண்டும். குறிப்பாக 10 வருடங்கள் பழமையான ஆதார் கார்டைப் புதுப்பிக்க வேண்டும் என்றால், எந்த கட்டனமும் செலுத்த வேண்டியதில்லை என்பதை நினைவில் கொள்க. அதாவது தற்போது இதற்கான காலக்கெடு டிசம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதுவும் ஆதார் அட்டையில் வரும் டிசம்பர் 14ஆம் தேதிக்குள் பெயர், முகவரி மற்றும் பிற தகவல்களை அப்டேட் செய்ய விரும்பினால் செலவின்றி செய்யலாம். ஆனால் டிசம்பர் 14 தேதிக்குப் பிறகு ஆதார் விவரங்களை அப்டேட் செய்வதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும். குறிப்பாக ஆதார் இணையதளமான uidai.gov.in என்ற தளத்திற்குச் சென்று தேவையான விவரங்களைக் கொடுத்து ஆதார் அப்டேட் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
What Are changes should be made in Aadhaar Card PAN Card in December: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X